கட்டளையின் உறுதிபாடு Tempe, Arizona, USA 62-0122 1நீங்கள் உட்காரலாம். அது, ஒரு சாட்சியை நான் கவனித்துக் கொண்டிருக்கையில் கூட்டத்தை கவனிக்க மறக்கின்ற அளவிற்கு மிகவுமாக அந்த சாட்சியில் மெய்மறந்து போனேன். இன்று இரவு கர்த்தருடைய பணியில் இருப்பதற்காகவும் சகோதரன். ஓ.டான்னல் அவர்களையும் சந்திப்பதற்காகவும் மிகவும் மகிழ்ச்சி கொள்கிறேன். செவிடர்க்கும், ஊமையர்க்கும் அந்த அடையாளங்களை அளித்ததை நான் கவனித்துக்கொண்டிருந்தேன். கடந்த இரவு சக்கர நாற்காலியில் இருந்த அந்த பெண்ணிற்கு அவ்வளவு பெரிதான புற்றுநோய் அவள் மீது இருந்ததாகவும், அவள் சக்கரநாற்காலியிலிருந்து எழுந்து நிற்கும்படியாக அவள் மிக அற்புதமாக சுகமளிக்கப்பட்டாள் என்றும் புற்றுநோய் அவளைவிட்டு சென்றுவிட்டது என்றும் அப்போது அவள் ஒரு மகத்தான தருணத்தை அனுபவித்துக் கொண்டிருந்தாள் என்றும் சகோதரன் என்னிடமாகக் கூறிக் கொண்டிருந்தார். அதற்காக நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கின்றேன். இன்று இரவு இங்கே இருப்பதற்காகவும் சகோதரன் ஓ.டான்னல் மற்றும் இந்த அருமையான ஜனக்கூட்டத்தினிடம் வந்திருப்பது அருமையானது ஒன்றாகும். 2இது டெம்பீயா அல்லது மெசவா (ஒரு சகோதரன் டெம்பீ என்கிறார்: ஆசி) டெம்பீ. டெம்பீ. முப்பத்தைந்து வருடங்கள் கழித்து இப்பொழுது வந்துள்ளேன். இப்பொழுது இடம் கூட தெரியாத அளவிற்கு இந்த பிரதேசமானது சுற்றிலுமாக வளர்ந்து விட்டது. கர்த்தருடைய வீட்டில் இருப்பது மிகவும் அருமையான ஒன்றாகும். நான் உள்ளே வந்துக்கொண்டிருக்கையில் - ஒரு - ஒரு - அருமையான சிறுபெண் நின்றுக்கொண்டிருந்தாள். அவள் ஒரு சிறிய ஓ-டான்னல் ஆவாள். ஆகவே - ஆகவே அந்த சிறிய பெண்பிள்ளைகள் வாசலில் என்னிடமாக பேசிக் கொண்டிருந்தன. அப்பொழுது - அப்பொழுது - நான், “இன்றிரவு மிகவுமாக குளிரினால் உறைய போகின்றது என்று என்னிடமாக அவர்கள் கூறுகின்றனர்,” என்றேன். நான், “தெற்கு பகுதியை சேர்ந்த நீங்கள் இங்கே பனியினால் உறைந்து போய்விடுகிறீர்கள்.” என்றேன். அப்பொழுது அந்த சிறுபெண் மற்றொருவனை நோக்கிப் பார்த்து, ஆம் அவள் ஐயோவா இடத்தை சார்ந்தவள். என்றாள், மற்றொருவள் தான் மீன்னோசோட்டாவிலிருந்து வருகிறேன் என்றாள். அப்பொழுது நான் கூறினேன் .... அதற்கு முன்னர் நான் “நான் வீட்டை விட்டு புறப்பட்டபோது சீதோஷ்ணம் பூஜ்ஜியத்திற்குக் கீழே பதினான்காக இருந்தது என்றேன். ஐயோவா அல்லது மின்னோசோட்டாவில் இருந்து வந்திருந்த சிறு பெண் அவர் வீட்டை விட்டபொழுது பூஜ்ஜியத்திற்குக் கீழே ஐம்பத் திரண்டாக இருந்தது என்று கூறினாள். பாக்கப்போனால் நானுமி தெற்கு பகுதியைச் சேர்ந்தவன். பூஜ்ஜியத்திற்குக் கீழே ஐம்பத்திரண்டு. அப்படிப்பட்ட ஒரு சீதோஷ்ணம் நாங்கள் வாழும் இடத்தில் வருமானால் நாங்கள் உறைந்து போய்விடுவோம். பூஜ்ஜியத்திற்குக் கீழே ஐம்பத்திரண்டு, அது மிகவும் அதிக குளிர் அல்லவா? 3இங்கே இன்றிரவு வியாபாரிகள் சங்க கன்வென்ஷனுக்கு முன்னர் இந்த ஐக்கியத்தின் நேரத்தில் உங்களிடம் இருப்பது மிகவும் மகத்தான சிலாக்கியம். அந்த கன்வென்ஷன் வருகின்ற வியாழக்கிழமை ரமாடாவில் ஆரம்பிக்கின்றது. அது இஸ்ட்வான் பூரன் தெருவில் உள்ள இடமாகும். நீங்கள் வரும்படிக்கு உங்களுக்கு அழைப்பு விடுக்கின்றோம். அங்கே கன்வென்ஷனில் சில அருமையான பிரசங்கிகள் பேசவிருக்கின்றார்கள். அதிலெனக்கு தெரிந்தவரை சகோதரன் வெல்மர் கார்ட்னர் பேச்சாளர்களில் ஒருவர் மேலும் சில வியாபாரிகளையும் பேசும்படிக்கு அவர்கள் அழைத்திருக் கின்றார்கள் என்று நான் நினைக்கின்றேன். அவர்களின் ஜிம் பிரவுனும் ஒருவர் என்று நான் நம்புகிறேன். மேலும் டாக்டர் ரீட், ஆம் சகோதரன் ரோஸ் எப்பொழுதுமே அங்கே இருக்கின்றார், டெக்ஸாசிலிருந்து சகோதரன் ஆஸ்டினும் கூட இருக்கின்றனர். நீங்கள் அங்கே வரும்போது ஒரு மகத்தான நேரத்தைக் கொண்டிருப்பீர்கள் என்று நான் நிச்சயமாகக் கூறுகின்றேன். இந்த கன்வென்ஷன் கூட்டத்திற்காக நாங்கள் காத்துக் கொண்டிருக்கையில் நாங்கள் உண்மையாகவே புளங்காகித உணர்ச்சி கொள்கிறோம். ஆகவே நினைவில் கொள்ளுங்கள் அது நடக்கவிருக்கின்றது. எல்லோரும் வரவேண்டும் என்று அழைக்கப்படுகிறீர்கள். ஆகவே அது கர்த்தருடைய சித்தமாக இருக்கும் என்றால் எனக்கு சிறிதுநேரமானது ஒதுக்கிவைக்கப்பட்டுள்ளது. ஆகவே அவர்கள் என்னை மறுபடியுமாக சனிக்கிழமை காலை ஆகாரக் கூட்டத்திலும் மற்றும் ஞாயிறு மதியக் கூட்டத்திலும் பேச எனக்கு ஏற்பாடு செய்திருக்கிறார்கள் என்று நான் நினைக் கின்றேன். அது கர்த்தருக்கு சித்தமானால்தான். ஆகவே அந்த மகத்தான மனிதரோடு நான் நின்று கர்த்தருக்காக, கர்த்தருக் கென்று நான் சாட்சி கூறுவது மகத்தான சிலாக்கியமாக நான் கருதுகிறேன். 4தேவன் சகோதரன் ஓ.டான்னலையும் மற்றும் கர்த்தர் பேரில் காத்திருந்து இங்கே சஞ்சரித்துக் கொண்டிருக்கும் இந்த அருமையான கிறிஸ்துவ மக்களையும் ஆசீர்வதிக்கும்படி நான் ஜெபிக்கின்றேன். ஆம் நாம் உண்மையாக தற்காலிகமாக தங்கு கின்றவர்களாவோம். நான் அந்நியரும் பரதேசிகளுமாய் இருக்கிறோம். இது நம்முடைய வீடு அல்ல. “நாம் தேவன்தாமே கட்டி உண்டாக்கின நகரத்துக்கு நாம் காத்திருக்கிறோம்.''ஆகவே நாம் பிரயாணத்திற்கு இடையில் தங்கிக் கொண்டிருக்கிறவர்கள் ஆவோம். நாம் ..... இது நம்முடைய வீடு அல்ல. நாம் இந்த வழியாகக் கடந்து சென்றுக்கொண்டிருக்கிறோம். அவ்வளவு தான். ஆகவே அது ஒரு மகத்தான சிலாக்கியத்தை அளிக்கிது. சகோதரனே நான் இதை இந்தவிதமாக வைக்கலாமா? (சகோதரன் பிரன்ஹாம் ஒலிபெருக்கியை தக்கவாறு அமைத்துக் கொள்கிறார். - ஆசி). அது ஒரு மகத்தான சிலாக்கியத்தை அளிக்கின்றது. இப்பொழுது சரியாக கேட்கின்றதா? - அஹ் - அஹ் 5இந்த நேரத்தில் இங்கே அருமையான கிறிஸ்தவர்களாகிய உங்களுடன் ஐக்கியம் கொள்ள இருப்பதானது ஒரு மகத்தான சிலாக்கியம் ஆகும். கன்வென்ஷன் கூட்டத்திற்கு முன்னால் சபைகள் கொண்டிருந்த இந்த பலதரப்பட்ட மக்களுடன் நான் பேச எனக்கு அளிக்கப்பட்ட சிலாக்கியத்தைக் குறித்து நான் நினைத்துப் பார்க்கையில், ................... (lo be translated) மேலும், இங்கே நாம் ஆராதனையை நடத்தின ஃபெல்லொஷிப் கூடாரத்தில் நான் கடந்த இரவில் மேற்கோள் காட்டினது போலத்தான்: ஒரு வயதான நண்பர் எனக்கு இருந்தார், சகோதரன் பாஸ்வர்த், உங்களில் அநேகர் சகோதரன் பாஸ்வர்த்தை நினைவில் கொண்டிருப்பீர்கள். அவர் என்னிடமாகக் கூறுவது வழக்கம், அவர், “சகோதரன் பிரன்ஹாம், ஃபெல்லோஷிப் (Fellowship) ஐக்கியம் என்றால் என்ன என்று உங்களுக்குத் தெரியுமா?” என்றார். அதற்கு நான், “தெரியும் என்று நினைக்கிறேன் சகோதரன் பாஸ்வர்த்” என்றேன். 6அவர், “அது ஒரு கப்பலில் (ship) இரண்டு நபர்கள் (Fellow)” என்றார். அப்படித்தான். ஆம், அவருக்கு நகைச்சுவை உணர்வு கொண்டவராவார். “ஒரு கப்பலில் இரண்டு நபர்கள், அதை நான் எப்பொழுதுமே விரும்புவேன். ஆகவே, எப்பொழுதுமே, மற்றொரு நபருக்கு உதவும்படிக்கு உள்ளடக்கத்தின் துப்பட்டியானது எப்பொழுதுமே சற்று நீளும்., அதை நீங்கள் அறிவீர்கள், அது மிகவும் அருமை யானதாகும். 7இப்பொழுது, நீங்கள் எனக்காக ஜெபிப்பீர்கள் என்று நிச்சயமாக நான் நம்புகிறேன். ஆகவே நான், இன்று, யாருக்காவது ஜெபம் தேவைப்படுகிறதா என்று பார்க்கும் படிக்கு என் மகனை சற்று முன்னர் நான் அனுப்பினேன். சுகமளிக்கும் ஆராதனைகள் நடத்த நான் இங்கே வரவில்லை. ஓ, சற்று பேசும்படிக்குத்தான் நான் இங்கே வந்துள்ளேன். நான் பேசுவதை கேட்டிருக்கும் எந்த ஒரு நபரும் நான் ஒரு பிரசங்கி அல்ல என்பதை அறிவர். எனக்குக் கல்வி அறிவு கிடையாது, என்னால் பிரசங்கிக்க முடியாது. ஆனால் நான் - நான் வியாதியஸ்தருக்கு ஜெபிப்பது வழக்கம். மேலும் - மேலும் மக்கள் ஜெபித்துக்கொள்ளும்படிக்கு கூட்டமாக வந்து நிற்பது வழக்கம். ஆம், வியாதியுள்ள மக்கள் அநேகம் பேர் இருக்கின்றார்கள். ஆனால் ஞாயிற்றுக்கிழமையன்று அதைக் குறித்து எதையுமே நான் குறிப்பிடவில்லை. ஏனென்றால் ஞாயிறன்று நான் இருக்கப்போகின்ற இந்தக் குறிப்பிட்ட சபைகளுக்கு வந்து ஜெபித்துக்கொள்ளும்படிக்கு மற்ற சபைகளிலுள்ள மக்களை நான் அழைப்பேனானால், அது மற்றைய சபைகளில் சிலவற்றுக்கு அது 8இப்பொழுது, இங்கே வியாதியஸ்தருக்காக நாங்கள் ஜெபம் செய்வோம் என்று நான் கடந்த இரவு அறிவித்தேன். ஆகவே தேவனுக்கு சித்தமானால், ஒருக்கால் நாளை இரவோ அல்லது அடுத்த இரவிலோ மறுபடியுமாக வியாதியஸ்தருக்காக நாங்கள் ஜெபிப்போம். அது அருமையானதாக இருக்கும் என்று நான் நம்புகிறேன், இன்றிரவு இங்கே வியாதிப்பட்டுள்ள ஒவ்வொருவரையும் கர்த்தர் சுகப்படுத்துவார் என்பதும் அருமையான ஒன்றாகும் என நம்புகிறேன். மேலும், என் அருமையான நண்பனே நான் உனக்குச் சொல்லுகிறதாவது, இந்த எல்லா காரியங்களைக் காட்டிலும் பாவ - வியாதியால் பீடிக்கப்பட்டவர்கள் இன்றிரவு சுகமாக்கப் படுவார்கள் என்று நான் நம்புகிறேன். பாருங்கள்? கர்த்தர் உங்கள் வியாதியிலிருந்து உங்களை சுகமாக்குவாரானால், நீங்கள் ஒருக்கால், எவ்வளவு காலமாக வாழ்ந்தாலும் நீங்கள் மறுபடியுமாக வியாதிப்பட வாய்ப்புண்டு. பாருங்கள்? ஆனால் நாம் தேடிக்கொண்டிருப்பது என்னவென்றால் நித்திய ஜீவனையே ஆகும். அது சரி, ஏனென்றால் அது தான் - அது தான் உண்மையான குணமடைதல் ஆகும். ஆகவே இங்கே கிறிஸ்துவுக்குள்ளாக விசுவாசியாக இல்லாதவர் இருப்பாராயின், இன்றிரவு தாமே ஒரு விசுவாசியாக ஆவார் என நான் நம்புகிறேன். 9ஆகவே நீங்கள் இங்கே இருந்து மறுபடியும் பிறவாதவர் களாக இருப்பீர்களானால் அல்லது பரிசுத்த ஆவியைப் பெறாதவர்களாக இருப்பீர்களானால், பரிசுத்த ஆவியால் நிரப்பப்படாதவர்களாக இருப்பீர்களானால், இந்த இன்றிரவிலே தானே அது சம்பவிக்குவம் என்று நான் நம்புகிறேன். நீங்கள் ஒரு பின்மாற்றமடைந்தவராயிருப்பீர்களானால், கர்த்தராகிய இயேசு தாமே இன்றிரவில் உங்கள் இருதயத்தில் அன்பு நிறைகின்ற வகையில் தத்ரூபமான காரியத்தை செய்வார் என நான் நம்புகிறேன். அதினாலே நீங்கள் அவருடைய ஐக்கியத்திற்கு மறுபடியுமாக வரும்படியாக ஏதுவாக இருக்கும். ஏனெனில், அவர் தம்முடைய கரங்களை நீட்டியவாறே காத்துக் கொண்டிருக்கின்றார், காத்திருக்கின்றார். 10சில வருடங்களுக்கு முன்னர் அங்கே ஆஞ்சலாஸ் டெம்பிளில் பெந்தெகொஸ்தே யூபிலியை, ஐம்பதாவது யூபிலியை அவர்கள் நடத்தினபோது, ஒரு முறை நான் அங்கே ஒரு சிறிய பிரசங்கம் செய்தேன். முதலாம் இரவில் நான் பரிசுத்தத்தின் பேரில் பிரசங்கித்ததை நான் நினைவுகூருகிறேன். அதின் பேரில் எனக்கு விசுவாசம் உண்டு. அவ்விதமாகச் செய்ய நான் முனையவில்லை , ஆனால், உங்களுக்குத் தெரியும், மக்கள் மூல பெந்தெகொஸ்தேயிலிருந்து எப்படியாக விலகிச் சென்று விட்டனர் என்பதைக் குறித்து நான் மக்களை கடிந்து கொண்டிருந்தேன். முதலாவது ஆரம்பத்தில், பரிசுத்த ஆவி இறங்கினபோது, அந்த மக்கள் எவ்விதமாக ஜீவித்தனர், ஐம்பது வருடங்களுக்கு முன்னர் எப்படியாக இருந்தனர்! 11நான், “ஓ, நாம் மிக நீண்ட தூரம் வந்து விட்டோம். அதற்குப் பிறகு நாம் பெரிய ஸ்தாபனங்களை கொண்டிருக் கின்றோம், பெரிய அருமையான கட்டங்கள், மிகவுமாக பயிற்சியினால் மெருகேற்றப்பட்ட பிரசங்கிகளைக் கொண்டி ருக்கின்றோம். அப்போது நாம் கொண்டிருந்த அதே பெந்தெகொஸ்தே ஆசீர்வாதங்களை இன்னுமாகக் கொண் டிருக்கின்றோமா என்று தெரியவில்லையே?” என்று கூறினேன். பாருங்கள்? பாருங்கள்? மேலும் நான், “சபைக்கு வந்து நம்முடைய - நம்முடைய சகோதரிகளில் ஒருவராகிலும் குட்டை மயிரையோ அல்லது கை விரல் நக (பாலீஷ்) ஒப்பனையையோ அல்லது அதைப்போன்ற ஒன்றை அவர்கள் கொண்டிருந்தால் அது வெட்கக்கரமான ஒன்றாக அவர்களுக்கு இருப்பதுண்டு. ஆகவே அவர்கள் எங்கோ ஓரிடத்தில் வரம்பை மீறி காரியத்தில் தவறி தளர்ந்து விட்டனர்,” என்று கூறினேன். 12ஆகவே எனக்கு ஒரு நண்பர் இருந்தார், அவர் ஒரு பெந்தெகொஸ்தே சகோதரனும் கூட, உங்களில் அநேகர் அவரை அறிவீர்கள். அவர் பெயர் வில்லியம் பூத் க்ளிப்பார்ன் ஆகும். ஆம், உங்களில் அநேகருக்கு அவரைத் தெரியும். சகோதரன் பூத் என்னுடைய ஆத்ம நண்பர் ஆவார், போதகங்களின் பேரில் மாத்திரம் தான் நாங்கள் ஒத்துப்போவது கிடையாது. ஏனென்றால் அவர் மிகவும் கூர்மையான கால்வினிஸ சிந்தனையாளர் ஆவார், அவர் என்னைக் காட்டிலும் அதிகமாக சிந்திப்பவர் ஆவார். ஆனால் கால்வினிஸம் வேதாகமத்துடன் தரித்திருக்கும் வரைக்கும் மாத்திரம் தான் அதைக்குறித்து என்னால் சிந்திக்க முடியும் பாருங்கள்? ஆம், அது வேதாகமத்தை விட்டு வெளியே செல்லுமானால், அது என்னுடைய சிந்தனைக்கு அப்பாலே சென்றுவிடும்; அதற்கு மேலாக என்னால் அதைக்குறித்து சிந்திக்க முடியாது. 13ஆகவே பிரசங்க மேடையில் அவரை நான் கண்டேன். அவர் பிரசங்க மேடையிலிருந்து நடந்து கென்று அங்கே வெளியில் என்னை சந்தித்தார். என்னை நோக்கிப் பார்த்தார். அவர் “சே, சே, சே, சே, சே, உங்களுக்கு வெட்கம் உண்டாவதாக, சட்டம் சார்ந்த செய்தியைப் போல அது காணப்பட்டதே. அதைக் காட்டிலும் உங்களுக்கு அதிகம் தெரியுமல்லவா” என்றார். உங்களுக்குத் தெரியுமா, அவர் என்னை மிகவுமாக கடிந்துக்கொண்டார். அடுத்த நாள் நான் ஆட்டுக்குட்டியும் புறாவும் என்பதன் பேரில் பிரசங்கித்தேன். அப்பொழுது கர்த்தர் அந்த சிறிய சாதாரண செய்தியை மிகவுமாக ஆசீர்வதித்தார். பிறகு நான் வெளியே நடந்து சென்றபோது அவர் தன் கண்களில் கண்ணீரைத் துடைத்துக்கொண்டிருந்தார் என்று உங்களுக்குத் தெரியுமா. அவர், “அது அருமையாக இருந்தது. ஆனால் மிக எளிமையாக இருந்தது” என்றார். எளிமையாக இருந்தது! நான் கூறினேன் ..... அவர், “அது எல்லாம் சரியாக இருந்தது, ஆனால் மிக எளிமையாக இருந்தது'' என்றார். ஏழு மொழிகளில் பிரசங்கம் செய்யும் அளவிற்கு அவர் சாமார்த்தியசாலி என்று தெரியுமா, ஆகவே என்னுடைய சாதாரண கெண்டக்கி பேச்சானது அவருக்கு மிகவும் எளிமையான ஒன்றாக இருந்தது. மிகச்சிறந்த சீரிய முறையில் நடந்து கொண்டாலும் அவருடைய காரியத்துடன் ஒப்பிட்டுப்பார்க்கையில் ஒன்று மற்றதாக இருக்கும் என்பதில் வியப்பொன்றுமில்லை, உங்களுக்குப் புரிகின்றதா. ஆகவே நான் அந்த விதமாகத்தான் பேசவேண்டியவனாக இருக்கின்றேன்; எளிமையான விதத்தில் சுவிசேஷமானது எளிமையான ஒன்று என்று நான் விசுவாசிக்கின்றேன். வேதாகமம், “பேதையராயிருந்தாலும் திசைகெட்டு போகாத விதத்தில் அது மிக எளிமையாக இருக்கின்றது'' என்று கூறுகின்றது. பாருங்கள்? ஆகவே நீங்கள் எப்பொழுது நினைவில் கொள்ள வேண்டிய ABC மாத்திரமே. அது எதைக் காட்டுகின்றது என்று உங்களுக்குத் தெரியுமா? எப்பொழுதும் கிறிஸ்துவை விசுவாசி. நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் அது மாத்திரமே. அது காரியத்தை முற்றுப்பெறச் செய்கின்றது. ABCஐத் தெரிந்திருந்தால், என்னைப் பொறுத்தவரையில் நீங்கள் முழுவதுமாக கல்வியறிவு பெற்றுள்ளவர்களாக இருக்கின்றீர்கள். 14ஆகவே, இப்பொழுது, அங்கே மக்கள் நின்றுக் கொண்டிருக்கின்றேன், அதை நான் மெச்சுகிறேன், நான் பிரசங்கம் பண்ணுவதற்கு வரவில்லை , நான் வியாதியஸ்தருக் காக ஜெபிக்கப்போகின்றேன். ஆனால், ஒரு சிறிய அடித்தளத்தை அமைக்க வேதவாக்கியங்களில் பேரில் நான் சற்று பேச இருக்கின்றேன். முந்தைய காலைப்பொழுதில் சகோதரன் ஃபுல்லரின் சபையில் நான் முழுவதுமாக பிரசங்கித்து விட்டேன் என்று நான் நினைக்கின்றேன். அதை நான் லைஃப் கூடாரம் அல்லது ஏதோ ஒன்று என்று அழைத்தேன் (ஒரு சகோதரன் “ஃபெய்த் கூடாரம்” என்று கூறுகின்றார் - ஆசி] ஃபெய்த் கூடாரம், கூடந்த இரவு அங்கே தான் அதை நான் நடத்தினேன் என்று நினைக்கின்றேன். நான் சபைக்குக் செல்வதற்கு முன்னர், மேய்ப்பர் அல்லது யாரோ ஒருவர் என்னிடமாக, “இதோ பாருங்கள், இந்த மக்கள் இரவு உறங்க விரும்புகின்றனர்” என்று கூறப்படும்படிக்கு சொல்லி அனுப்பியிருந்தார். ஆகவே ஆறு அல்லது எட்டு மணி நேரம் பிரசங்கம் செய்வது மிக அரிது, அதற்கு மேலாக நான் பேசுவது கிடையாது. ஆகவே முந்தைய இரவில் சகோதரன் அவுட்லாவின் சபையில் இருந்தபோது, அவர் என்னை ஏறக்குறைய பிரசங்க பீடத்திலிருந்து இழுத்துவிடுவார் போலும் என்று நான் நினைத்தேன். ஆகவே நீங்ள் எல்லோரும் வெகுதூரம் பிரயாணித்து இங்கே வந்திருப்பதால் இங்கே இன்றிரவு சிறிது சாதாரணமாக பேசலாம் என்றிருக்கிறேன். 15இப்பொழுது, இங்கே இருப்பதென்பது அருமையான ஒன்றாகும். இப்பொழுது நாம் வார்த்தையை அணுகும் முன்னர் அதன் ஆக்கியோனிடமாக பேசுவரோம். சிறிது காலத்திற்கு முன்னர் நான் ஃபோர்ட் வெயின் காஸ்பல் கூடாரத்தில், பி.இ. ரெடிகரின் இருந்தபோது ஒருவர் என்னிடமாகக் கூறினார். ரெடிகர் ஒரு தேவனுடைய மகத்தான மனிதன் ஆவார், அநேக வருடங்களுக்கு முன்னர் அவர் மரித்தார், கர்த்தர் உண்மையாகவே அந்த சகோதரனை மிகவுமாக ஆசீர்வதித்திருந்தார். அவர் விசுவாசத்தின் மகத்தான மனிதனாயிருந்தார். நான் ஒரு சிறு பையனமாக இருந்தேன். அங்கே பால் ரேடாருடன் அங்கே உட்காருவது வழக்கம், ஒரு வாலிப ஊழியக்காரனாக இருந்தேன் அவ்வளவு தான். அப்பொழுது சகோதரன் ரெடிகரின் மகளுக்கு மன நலம் பாதிக்கப்பட்டு மனநலம் குன்றிப்போய்விட்டது. ஒரு நாளிலே அவள் அங்கே உள்ள என்னுடைய நிலக்கரி கொட்டகையிலே, ஒரு ஈஸ்டர் காலையன்று வந்தாள். அப்பொழுது அவர்கள் என்னிடமாக, “யாரோ ஒரு பைத்தியம் பிடித்த பெண் அங்கே சபையின் பின்புறத்தில் இருக்கின்றாள்” என்று கூறினார்கள். நான் அப்பொழுது தான் ஒரு கூட்டத் தொடரை முடித்து வந்திருந்தேன். நான் அங்கே சென்று பார்த்தேன். அப்பொழுது அவர் பி. இ. ரெடிகரின் மகள் என்று கண்டு கொண்டேன், சகோதரி டிெகரும் அங்கே உட்கார்ந்து கொண்டிருந்தார்கள். என் இருதயம் ஏறக்குறைய நின்று விடும் அளவிற்கு ஆனது. அப்பொழுது அவள் அங்கே நின்று கொண்டிருந்தாள். அவளுடைய அழகிய நீண்ட தலை மயிரை தன்னுடைய விரல்களால் வருடிக்கொண்டு, “ஒரு நிக்கல் நிக்கல் தான். ஒரு காசு காசு தான்” கூச்சலிட்டுக்கொண்டிருந்தாள். அழகான வாலிபப் பெண்ணாயிருந்தாள். நான் ....... அங்கேயே முழங்கால்படியிட்டு “கர்த்தராகிய இயேசுவே அவள் மீது இரக்கமாயிரும்” என்று கூறினேன். அவ்வளவு தான். இப்பொழுது அவளுக்கு திருமணமாகி இரண்டு அல்லது மூன்று பிள்ளைகள் உள்ளனர், அருமையாக இருக்கின்றாள். பாருங்கள்? அவ்வளவாக கிருபையும் மற்றும் எளிமையும். 16நாமோ-நாமோ ஏதோ ஒரு வழியைக் கண்டறிந்து அவருக்கு மேலாக சென்றடைய விழைகின்றோம், உத்தமமாக நம்மிடமாக நெருங்கி இருக்கின்ற சரியான அது என்ன என்று காண முயற்சித்துக்கொண்டிருக்கின்றோம். நாம், எளிமையாக இருந்து, விசுவாசிக்க மாத்திரம் செய்ய வேண்டும்; விசுவாசத்தைக் கொண்டிருக்க வேண்டும்; சந்தேகப்படக் கூடாது. அங்கே ஒரு கூட்டத்தை நான் நடத்திக் கொண் டிருந்தேன். இப்பொழுது கூடாரத்திற்கு பொறுப்பு வகிக்கும் அந்த பெந்தெகொஸ்தே சகோதரனை எனக்கு மறந்து விட்டது. அப்பொழுது நான் அங்கே ஒரு கூட்டத்தை நடத்திக் கொண்டிருந்தேன். பால் ரேடாரினால் எழுதப்பட்ட நம்பிடுவாய் ( Only Believe) என்கின்ற இந்த பாடல் அங்கே இருந்தது. அவர் ஒரு மகத்தான கிறிஸ்தவனும் இந்த நாளுக்கான மகத்தான செய்தியாளனாக அவர் இருந்தார். நான் அந்த சிறிய படிக்கும் அறையில் உட்கார்ந்து கொண்டிருந்தேன். அப்பொழுது அவர்கள் பாடிக்கொண்டிருந்தனர், நான் பிசரங்க் மேடைக்கு வரும்படிக்கு காத்திருந்து பாடிக்கொண்டி ருந்தனர்; உலகம் முழுவதிலிருந்தும் அவர் அதைக் கொண்டிருந்தனர். ஆகவே நான் - நான் அங்கே உட்கார்ந்துக் கொண்டிருந்தேன், சரியாக அங்கே அந்த இடத்திலே வேதத்தை ஆராய்ந்து கொண்டிருந்த போது தான் பாலுக்கு அந்த பாடலை எழுதும்படியான ஊக்குவித்தலானது வந்தது. அப்பொழுது அது நம்பிடுவாய் என்ற பாடலாக எழுதப் பட்டது. ஓ, அது என் இருதயத்தை கொழுந்து விட்டு எரியச் செய்தது. 17ஆராதனை முடிந்த பிறகு, நம்முடைய கர்த்தராகிய இயேசு கூட்டத்தில் செய்த அநேக மகத்தான காரியங்கள் உண்டு. நான் திரும்பவுமாக அங்கே சென்றேன், அந்த இடத்தின் பக்கத்திலே சென்று காத்துக்கொண்டிருந்தேன். அப்பொழுது அங்கே ஒரு மனிதன் வந்தார். அவர், “திரு.பிரன்ஹாம்” என்றார். அதற்கு நான், “ஆம் ஐயா” என்றேன். அவர், “நீங்கள் பேசுவதை கேட்க விருப்பம் தான், ஆனால் உங்கள் பேச்சு, சொல் இலக்கணம் மிக மோசமாக உள்ளது'' என்றார். நான், “ஆம், ஐயா, அதை நான் அறிவேன்” என்று கூறினேன். அவர், “நீங்கள் பேசும் போது வெறுப்படைகின்ற விதத்தில் கூறுகின்றீர்கள்” என்றார். அதற்கு நான், 'ஆம் ஐயா, அப்படித்தான்“ என்றேன். மேலும் நான், ”கல்வி கற்க எனக்கு வாய்ப்பு கிடைக்க வில்லை. பத்து பேர் கொண்ட குடும்பத்தில் நான் வளர்க்கப் பட்டேன். ஏழை பெற்றோர்கள், ஆகவே குடும்பத்தை கவனித்துக் கொள்ள இளம் வயதிலே நான் வேலைக்குச் செல்ல வேண்டியதாயிற்று. அடிப்படைக் கல்வி கூட என்னால் கற்க முடியவில்லை “ என்றேன். அதற்கு அவர், “அது ஒரு சாக்குப்போக்கே அல்ல. நீங்கள் ஒரு வளர்ந்த மனிதன் ஆவீர்” என்றார். நான், “ஆம், இப்பொழுது நான் கர்த்தருடைய பணியில் மிகவுமாக முழுவதுமாக ஈடுபட்டுள்ளேன். அதற்கு எனக்கு நேரம் இல்லை” என்றேன். அதற்கு அவர், “உங்களால் இன்னுமாக தொலை தூரக் கல்வி பயிற்சி பெறலாமே” என்றார். மேலும் அவர், “இதோ உதாரணத்திற்கு, இன்றிரவு நீங்கள் ”இந்த பிரசங்க பீடத்தின் மேல் கடந்து செல்லும் மக்களாகிய நீங்கள்“ (passing over the pulpit) என்று கூறினீர்களே” என்றார். அதற்கு நான், “அப்படியா? என்றேன். எனக்கு எந்த வித வித்தியாசமும் தெரியவில்லை. நான், ”அப்படித்தானே அது கூறப்பட வேண்டும்?“ என்றேன். அவர், “நிச்சயமாக அப்படி அல்ல. நீங்கள் பிரசங்க பீடம்' என்று கூறியிருக்க வேண்டும்” என்றார். நான் கூறினேன் .... அவர், “நீங்கள் ....” என்றார். அதற்கு நான், “அப்படியா, சரி,” என்றேன். நான் ஏதோ ஒன்றை தவளாக உச்சரித்தோ அல்லது ஒன்றைக் கூறினதைக் குறித்து அவர் கூறினார். அவர், “உம், உங்களுக்கு வேதாகமம் கூட தெரியவில்லை ” என்றார். நான், “ நல்லது, அப்படியாக - அப்படியாக இருக்கலாம், ஆனால் அதன் ஆக்கியோனை நன்றாக அறிவேன். அது தான்” என்றேன். உங்களுக்குத் தெரியும், அது “அந்த புஸ்தகத்தை அறிவதே” என்று கூறுவதில்லை. ஆனால், “அவரை அறிவதே ஜீவன்” என்று கூறுகின்றது. சாத்தான் அவருடைய வார்த்தையை அறிந்திருக்கின்றான். ஆனால், “வார்த்தையின் ஆக்கியோ னாகிய அவரை அறிவதே,” பாருங்கள். 18நம்முடைய தாழ்மையான வழியிலே அவருடனே நாம் பேசுகையில் நம்முடைய தலைகளை சற்று தாழ்த்துவோமாக. இப்பொழுது, நம்முடைய தலைகள் தாழ்த்தப்பட்டிருக் கையில், அதனுடன் கூட நம்முடைய இருதயங்களும் தாழ்த்தப்பட்டிருக்கையில், நான் நினைவு கூரும்படிக்கு ஏதாவது விசேஷ விண்ணப்பம் உங்களிடம் இருக்கிறதா? தேவனை நோக்கி உங்கள் கரத்தை உயர்த்துங்கள். உங்களுடைய இருதயத்தை உங்கள் இருதயத்தில் வைத்து, “கர்த்தாவே, எனக்கு இரட்சிப்பு தேவையாயிருக்கிறது. எனக்கு வியாதியிலிருந்து சுகம் தேவைப்படுகின்றது. எனக்கு - எனக்கு ஒன்று தேவைப்படுகின்றது என்று மாத்திரம் கூறுங்கள். தேவன் அதை புரிந்து கொள்வார். 19எங்கள் பரலோகப் பிதாவே, நாங்கள் உம்முடைய பரிசுத்த சமூகத்தை கர்த்தராகிய இயேசுவின் நாமத்தில் இன்றிரவு அணுகுகையில், அவருடைய நாமத்தில் நாங்கள் வருகின்றோம், ஏனென்றால் நீர் தாமே, “என் நாமத்தினாலே நீங்கள் பிதாவிடம் எதைக்கேட்டாலும் அதை நான் செய்வேன்' என்று கூறியுள்ளீர். இப்பொழுது, எங்கள் சொந்த நாமத்தி னாலே எங்களால் வரமுடியாது என்பதை அறிந்திருக் கின்றோம். எங்கள் சபையின் பேராலே எங்களால் வர முடியாது, எங்கள் மேய்ப்பரின் நாமத்தினால், அல்லது எங்கள் ஸ்தாபனத்தின் நாமத்தினாலே வந்து நாங்கள் கூறுவது கேட்கப்படும் என்று எதிர்பார்க்க முடியாது. ஆனால் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலே நாங்கள் வருவோ மானால் நாங்கள் கூறுவது கேட்கப்படும் என்று அவர் வாக்குத்தத்தம் செய்திருக்கின்றார் என்கின்ற நிச்சயத்தை நாங்கள் கொண்டிருக்கின்றோம். பரலோகப் பிதாவே, இன்றிரவு நான் ஜெபிப்பது, உம்முடைய ஊழியக்காரனும் எங்கள் சகோதரனுமாகிய சகோதரன் ஓ'டான்னல் இந்த நேரத்திலே மேய்ப்பராக இருந்த நடத்திக்கொண்டிருக்கின்ற, உம்முடைய ஆராதனைக்கென்று அர்ப்பணிக்கப்பட்டிருக்கின்ற இந்த சிறிய கூடாரத்தில் நான் கூடியிருக்கையில், தேசத்தின் இந்த பகுதியிலே பிரயாணித்துக் கொண்டிருக்கின்ற ஆடுகளை வழி நடத்திக்கொண்டிருக்கின்ற இந்த மேய்ப்பரின் மீதும் அவருடைய சபையின் மீது சபையின் மீதும் மற்றும் இந்த புல்வெளியில் மேய்ந்துக் கொண்டிருக்கும் எல்லா ஆடுகளின் மீது உம்முடைய ஆசீர்வாதங்களை கட்டளையிட வேண்டுமென்று நான் ஜெபிக்கின்றேன். 20எந்தெந்த சபையிலிருந்து மக்கள் இங்கே வந்துள்ளனரோ அந்த ஒவ்வொரு சபைக்காகவும் நான் ஜெபிக்கின்றேன். மேலும் கிறிஸ்தவர்களாக இல்லாதிருக்கின்ற மக்கள் எவர்களோ அவர்கள் கிறிஸ்தவர்களாக ஆகும்படிக்கு இன்றிரவு நான் ஜெபிக்கின்றேன். அங்கே நடைபெற இருக்கின்ற கன்வென்ஷன் கூட்டத்திற்காக இங்கே இருக்கின்ற வாணிபம் செய்யும் மனிதர்களாகிய (businessmen) சகோதரன் ரோஸ், சகோதரன் வில்லியம்ஸ் மற்றும் இன்னும் அநேகம் பேர்களுக்காக நான் ஜெபிக்கின்றேன். இந்த கடந்த சில நாட்களாக பீனிக்ஸ், டெம்பி, சன்னிஸ்லோப் இடங்களிலும் மற்றும் தேசம் முழுவதுமாக நடந்த இந்த சிறிய எழுப்புதல் தாமே கிறிஸ்தவர்கள் அநேகர் பேர் இன்னுமாக புதிய உறுதியைப் பெறவும், பின்மாற்றக்காரர் அநேகர் தேவனிடமாகத் திரும்பி வரவும், அநேக பாவிகள் கிறிஸ்துவினிடமாக வரவும், வியாதியஸ்தர் அநேகர் சுகமடையும்படியாகச் செய்யட்டும். பிதாவே, இதை அருளும். எங்கள் மூலமாகவும், சத்தியமாகிய வார்த்தையின் மூலமாகவும் இன்றிரவு பேசும். “உம்முடைய வசனமே சத்தியம்”. சரீரப்பிரகாரமாகவும் ஆவிக்குரியப் பிரகாரமாகவும் வியாதிப்பட்ட மற்றும் உபத்திரவப்படுபவர்கள் எல்லோரையும் சுகப்படுத்தும். கர்த்தாவே இந்த கைகளெல்லாம் ஒரு தேவைக்காகவே உயர்த்தப்பட்டுள்ளன, எங்கள் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மூலமாக இன்றிரவு நீர் தாமே அவை எல்லாவற்றையும் அளிக்கும்படியாக நான் ஜெபிக்கின்றேன். ஆமென். 21இப்பொழுது, வேதவசனங்களை வாசித்துக்கொண்டிருப்பவர் களோடு கூட உங்களில் அநேகருக்கு வாசிக்க விருப்பம். இன்றிரவு நான் இரண்டு இடங்களில் வாசிக்க விரும்புகிறேன். அவைகளில் ஒன்று மாற்கு 16ஆம் அதிகாரத்தில் இருக்கின்றது. நாம் 14 ஆம் வசனத்திலிருந்து ஆரம்பித்து வாசிக்கப் போகிறோம். மற்றொன்று பரிசுத்த யோவானில் இருக்கின்றது. அல்லது, அதைத்தான் நான் குறிப்பெழுதி வைத்திருக்கிறேன் என்று நினைக்கின்றேன். முதலில் நான் அதைப் பார்க்கட்டும். ஆம், பரிசுத்த யோவான் 14: 12 தான் இரண்டாவது வேத வசனமாகும். ஆகவே இப்பொழுது பரிசுத்த மாற்கு, 11 ஆம் அதிகாரம், 14 துவங்கி பார்ப்போமாக. பிறகு பரிசுத்த யோவான் 14 : 12. இப்பொழுது வாசித்ததனை மிகவும் கூர்ந்து கவனிக்க நாங்கள் விரும்புகிறோம், ஏனென்றால் தேவனுடைய வார்த்தையைத் தான் நாம் கேட்க விரும்புகிறோம். முதலாவதாக, மாற்கு 16. அதன்பின்பு பதினொருவரும் போஜன பந்தியிலிருக் கையில் அவர்களுக்கு அவர் தரிசனமாகி, உயிர்த்தெழுந்திருந்த தம்மைக் கண்டவர்களை அவர்கள் நம்பாமற்போனதினி மித்தம் அவர்களுடைய அவிசுவாசத்தைக் குறித்தும் இருதய கடினத்தைக் குறித்தும் அவர்களைக் கடிந்து கொண்டார். (மாற்கு 16 : 14) யோவான் 14 : 12, இயேசு பேசுகின்றார். மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லு கிறேன்; நான் என் பிதாவினிடத்திற்குப் போகிறபடியினால், என்னை விசுவாசிக்கிறவன் நான் செய்கிற கிரியைகளைத் தானும் செய்வான், இவைகளைப் பார்க்கிலும் பெரிய கிரியைகளையும் செய்வான். (யோவான் 14: 12). கர்த்தருக்கு சித்தமானால், என்னுடைய பொருளுக்காக நான் - நான் “கட்டளையின் உறுதிபாடு” என்னும் பொருளை எடுத்துப் பேச நான் விரும்புகிறேன். நாம் பேசுகையில் நமக்கு உதவியாக இருக்கும் வகையில் சில வேத வசனங்களையும், குறிப்புகளையும் எழுதி வைத்துள்ளேன். இப்பொழுது: கட்டளையின் உறுதிபாடு. இப்பொழுது, எந்த ஒரு காரியமும் கட்டாயமாக உறுதிப் படுத்தப்படத் தான் வேண்டுமென்று நான் நினைக்கின்றேன். நீங்கள் ஒரு வீட்டைக் கட்டுவீர்களானால், அது விவரக் குறிப்பீடுகளின்படியாகத்தான் கட்டப்பட வேண்டும். இல்லையென்றால் வீடானது கட்டப்பட்டாயிற்றா என்று அவர்களால் உறுதிப்படுத்தப்பட முடியாது. ஆகவே நீங்கள் அதை மறுபடியுமாக இடித்துப்போட்டு, திரும்பவுமாக அதை கட்ட வேண்டும். மேலும் நான் நினைப்பது என்னவென்றால், நீங்கள் சாலையில் சென்றுக் கொண்டிருக்கும்போது, அல்லது உங்கள் வேலையில் இருக்கும்போது யாராவது ஒருவர் உங்களிடமாக நடந்து வந்து, ''நான் அமெரிக்க ஐக்கிய நாட்டின் காவல் துறையைச் சேர்ந்தவன் ஆவேன். இப்பொழுது என் அலுவலின் பெயரைக் கொண்டு உங்களை நான் கைது செய்து காவலில் வைக்கிறேன்“ என்று கூறுகிறான் என்றால், அப்பொழுதே அநத் மனிதனிடமாக இப்படியாகக் கூற உங்களுக்கு உரிமை உண்டு. அது .... 22நீங்கள் அவனை நோக்கிப் பார்க்கையில், அவன் ஒரு காவல் சீருடையை அணிந்து ஒரு முத்திரைப் பொறித்த அடையாளக் குறியை (badge) அணிந்திருந்தானானாலும் கூட அது அவனை அமெரிக்க ஐக்கிய நாட்டின் காவல் துறையைச் சேர்ந்தவனாக ஆக்கிவிடாது. எந்த ஒரு போலியாளும் கூட அந்த வித உடையை அணியலாம். அந்த அடையாளக் குறியை எந்த ஒரு சாதாரண கடையிலும் வாங்கலாம். எந்த ஒரு காயலான் கடைக்கும் சென்று ஒரு சீருடையையோ அல்லது எந்த ஒன்றையோ உங்களால் வாங்க முடியும். அது அவனை அமெரிக்க ஐக்கிய நாட்டின் காவல் துறையைச் சார்ந்தவனாக ஆக்கிவிடாது. 23அவன் தன்னை அடையாளம் காண்பிக்க, அவன் அமெரிக்க ஐக்கிய நாட்டின் காவல் துறையைச் சேர்ந்தவன் தான் என்பதை நிரூபிக்க, முத்திரையிடப்பட்ட சான்றிதழ்களை அவன் வைத்திருக்க வேண்டும். இல்லையென்றால், அவன் காவல் துறையைச் சேர்ந்தவன் தான் என்று உறுதிப் படுத்தப்படும் வரைக்குமாக அவன் ஒன்றுமே கிடையாது. அவன் தன்னுடைய கட்டளையை உறுதிப்படுத்துகிறான். அவன் தன்னுடைய பணியை முத்திரையிடப்பட்ட விவர அறிக்கையின் மூலமாக, உறுதிமொழியின் மூலமாக உறுதிப்படுத்தி, அந்த மனிதனானவன் பதவிப் பிரமாணம் எடுத்தவன் என்பதை அவை காண்பிக்கின்றன. அவன் ஒரு ..... அமெரிக்க ஐக்கிய நாட்டின் முத்திரையின் முத்திரையினால் அவனுடைய கட்டளையானது முத்திரையிடப்பட்டுள்ளது. அவனுடைய பெயரின் மேலேயும் முத்திரையிடப்பட்டுள்ளது. அப்பொழுது அது அவன் அடையாளக் குறியை அணிந்திருந் தாலும் சரி, அல்லது சீருடையை அணிந்திருந்தாலும் சரி அவனை உறுதிப்படுத்துகிறது. அவன் இந்த சான்றிதழை வைத்திருக்கும் வரைக்குமாக அவன் காவல் துறையைச் சேர்ந்தவன் தான். அது தான் அவன் பெற்றுள்ள அவனுடைய கட்டளையாகும். வெறும் அடையாளக் குறியும், சீருடையும் கிரியை செய்யாது. 24இராணுவத்தில் அநேக முறைகள் நாம் காணலாம். வெளிநாடுகளிலே போரில் இருந்த என் சகோதரர்களிடம் மற்றும் அதில் பங்கெடுத்த அநேகரிடமிருந்து இதை நான் கூறக் கேட்டிருக்கின்றேன். அநேக முறைகள், ஜப்பானியர்களும் மற்றும் ஜெர்மானியர்களும் மற்றும் நமக்கு எதிராக போரிட்ட மற்ற அந்நிய நாடுகளிலும், அவர்கள் ஒரு மரித்த போர் வீரனை கண்டெடுப்பார்களானால், அப்பொழுது மரித்த வீரனின் சீருடை தங்கள் இராணுவ வீரன் எவனுக்கு சரியாக பொருந்துகின்றதோ அவனை தேர்ந்தெடுப்பார்களாம், ஏனென்றால் இவன் அந்த சீருடையை அணிந்து எளிதாக ஒரு வேஷக்காரனாக மாற முடியும். அமெரிக்க ஐக்கிய நாட்டின் சீருடையை எந்த ஒரு சாதாரண உளவாளியும் அறிய முடியும். 25ஆகவே அதை நாம் எல்லா காரியங்களிலும் காண்கின்றோம். அதை நாம் இன்று காண்கின்றோம், ஒருக்கால் தெருவில் அது இருக்கின்றது. அநேக மக்கள் நான் ஒரு அமெரிக்கன் என்று கூறுவதை நம்மால் கேட்க முடிகின்றது. ஆகவே இங்கே சிறிது காலத்திற்கு முன்னர், ஜெபர்சன்வில்லில் முன்பு இருந்த அந்த குவார்ட்டர் மாஸ்டரிலிருந்து வெளியே வந்து கொண்டிருந்த போது, ஒரு காலை நான் நடந்து கொண்டிருந்தேன். ரோந்து சென்று கொண்டிருந்தேன். அப்பொழுது அங்கே மிகவும் நன்றாக ஆடையணிந்த ஒரு நபர் தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தார். அவருடைய வாயில் ஒரு பெரிய சுருட்டு இருந்தது, அவர் அரசாங்க ஊழியராக இருந்தார். அதிகாலை வேளையிலே, வெயில் காப்பு கண்ணாடி அணிந்து கொண்டிருந்தார். அவர் என்னை நோக்கிப் பார்த்தார். நான், “ஐயா, காலை வணக்கம்” என்று கூறினேன். அவர் என்னை நோக்கிப் பார்த்து, “ஹஹ்” என்று கூறிவிட்டு தொடர்ந்து நடந்து சென்றார். அப்பொழுது நான் எனக்குள்ளாக இப்படியாக சிந்தித்தேன். நான் எதுவுமே கூறியிருக்கக் கூடாது. ஆனால் என் இருதயத்தைப் பொறுத்த வரையில் அவர் உண்மையாகவே ஒரு அமெரிக்கன் அல்ல, ஏனென்றால் அமெரிக்க கொள்கை களானது அப்படியான காரியங்களின் பேரில் அமைந்திருக்க வில்லை. ஆம். ஐக்கியம் மற்றும் சகிப்புத்தன்மை, நல்லெண்ணம். 26ஆகவே இப்பொழுது, நீங்கள் பாருங்கள், அமெரிக்காவில் இருக்கின்ற எல்லாருமே அமெரிக்கர்கள் அல்ல. உளவாளிகள், கம்யூனிஸ்டுகள், மற்றும் எல்லாவிதமானோர் இருக்கின்றனர். உண்மையாகவே அவர்கள் சரியானவர்களா அல்லது இல்லையா என்றும் எப்படிப்பட்டவர்கள் என்றும் எவ்வாறு அறிந்து கொள்ளலாம் என்றால், அவர்களுக்குள்ளாக என்ன இருக்கிறது என்றும், அவர்களுடைய இருதயமானது அமெரிக்காவில் உள்ளதா அல்லது அமெரிக்கர் என்ற எண்ணம் அவர்களுடைய சட்டைப்பை புத்தகத்தில் தான் இருக்கின்றதா என்பதை கண்டுகொள்வதன் மூலம் தான். பாருங்கள்? அது என்ன என்பதின் பேரில் நான் காரியமானது சார்ந்திருக்கின்றது. எந்த ஒரு போலியான நபரும் இந்த அறிமுக ஆவணங்களைக் கொண்டிருப்பான் ஆனாலும் இன்னுமாக உண்மையான அசலானவனாக இருக்கமாட்டான். அதனால் தான் கிறிஸ்தவர்கள் என்று அழைத்துக் கொண்டும், பரலோகத்திலிருந்து அனுப்பப்பட்டுள்ள தூதர்கள் (ambassadors) என்று தங்களை அழைத்துக்கொண்டு நம் வழியில் வருகின்ற எல்லாரும் தங்கள் கட்டளையினுடைய உறுதிப்பாட்டினைக் கொண்டிருக்க வேண்டும். அவர் களுடைய கட்டளையின், ஊழியத்தின் உறுதிப்பாடானது இருக்க வேண்டும் என்று நான் நம்புகிறேன். 27இப்பொழுது, இங்கே மாற்கு 16ஆம் அதிகாரத்தில், அவர் கட்டளை அளித்து அனுப்பினது இவை எல்லாம் உறுதிப்படுத்தும் என்று இயேசு கூறியுள்ளதை நாம் தெளிவாகக் காண்கிறோம். “விசுவாசிக்கிறவர்களை இந்த அடையாளங்கள் பின் தொடரும்.” இப்பொழுது, அவர், “அவைகள் ஒருக்கால் பின் தொடரும் அல்லது அவை பின் தொடரலாம்” என்று அவர் கூறவில்லை . அவர், “நீங்கள் உலகமெங்கும் போய்” என்றார். இரண்டாயிரம் வருடங்களுக்கு முன், இப்பொழுது யாரோ ஒருவர் அந்த கட்டளையை வெட்டி எறிந்து போட விரும்புகிறார். ஆனால் அவரோ, உலகமெங்கும் போய் சர்வ சிருஷ்டிக்கும் ..... இந்த அடையாளங்ள் உலகமெங்கும் சர்வ சிருஷ்டியையும் பின் தொடரும்“ என்று கூறினார் பாருங்கள்? அந்த அடையாளப்படுத்துதலை உறுதிப்படுத்தும்படிக்கு பின் தொடரவேண்டிய அடையாளங்கள் அவைகள் தான். 28“சுவிசேஷம் எங்களிடத்தில் வசனத்தோடு மாத்திரமல்ல, வல்லமையோடும், பரிசுத்த ஆவியின் வெளியாக்குதலோடும் வந்தது” என்று வேதாகமம் கூறுகின்றது. வேறு விதமாகக் கூறுவோமானால், “அது பரிசுத்த ஆவி தேவனுடைய வார்த்தையை எடுத்து அதை வெளிப்படுத்திக் காண்பித்தல்” என்பதாகும். பாருங்கள்? ஆகவே, மற்றபடி, மாற்கு 16ன் அடையாளங்கள் விசுவாசி பின் தொடர இருக்கின்ற ஒரே வழி என்னவென்றால் பரிசுத்த ஆவி தேவனுடைய வார்த்தையை எடுத்து அதை மக்களுக்கு செயல் முறையில் கிரியை நடப்பித்துக் காண்பிப்பதே ஆகும். அது தான். இப்பொழுது, விசுவாசம் அந்த வார்த்தையை ஜீவிக்கும்படிக்குச் செய்கின்றது. பாருங்கள்? வார்த்தை தேவனாகும். “ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது.”ஆகவே பிறகு இயேசு, “நீங்கள் என்னிலும் என் வார்த்தை உங்களிலும் நிலைத்திருந்தால் நீங்கள் கேட்டுக் கொள்வதெதுவோ அது உங்களுக்குச் செய்யப்படும்” என்று கூறினார். பாருங்கள்? அது வார்த்தையில் கிறிஸ்துவுக்குள் தரித்திருத்தல் ஆகும். வலது பக்கமோ அல்லது இடது பக்கமோ செல்லாதீர்கள். சரியாக அதனுடனே தரித்து நில்லுங்கள். பாருங்கள். ஆகவே அப்படியானால் உண்மையாகப் பார்ப்போமானால் அது உங்களுடைய வார்த்தை அல்ல. அது அவருடைய வார்த்தையாகும். மேலும் அவருடைய வார்த்தைக்கு பின்னாலே வல்லமையும் அதிகாரமும் இருக்கின்றது. இப்பொழுது, தேவனுடைய வார்த்தையாகிய பரிசுத்த ஆவி அல்லது தேவனுடைய வார்த்தையின் வல்லமையானது தேவனுடைய வார்த்தையுடனே வருகிறதென்றால் அது தேவனுடைய வார்த்தையானது தாமாகவே செயலில் தன்னை வெளிப்படுத்திக் காண்பிக்கும் படிக்குச் செய்கின்றது. 29..... நீங்கள் உலகமெங்கும் போய், சர்வ சிருஷ்டிக்கும் சுவிசேஷத்தை செயல் முறையில் செய்து நிரூபித்துக் காண்பியுங்கள். விசுவாசமுள்ளவனாகி ஞானஸ்நானம் பெற்றவன் இரட்சிக்கப்படுவான்; விசுவாசியாதவனோ ஆக்கினைக் குள்ளாகத் தீர்க்கப்படுவான். விசுவாசிக்கிறவர்களை இந்த அடையாளங்கள் பின்தொடரும்..... ( - ஆங்கில வேதாகமத்தில் உள்ளவாறே - தமிழாக்கியோன்) என்ன அழகான ஒரு காட்சி அமைப்பாக இருக்கின்றது! இப்பொழுது நாம் தாமே ஆழமாகப் பார்த்து சற்று கவனிப்போமானால், சுவிசேஷத்தை பிரசங்கிக்கச் செல்கின்ற ஒவ்வொரு மனிதனோடும் தங்கி தரித்திருக்கின்ற அறிமுக, ஆதாரச் சான்றுகள் இது தான் ஆகும். பரிசுத்த ஆவியின் அபிஷேகம் இல்லாமல் எந்த ஒரு மனிதனுக்கும் சுவிசேஷத்தை பிரசங்கிக்க உரிமை கிடையாது. பேதுரு, யாக்கோபு, யோவான் மற்றும் ஏனைய மற்றவர்களும் எருசலேம் நகரத்தில் காத்திருக்கும் வரைக்குமாக, பரிசுத்த ஆவியானவர் அவர்களை நிரப்பின வரைக்குமாக இயேசு அவர்களை பிரசங்கம் செய்ய விடவில்லை. ஏனென்றால் பரிசுத்த ஆவி தான் தேவனுடைய வார்த்தை செயலில் இறங்கும்படிக்குச் செய்கின்றது. பாருங்கள்? 30இப்பொழுது, அந்த அதே வார்த்தையானது உரைக்கப்பட்ட மணி நேரத்தில் எப்படி இருந்ததோ அதே விதமாகவே இன்றிரவும் கூட உயிருடன் இருக்கின்றது. பாருங்கள்? அந்த ..... நமக்குத் தேவைப்படுவதெல்லாம் என்னவென்றால் வார்த்தையின் பின்னால் பரிசுத்த ஆவியைக் கொண்டிருந்து அதை செயலில் வைத்து அது வாக்குரைத்துள்ள வல்லமையை செயல்முறையில் செய்து நிருபித்துக் காண்பிக்கின்றது. வார்த்தையின் பின்னால் பரிசுத்த ஆவி இருந்தால் தேவன் வாக்குத்தத்தம் செய்துள்ள ஒவ்வொரு ஆசீர்வாதத்தையும், அவர் கூறியுள்ள ஒவ்வொன்றையும் உயிர்ப்பித்து மெய்ப்பிக்கலாம், ஏனென்றால் வார்த்தையை உயிர்ப்பித்து அதற்கு ஜீவனை அளிக்கும் காரியம் அதுவேயாகும். பாருங்கள்? ஆகவே இப்பொபது அது சரி என்று நாம் அறிந்திருக்கின்றோம். 31இயேசு, “நான் அனுப்புகின்ற எல்லாரையும் இந்த அடையாளங்கள் பின் தொடரும்” என்று கூறினார். மற்றவர்கள் வேண்டாம் என்று தள்ளிவிடுகின்றனர். அவ்வளவு தாம். நிச்சயமாக. எந்த ஒரு அவிசுவாசியும், வார்த்தையைக் குறை கூறுகின்ற ஒவ்வொருவரும் ஏதோ ஒரு ஸ்தாபனத்தின், ஏதோ ஒரு மனிதனால் உண்டாக்கப்பட்ட ஸ்தாபனத்தின் அல்லது ஏதோ ஒன்றின் அடையாளச் சான்றுடன் வந்து “நான் பிரஸ்பிடேரியன், லுத்தரன், பாப்டிஸ்ட்” என்று கூறலாம், அது என்னவாயிருந்தாலும் சரி, அவன் தன்னுடைய அறிமுகச் சான்றுகளைக் கொண்டு அந்த அதே ஸ்தாபன சபையின் ஐக்கியத்திற்குள்ளாக அவன் தன்னை சுலபமாக அடையாளப் படுத்திக் கொள்ளலாம். ஆனால் அவனுடைய அறிமுகச்சான்று தேவனுடைய வார்த்தையிலிருந்து வராமல் ஒரு கோட்பாட்டினால் உண்டாக்கப்பட்ட ஒரு ஸ்தாபனத் திலிருந்து மாத்திரம் தான் வருகின்றது. 32ஆனால் தேவன், அவன் தேவனிடத்திலிருந்து அனுப்பப் பட்டிருப்பானானால், “விசுவாசிக்கிறவர்களை இந்த அடையளாங்கள் பின் தொடரும்.” பாருங்கள்? இயேசு அவ்விதமாகக் கூறியுள்ளார். புரிகின்றதா? புரிகின்றதா? அது, ஏதோ ஒரு ஸ்தாபனம் சொன்னதை, ஒரு மனிதனால் உண்டாக்கப்பட்ட கோட்பாடு சொன்னதை எடுக்கின்றாயா என்பது தான் காரியமாகும். அவர்கள் அந்த கோட்பாட்டின் உபதேசத்தைத் தான் பிரசங்கிப்பார்கள். மேலும் அவர்கள் அந்த ஸ்தாபனத்தில் நல்ல ஒரு ஐக்கியத்தில் நிலை நிற்கின்றார்கள் என்கின்ற அவர்களுடைய ஆதாரச் சான்று தான் அவர்கள் டீக்கன் குழுவில் இடம் பெறவோ அல்லது எதிலாகிலும் இடம் பெறவோ செய்யும். அதற்கெதிராக என்னிடத்தில் எதுவு மில்லை என்பதை சற்று புரிந்து கொள்ளுங்கள். ஆனால் நான் இயேசு கூறினதற்கு காவலாக வழக்காடி நிற்கின்றேன். பாருங்கள்? அவர், “விசுவாசிக்கிறவர்களை இந்த அடையாங்கள் பின் தொடரும்” என்று கூறினார். மேலும் இயேசு பரிசுத்த யோவான் 14:12ல் “மெய்யாகவே, மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்” என்றா. அது, “முற்றிலுமாக, முற்றிலுமாக நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், என்னை விசுவாசிக்கிறவன் நான் செய்கிற கிரியைகளை தானும் செய்வான்” என்பதேயாகும். 33ஆகவே ஒரு மனிதன், தான் தேவனிடமிருந்து அனுப்பப் பட்டவன் என்று விசுவாசித்து, பிறகு திரும்பிச் சென்று, அவர் அனுப்பி உள்ள ஒவ்வொரு மனிதனுக்கும் அது தான் அடையாளமாக இருக்கும் என்று தேவன் கூறி அளித்துள்ள அந்த அதே ஊழியத்தை கட்டளையை மறுதலிக்க எப்படி அவனால் முடியும்? ஒரு மனிதன், “பரிசுத்த ஆவியின் அபிஷேகம் என்கின்ற ஒன்று இல்லவே இல்லை” என்று எப்படி கூற முடியும்? எப்படி ஒரு மனிதனால், “வியாதியஸ்தரை சுகப்படுத்துதல் என்கின்ற ஒன்று இல்லவே இல்லை” என்று கூற முடியும்? எப்படி ஒரு மனிதனால், “அந்நிய பாஷையில் பேசுதல், பிசாசுகளை துரத்துதல் என்பதான ஒன்று கிடையவே கிடையாது'' என்று எப்படிக் கூற முடியும்? தாம் அந்த நபரை அனுப்பியுள்ளேன் என்பதற்காக ஆதாரச் சான்று அவைகள் தான் என்று இயேசுவே குறிப்பிட்டு வலியுறுத்தியிருக் கின்றாரல்லவா. அது தான் அதிகாரம் ஆகும். இப்பொழுது, நீங்கள் ஒரு பள்ளிக்குச் சென்று ஒரு பிஎச்.டி (Ph.D) பட்டம், எல்.எல்.டி. (LL.D) அல்லது உங்களால் முடிந்த வேறெந்த ஒரு பட்டப்படிப்பையும் படித்து முடிக்கலாம். அது சரி தான். அவைகள், நீங்கள் அந்த ஸ்தாபனத்தைச் சேர்ந்தவர்கள் என்பதற்கான அடையாளச் சான்றுகளாகும். அவைகளெல்லாம் சரி தான். அவைகளுக்கு எதிராக என்னிடமாக ஒன்றுமே இல்லை; அவைகள் பெற்றிருக்க எனக்கு விருப்பம் தான். 34ஆனால் இயேசு, தாம் அனுப்புகின்ற மனிதனின் அடையாள சான்று என்னவென்று குறிப்பிடுவது “விசுவாசிக்கிற வர்களை இந்த அடையாளங்கள் பின் தொடரும்” என்பது தான். பாருங்கள்? அவன் தேவனால் அனுப்பப்பட்ட ஒருவன் என்பதற்கான அடையாள ஆதாரக் காரியம் அது தான். “விசுவாசிக்கிறவர்களை இந்த அடையாளங்கள் பின் தொடரும்.'' இப்பொழுது, நான் ஏற்கெனவே கூறியுள்ளபடி, எந்த ஒரு போலியான நபராலும் ஒரு சீருடையையோ அல்லது ஒரு அடையாளக் குறியையோ அணிந்து கொள்ள முடியும். ஆனால் உண்மையாகவே அது ஆதாரச் சான்றல்ல. ஆதாரச் சான்று தான் உறுதிப்படுத்தும் ஒன்றாகக் கருதப்படும். சீருடையோ அல்லது அடையாளக் குறியோ அல்ல. அநேகம் மக்கள் உள்ளனர், அவர்கள் ..... இதை நான் கூறுவது மிகவும் மோசமாகக் காணப்படலாம், ஆனால் அது உண்மையாகும். நாம் உத்தமமாக இருக்க வேண்டும். அங்கே மிக அநேகர் பேர் ...... வெறும் சீருடையையும் அடையாளக் குறியையும் மாத்திரமே அணிந்துள்ள நம்முடைய பெந்தெகொஸ்தே மக்கள், பாருங்கள், ஏனென்றால் உண்மையாகவே ஒரு பெந்தெகொஸ்தே நபர் எப்படி இருக்கவேண்டுமோ அவ்விதமாக இல்லாமல் அவர்கள் மிகவுமாக அதற்கு மாறாக ஜீவிப்பதால் தான், அதிலே ஒன்றுமே ஒன்றுமே இல்லை என்கின்ற அளவிற்கு இருக்கின்றனர். அது தான். அது காரியத்தின் பேரில் நிந்தையைத் தான் கொண்டு வருகின்றது. அது சரியே. அது மக்கள் சந்தேகமடையும்படிக்குச் செய்கின்றது. 35ஆனால் அது உண்மையென சோதித்து சரிபார்த்து அறிந்துக்கொள்ள இயேசு ஒன்றை அளித்துள்ளார், ஆகவே அது சரியானதாகத் தான் இருக்கும் ஏனென்றால் “விசுவாசிக்கிறவர் களை இந்த அடையாளங்கள் பின் தொடரும்.'' என்பதைக் கொண்டு தான் உண்மையென சரிபார்த்துக் கொள்ள வேண்டும். அந்த ஒன்று தான் காரியமாகும். பரிசுத்த ஆவியானவர் கால ஓட்டத்தினூடாக நோக்கிப்பார்த்து மனிதர் தம்முடைய வார்த்தையை தாறுமாறாக்கி புரட்டிப்போட்டு, இது, அது, மற்றும் மற்றது நேரிடும்படிக்குச் செய்வார்கள் என்று பார்த்தார், ஆகவே வேறு எந்த ஒன்றைக் கொண்டும் சோதித்துப் பார்த்து அறிந்து கொள்ள முடியாது என்று தெளிவாக திட்டவட்டமாக அறிவித்தார். அவர், ”விசுவாசிக் கிறவர்களை இந்த அடையாளங்கள் பின் தொடரும்“ என்று கூறினார். இப்பொழுது, அது உண்மை தான் என அறிந்துள்ளோம். 36ஒரு அவிசுவாசி இந்த ஸ்தாபன ஆதாரச் சான்றுகளை கையில் வைத்துக் கொண்டு அங்குமிங்கும் செல்லலாம். ஆனால் அது அவனை தேவனால் அனுப்பப்பட்ட ஒரு மனிதனாகும் படிக்குச் செய்து விடாது. அவர்கள் பலவிதமான புத்தகங்களை தங்கள் அக்குளில் வைத்துக்கொண்டு சுற்றிலும் நடந்து சென்று கொண்டிருக்கலாம், தேசம் முழுவதுமாக செல்லலாம். இந்த விதமான புத்தகம், யெகோவாவின் இது மற்றும் இன்னார்-இன்னார், மற்றும் இந்த எல்லாவற்றையும் மற்ற எல்லா வற்றையும் வைத்துக்கொண்டு செல்லலாம், ஆனால் அது அவர்களை தேவனால் அனுப்பப்பட்ட மனிதனாகச் செய்துவிடாது. இல்லை ஐயா. “வார்த்தையைக் கொண்டு அவர்களை சோதித்துப் பாருங்கள்” என்று இயேசு கூறினார். அது சரி. அந்த வார்த்தை “இந்த அடையாளங்கள் பின் தொடரும்” என்பதே. “தேவனுடைய வல்லமையில் உங்களுக்கு விசுவாசம் இருக்கிறதா?” 37“ஓ, எங்கள் - எங்கள் சபை அதை போதிக்கின்றது.'' ”எங்கள் சபை,“ அதனுடன் எந்தவித சம்பந்தமும் கிடையாது. அதைத்தான் தேவனுடைய வார்த்தை கூறுகிறது, பாருங்கள்? ஆம், “வானமும் பூமியும் ஒழிந்து போம், என் வார்தையோ ஒழிந்து போவதில்லை.”ஜீவனுள்ள தேவனால் உரைக்கப்பட்ட ஜீவனுள்ள வார்த்தையானது ஒரு ஜீவனுள்ள நபருக்குள்ளாக இருக்க வேண்டும். ஆகவே பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தைப் பெற்றுள்ளோம் என்று உரிமை கோரும் எந்த ஒரு மனிதனாலும் அல்லது ஒரு பெண்ணாலும் தேவன் தம்முடைய வார்த்தையில் கூறியிருப்பதை எவ்வாறு மறுதலிக்க முடியும்? ஏனென்றால் வார்த்தையை எழுதின அந்த அதே பரிசுத்த ஆவியானவர் தாமே, அந்த மனிதனின் மூலமாக பேசிக் கொண்டிருக்கின்றாரே அவரும் அந்த அதே பரிசுத்த ஆவியானவர் தான். அது சரியே. அவ்விதமாகத் தான் அது இருக்க வேண்டும். அவனால் முடியாது, அவனால் அதைச் செய்ய முடியாது. ஆம் ஐயா. 38இப்பொழுது, ஆனால், அது, ஒரு மனிதன் வந்து “என்னிடமாக ஐக்கியச் சீட்டு (Fellowship card) உள்ளது. நான் இந்த சபையைச் சேர்ந்தவன் அல்லது அந்த சபையைச் சேர்ந்தவன்” என்று கூறலாம். இன்னுமாக இது அவனை சரியானவனாகச் செய்து விடாது. ஒருக்கால் அவன் பிஎச்.டி. (Ph.D.,)., எல்.எல்.டி (LL.D)., பட்ட யத்தையோ அல்லது ஒரு மகத்தான பள்ளியிலிருந்து இன்னும் அதிகமானவைகளை பெற்றிருக்கக்கூடும். அது அருமையானது. அதற்கெதிராக என்னிடமாக எதுவுமே இல்லை. ஆனால் தேவன் அவனை அனுப்பியிருப்பாரானால் ..... ஆகவே அவன் இதிலே இந்த கட்டளையை, ஊழியத்தை மறுதலிப்பானானால்..... அவன் இதையும் மற்றும் அதையும் கொண்டிருப்பானானால் அது அருமையானதே. ஆனால் அவன் அது இல்லாமல் இதை மாத்திரமே கொண்டிருப்பானானால் அதினால் ஒரு பிரயோஜனமும் கிடையாது. பாருங்கள்? அது சரியே. 39ஒரு மனிதன் ஆதாரச் சான்றுகளுடனே சீருடையையும் அடையாளக் குறியையும் அணிந்திருப்பானானால் அது சரி தான். சரி. ஆனால் அந்த ஆதாரச் சான்றுகள் இல்லாமலேயே அவனாலே சீருடையையும் அடையாளக் குறியையும் அணிந்துக் கொள்ள முடியும். சரி. ஆகவே அது நிலைத்து நிற்கக் கூடியதான கட்டளையின் உறுதிபாடாகும். சந்தேகத்திற் கிடமில்லாமல். அது நிலைத்து நிற்கத்தான் வேண்டும். 40இந்த வழியாக கடந்து செல்லக்கூடிய இந்த அவிசுவாசி, “ஆம், பரிசுத்த ஆவியின் அபிஷேகம் என்கின்றதான ஒரு காரியமானது உள்ளது என்று நான் விசுவாசிப்பதில்லை. அந்த நாட்கள் கடந்து சென்று விட்டது என்று எங்கள் வேதாகம பள்ளிகள் போதித்துள்ளன. இனிமேல் பரிசுத்த ஆவியை நாங்கள் கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை” என்று கூறலாம். அதை விசுவாசிக்கின்ற அநேக மக்கள் உள்ளனர். அவர்களால் அநேக மக்கள் அதை உத்தமமாக விசுவாசிக் கின்றனர், அருமையான நல்ல மனிதர், ஏன் அவ்விதமாகச் செய் கின்றார்கள் என்றால் அவர்கள் தேவனுடைய வார்த்தைக்கு பதிலாக வேதாகம பள்ளி கூறுவதைக் கேட்பதனால் தான். அது முற்றிலும் சரியே. இங்கே சில காலத்திற்கு முன்னர், ஒரு குறிப்பிட்ட இடத்திலே, ஒரு - ஒரு - ஒரு பெண் இருந்தாள். அவளுக்கு ஒரு மகன் இருந்தான். அவன் தன்னுடைய வாழ்க்கையில் தேவனுடைய அழைப்பைப் பெற்றான்; அவன் அழைப்பைப் பெற்றிருந்தது போலத் தோன்றினது. ஆனால் அவளோ அவனை தவறான விதமான ஒரு வேதாகமப் பள்ளிக்கு அனுப்பினாள். தேவனுடைய வார்த்தைக்கு முரண்பாடாக போதிக்க ஆரம்பித்த ஒரு இடத்திற்கு அவள் அவனை அனுப்பினாள். அவனும் அதிலே பயின்று கொண்டிருந்தான். அவளை அந்த பள்ளியில் படிக்க வைக்க அவள் துணிகளைத் துவைத்தும் இன்னும் பிற வேலைகளையும் செய்தாள், நீண்ட காலம் கடந்து சென்றது. முடிவில், அவன் சிறிது காலமாக வீட்டிற்கே வரவில்லை . 41அந்த வயதான தாயார் மிகவுமாக வியாதிப்பட்டார்கள். அவள் மிகவுமாக, மிகவுமாக உடல்நலக்குறைவினால் பாதிப்பிற் குள்ளாகினாள். இனிமேல் அவள் வாழமாட்டாள் என்றும் அவள் மரித்து விடுவாள் என்று மருத்துவர் கூறுகின்ற அளவிற்கு அவளுடைய நிலைமை மிகவும் மோசமானது. ஆகவே அவள் அண்டை வீட்டாரில் ஒருவரை அழைத்து தன் மகன் உடனடியாக வீட்டிற்கு வர வேண்டும் என்று தந்தி மூலமாக செய்தி அனுப்பினாள், ஏனென்றால் அவள் சீக்கிரத்தில் மரித்துவிடலாம் என்ற நிலையாக இருந்தது. ஆகவே அந்த பக்கத்து வீட்டு நபர் அவள் மகனுக்கு தந்தி அனுப்பினார். அப்பொழுது அந்த மகன் தன் வீட்டுக்கு வர ஆயத்த மானான். சிறிது நேரத்திலேயே இன்னொரு தந்தி அவனுக்கு வந்து சேர்ந்தது, அதில், “வீட்டிற்கு வரத்தேவையில்லை. அவள் நலமாக உள்ளாள் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. ஆகவே பிறகு, அநேக மாதங்களுக்கு பிறகு அந்த பையன் தன் தாயைப் பார்க்க தன் வீட்டிற்கு வந்தான். அவன் வீட்டிற்கு வந்து தன் தாய் நலமுடன் இருப்பதை கண்டு சந்தோஷ மடைந்தான், அவன் இளங்கலையியல் பட்டத்தைப் பெற்று விட்டான் என்றும், அவன் செய்திருந்த எல்லாவற்றையும் மற்றும் அவன் தன் பள்ளியில் எப்படியெல்லாம் இருந்தான் என்று தன் தாயிடமாகக்கூறினான். பிறகு அவன், “ஓ சரி அம்மா, இதைக் கேட்க மறந்து விட்டேனே, நான் உடனடியாக வீட்டிற்கு வர வேண்டும் என்று ஆறு மாதங்களுக்கு முன்னர் நீங்கள் எனக்கு ஒரு தந்தி அனுப்பினீர்களே. நான் மிகவுமாக நிலைகுலைந்து போனேன். அதைப் படித்த உடன் நான் மிகவுமாக பயந்து போனேன்” என்று கூறினான். மேலும் அவன், “நான் வீட்டுக்கு வர ஆயத்தமானேன். அப்பொழுது மற்றுமொரு தந்தி வந்து சேர்ந்தது, அதில் நீங்கள் நலமாக உள்ளதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. நீங்கள் குணமடைந் தீர்கள். அந்த செய்தியை பார்த்தவுடன் நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். அம்மா, நான் உங்களிடமாக கூற விரும்புகிறேன். அல்லது, அம்மா, என்ன நடந்தது என்று உங்களிடமாக நான் கேட்க விரும்புகிறேன். எந்தவிதமான ஒரு மருந்தை மருத்துவர் உங்களுக்குக் கொடுத்தார், நீங்கள் சாப்பிடும்படிக்கு டாக்டர் கொடுத்த மருந்து என்ன? நான் போய் அவரைச் சந்தித்து அவர் செய்த அந்த அருமையான பணியைக் குறித்து அவரிடமாக பேச விரும்புகிறேன்” என்றான். அதற்கு அவள், “மிகவும் நல்லது மகனே. அந்த காரியத்தைச் செய்தது டாக்டர். இயேசு தான்”. என்று கூறினாள். அதற்கு அவன், “மிகவும் நல்லது மகனே. அந்த காரியத்தைச் செய்தது டாக்டர். இயேசு தான்.'' என்று கூறினாள். அதற்கு அவன், “அம்மா ?” என்றான். 42அவள், “டாக்டர் இயேசுதான்” என்றாள். மேலும் அவள், “என் மருத்துவராகிய டாக்டர் இன்னார் - இன்னார், இங்கே வந்தார், அப்பொழுது எனக்கு காய்ச்சல் மிகவும் அதிகமாக இருந்தது, என்ன நடக்கின்றது என்று தெரியாத அளவிற்கு என் நிலைமை மோசமாக இருந்தது. என் நிலைமை மோசமடைந்தது என்றும் நான் மரிக்கப்போகிறேன் என்றும் அவர்கள் கூறினார்கள்” என்று கூறினார்கள். மேலும் அவள், “அங்கே மூலையிலே, அங்கே குறுந்தெருவிலே ஒரு சிறிய சபை இருக்கின்றதே தெரியுமா?” என்றாள். “ஆமாம்.'' மேலும் அவள், “ஒரு இரவில் அங்கே உள்ள மக்கள் ஜெபக் கூட்டம் நடத்திக் கொண்டிருந்தனர், அப்பொழுது அவர்கள் என்னிடமாக ஜெபிக்கும்படிக்கு பரிசுத்த ஆவியானவர் கூறினார் என்று சொன்னார்கள். அவர்கள் வந்து ஜெபித்த மாத்திரத்திலே எனக்கிருந்த எல்லா காய்ச்சலும் உடனடியாக போய்விட்டது'' என்றாள். மேலும் அவள், ”ஓ மகனே! அல்லேலூயா! நான் சுகமானேன்“ என்றாள். அப்போது அவன், “ஓ” என்றான். மேலும் அவன், “அம்மா, அம்மா என்ன ஒரு துடுக்குத்தனமான வெட்கமற்ற காரியம்! அந்தவிதமான மக்களுடன் நீங்கள் ஒருபோதும் ஐக்கியம் கொள்ளக்கூடாது. அந்த விதமான மக்கள் இங்கே வரும் படிக்கு நீங்கள் செய்யக்கூடாது” என்றான். அதற்கு அவள் ..... அவள், “ஓ, என் மகனே?” என்றாள். அவள், “சரி, தேவனுக்கு மகிமை!” என்றாள். 43அதற்கு அவன், “அம்மா, அந்த விதமான காரியங்களைக் கூறாதீர்கள், அப்படியாக,. அப்படியாக நீங்கள் கூறும்போது எனக்கு நடுக்கத்தை உண்டாக்குகிறீர்கள்!” என்றான். மேலும் அவன், “ஆம், அந்த காரியங்களை நீங்கள் சொல்லக்கூடாது. அந்த மக்களுக்கு கல்வியறிவு கிடையாது. வேதாகமத்தைக் குறித்து அவர்களுக்கு எதுவுமே தெரியாது” என்றான். அவள், “ஓ, மகனே நான் கூறுவதை சற்று கேள், என்னைப் பொறுத்துக்கொள். அவர்கள் நேராக இங்கே வந்து வேதாகமத்திலிருந்து எனக்கு வாசித்துக் காண்பித்தார்கள், அதில், 'விசுவாசிக்கிறவர்களை இந்த அடையாளங்கள் பின் தொடரும். வியாதியஸ்தர் மேல் கைகளை வைப்பார்கள். அப்பொழுது அவர்கள் சொஸ்தமாவார்கள்' என அதில் கூறப்பட்டுள்ளதே. சற்று பொறு. நானும் அதை அநேக முறை வாசித்திருக்கின்றேன். என் வேதாகமத்தில் அதைக் குறித்தும் வைத்துள்ளேன். நான் அதை இப்பொழுது உனக்கு காண்பிக்கப் போகிறேன்” என்றாள். அவன், “ஓ, அம்மா ஒரு நிமிடம் பொறுங்கள். அது மாற்கு 16 தானே” என்றான். “ஆம், அதில் தான் அது இருக்கின்றது தேனே, மாற்கு 16ல் உள்ளது” என்று அவள் கூறினாள். அதற்கு அவன், “ஓ, அம்மா, இதோ பாருங்கள், அந்த ஏழை மக்களுக்கு ஒன்றுமே சரியாகத் தெரியாது. மாற்கு 16 குறித்து நாங்கள் வேதாகமப் பள்ளியில் கற்றிருக்கின்றோம், 9ஆம் அதிகாரத்திலிருந்து ஆவியானவரால் ஏவப்பட்டு எழுதப்படவில்லை. புரிகின்றதா? உண்மையாகவே அது ஊக்குவிக்கப்பட்டு எழுதப்பட்வில்லை. அது வெறுமனே சேர்க்கப்பட்ட ஒன்றாகும்” என்று கூறினான். அப்பொழுது அந்த சிறிய தாய் “தேவனுக்கு மகிமை! அல்லேலூயா!” என்று கூறினாள். அப்பொழுது அவள் ..... அந்த பையன், “அம்மா, நீங்கள் அப்படி கூறுவதன் மூலம் என்ன கருத்தை தெரிவிக்க விரும்புகிறீர்கள்?'' என்று கேட்டான். அவள், “நான் சற்று யோசித்துக்கொண்டிருந்தேன்” என்றாள். அவன், “நீங்கள் யோசித்துப் பார்த்துக்கொண்டிருப்பது என்ன?” என்று கேட்டான். அதற்கு அவள், “ஊக்குவிக்கப்படாத அந்த வார்த்தையைக் கொண்டு தேவனாலே எனக்கு சுகத்தை அளிக்க முடிகிறதென்றால், அது உண்மையாகவே ஊக்குவிக்கப்பட்டு எழுதப்பட்டிருப்பதைக் கொண்டு அவர் என்னவெல்லாம் செய்வார்?” என்றாள். ஆம், அது, அது சரியே. பாருங்கள்? பாருங்கள்? அது தான். ஓ, என்னே! 44காரணம் என்னவாக இருந்தது? அங்கே மூலையில் இருந்த அந்த சிறு சபை ஆதாரச் சான்றை வைத்திருந்தது, ஒரு பிஎச்.டி. பட்டத்தையோ அல்லது எல்எல்.டி பட்டத்தை அவர்கள் கொண்டிருக்கவில்லை. அல்லது ... ஆனால் அவர்கள் “விசுவாசிக்கிறவர்களை இந்த அடையாளங்கள் பின் தொடரும்'' என்கின்ற தேவனுடைய ஆதாரச் சான்றுகளை வைத்திருந்தனர். நாம் அதைச் செய்வோம் என்று இயேசு கூறினார். அவர்கள், அவர்கள் தேவனுடைய கட்டளையைக் கொண்டிருந்தனர். வியாதியஸ்தர் மேல் கைகளை வைக்கும்படிக்கு அவர்கள் அவருடைய கட்டளையைக் கொண்டிருந்தனர், ஆகவே அவ்வாறே செய்யுங்கள் என்று அவர் கூறின விதமாகவே அவர்கள் அதைச் செய்தனர். அவர்கள் தேவனாலே அனுப்பப்பட்டவர்கள் என்பதற்கான உறுதி பாடாக அது இருந்தது. ஆம், ஐயா, அது உண்மை , அது சரி. இப்பொழுது, அது ஒரு அருமையான பாடமாகும். ஏனென்றால், அந்த பையன் படிக்கும்படிக்குச் சென்றிருந்தான், அதற்கு பிறகு அவன் படித்து முடித்து பிஎச்.டி பட்டத்தையும் பெற்றான், ஆனால் அந்த சபையாரோ வார்த்தையின் உறுதிப்பாட்டைப் பெற்றிருந்தனர், இவனோ ஒரு குறிப்பிட்ட கல்லூரியிலிருந்து பட்டத்தைப் பெற்றான் என்னும் உறுதிப் பாட்டைப் பெற்றிருந்தான். ஆனால் அவர்களோ பரலோகத்திலிருந்து வந்த தேவனுடைய வார்த்தையின் உறுதிபாட்டினை பெற்று அவர்கள் எதைக் குறித்து பேசினார்களோ அதை பரிசுத்த ஆவி பக்கபலமாக இருக்கும்படிக்கு அந்த உறுதிப்பாட்டைக் கொண்டவர்களாக இருந்தனர். ஆம் ஐயா, ஆகவே தேவன் அவனுக்கு அடையாளங்களை அளித்தார். ஆம் ஐயா, ஓ, அதற்காக நான் தேவனுக்கு எவ்வளவாக நன்றி செலுத்துகின்றேன்! தேவனுடைய மக்கள் எப்பொழுதுமே அதைக் கொண்டிருப்பார்கள். 45இப்பொழுது, சந்தேகத்திற்கிடமின்றி, அந்த அவிசுவாசிக்கு தேவனுடைய வார்த்தை சிறிய அளவிலே தேவைப்படுகின்றது. அந்த போதகத்திற்கு அது சரியாக பொருந்தும்படிக்கும், அதை மிகவுமாக வஞ்சனையுள்ளதாகச் செய்யும்படிக்கு அவன் அதை எடுத்து சற்று திரித்துப் போடுகின்றான். இப்பொழுது, கூறப்பட்ட பொய்களிலே மிகப் பெரிய பொய்யிலே அதிக அளவில் சத்தியமானது இருந்தது என்பது உங்களுக்குத் தெரியும். அது சரியே. நினைவில் கொள்ளுங்கள். ஒவ்வொரு ...... முதல் முதலாக கூறப்பட்ட பொய்யானது தொண்ணூற்றைந்து சதவீதம் சத்தியத்தைக் கொண்டிருந்தது, ஏதேன் தோட்டத்தில் சாத்தான் ஏவாளிட மாக கூறினபோது, “இந்த எல்லாக் காரியங்களையும் தேவன் கூறியிருக்கின்றார்,'' அவர் ”அது சரி தான்“ என அவன் ஒப்புக் கொண்டான். அவன், ”தேவன் கூறியுள்ளது எல்லாமே சரிதான்'' என ஒப்புக்கொண்டான், “ஆனால் நீ நிச்சயமாகவே சாகவே சாவதில்லை ”. என்றான். அதோ அது தான் காரியம். 46யாராவது ஒருவர் இவ்வாறு கூறலாம், “ஒரு குறிப்பிட்ட - குறிப்பிட்ட இரவன்று அவர்கள் இங்கே இந்த கூடாரத்தில் இருந்தனர்.” ஆம். “மக்கள் எல்லாரும் அதில் ஒன்று கூடி யிருந்தனர்.''ஆம். ”அவர்கள் பாமாலைகளைப் பாடினார்கள்.'' ஆம். “அதன் பிறகு போதகர் பேசினார்.''ஆம். அது சரியே. ”ஆனால் பிறகு என்ன நடந்ததென்று உங்களுக்குத் தெரியுமா? அவர்கள் தங்களிடையே ஒரு பாட்டிலை (bottle) பகிர்ந்து கொண்டார்கள், அதன் பிறகு எல்லாருமே குடித்து வெறித்திருந்தனர்.“ அது தவறு. புரிகின்றதா? ஆவியானவர் கீழே இறங்கினார், அவர்கள் எல்லோரும் குடித்தவர்கள் போலானார்கள். பாருங்கள்? அது சிறிதளவிலான வித்தியாசம் தான், உங்களால் காணமுடிகின்றதா, அவர்கள் பாட்டிலை (bottle) தங்கள் மத்தியில் ஒருவருக்கொருவர் அளித்துக் கொண்டிருக்கவில்லை. ஆனால் ஒரு ஆவிக்குரிய ஆசீர்வாதமானது மக்கள் மீது இறங்கினது. அவர்கள் தள்ளாடினது உண்மை தான். அவர்கள் கீழே விழுந்தார்கள். அவர்கள் அந்த விதமாக கூச்சலிட்டு ஆர்ப்பரித்தார்கள். ஆனால் அதைச் செய்தது ஒரு பாட்டில், குப்பி அல்ல. அது பரிசுத்த ஆவியானவர் தம்முடைய வார்த்தையை அடையளாங்கள் பின்பற்றும்படிக்குச் செய்து அதை உறுதிப்படுத்தல் ஆகும். பாருங்கள்? பாருங்கள்? பாட்டிலைத் தவிர்த்து மற்ற எல்லாம் சரியாக இருக்கும்படிக்கு இருந்தது. பாருங்கள்? இப்பொழுது, நீங்கள் அங்கே இருந்தீர்களா? “ஆம்.'' மக்கள் அங்கே இருந்தார்களா? ”ஆம்“ அவர்கள் தள்ளாடினார் களா?”ஆம். ஆம்.“ இந்த எல்லாம் நடந்ததா? ”ஆமாம்“. அந்த ஒன்றைத் தவிர மற்ற எல்லாமே சரியானதுதான். 47ஆகவே அந்த விதமாகத்தான் அந்த அவிசுவாசியானவன், அந்த ஆவி .... தேவனுடன் அடையாளம் காணப்படாத அந்த மனிதனானவன், “ஓ, இயேசு கிறிஸ்து தேவனுடைய குமாரன் என்று என்று நான் விசுவாசிக்கின்றேன். தேவன் இயேசு கிறிஸ்துவினுடைய பிதா என்று நான் விசுவாசிக்கிறேன். இந்த மற்ற எல்லா காரியங்களையும் நான் விசுவாசிக்கிறேன்” என்று கூறுவான். பாருங்கள்? ஆனால் இதினுடைய இந்த மற்றைய பாகத்திற்கு வருகையில் அப்போது அவன், “ஓ, அது மற்றொரு நாளுக்குரியது” என்பான், பாருங்கள்? அது தான் அதனுடன் உள்ள பொய் ஆகும். அது சரி. அவன் சரியான வார்த்தை யினுடைய காரியத்தில் கொஞ்சம் எடுத்து அதை சற்று திரித்து மக்களுக்கு அது வஞ்சனையுள்ளதாக செய்ய அவன் விழைகின்றான். ஆனால் என்ன? இயேசு காரியத்தை தெளிவுபடுத்தினார். அவர், “நான் அனுப்பியுள்ள செய்தியை இந்த அடை யாளங்கள் உறுதிப்படுத்தும்” என்று கூறினார். ஆம், ஐயா. 48ஒருகாலத்தில் நான் ஒரு பாப்டிஸ்ட் பிரசங்கியாக இருந்தேன், இன்னுமாக நான் பாப்டிஸ்ட் மக்களை நேசிக்கின்றேன். ஆனாலும் நான் இந்தக் காரியத்தை நான் கண்டு கொண்டேன். பாருங்கள்? இப்பொழுது, இது சரியாக - இது சரியானதாக இல்லை. இந்த பெந்தெகொஸ்தே சபையை தான், அது பரிபூரணமானது என்று நான் கூறுவதில்லை. அதில் ஒன்றுமே கிடையாது. ஆனால் இது நாம் பெற்றதிலே சிறந்ததாகும். ஆகவே நான் அதிலே தரித்து நிற்போமாக. அவ்வளவு தான். அவர்களும் விசுவாசிக்கின்றனர். அவர்களில் சிலருக்கு போதுமான விசுவாசம் இல்லாதிருக்கலாம். நான் அவர்களுடன் இருக்கின்றேன், எல்லா வார்த்தைகளும் நிறைவேற்றும்படிக்கான போதுமான விசுவாசம் அவர்களிடம் இல்லை. ஆனால் அவை நிறைவேறச் செய்யும்படிக்கான போதுமான விசுவாசத்தைக் கொண்டிருக் கின்ற யாராவது சிலருடைய வழியில் நான் ஒருபோதும் குறுக்கே நிற்கமாட்டேன். அது செய்யப்படவே முடியாது என்று கூறுகின்ற அவிசுவாசத்தின் பின்னால் நான் ஒருபோதும் மறைந்து கொள்ளமாட்டேன். அந்த மனிதன் தேவனுடைய வார்த்தையை எடுத்து அதை தேவனுடைய வல்லமையினாலே உறுதிப்படுத்துவானானால், நான், “தேவனுக்கு மகிமை! கர்த்தாவே, என்னை மேலே உயர்த்தும், விசுவாசத்தினாலே நான் பரலோகத்தின் மேஜை தேசத்திலே நான் நிற்கும்படிக்குச் செய்யும்” என்று கூறுவேன். ஆம், நான் நிச்சயமாக அதனுடனே நான் தரித்து நிற்பேன். 49தங்களுடைய கோட்பாட்டுடனே பொருந்த சிறிது மாற்றத்தைச் செய்கின்றனர். ஆனால் தேவனுடைய ஊழியக் காரனோ சரியாக அவருடைய அடையாளத்தைக் கொண்டிருக் கின்றான். பழைய ஏற்பாட்டில் ஒரு மனிதன் இருந்தான். அவர்களில் சிலர் தங்கள் பெயர்களை எழுதக்கூட முடியாதவர்களாக இருந்தனர், ஆகவே அவர்கள் ஒரு முத்திரையை வைத்திருந்தனர், அது ஒரு அடையாளமாக இருந்தது. அவர்கள் அதை அந்த விதமாக அதை முத்திரை போட்டனர். அது முடிவு பெற்ற ஒன்றாக இருந்தது. முத்திரை என்பது முடிவு பெற்ற ஒரு கிரியையாகும். “அன்றியும் நீங்கள் மீட்கப்படும் நாளுக்கென்று முத்திரையாக பெற்ற தேவனுடைய பரிசுத்த ஆவியைத் துக்கப்படுத்தாதிருங்கள்” என்று எபேசியர் 4 : 30 கூறுகின்றது. அது முத்திரைப் போடுதல் ஆகும், முடிவு பெற்ற ஒரு காரியமாகும்; அது தேவன் உங்களைக் கண்டார் என்றும் அவருக்குள்ளாக நீங்கள் அறிக்கையிட்ட அந்த உங்களுடைய விசுவாசத்தை அவர் அடையாளங்கண்டு கொண்டார் என்றும், பரிசுத்த ஆவி ஊற்றி மீட்பின் நாளுக்கென்று உங்களை முத்திரையிட்டுவிட்டார் என்பதாகும். தேவன் உங்களுக்கு பரிசுத்த ஆவியை அளித்துள்ளார் என்றும், நீங்கள் உங்களுக் குள்ளாகக் கொண்டிருக்கும் அந்த விசுவாசத்தை உறுதிப்படுத்தி, பரிசுத்த ஆவியை உங்களுக்கு அளிக்கையில் அதனுடைய உறுதிப்பாட்டினை அளிக்கின்றார் என்பதாகும். அது சரி. 50ஆகவே நீங்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றிருந்தால், “விசுவாசிக்கிறவர்களை இந்த அடையாளங்கள் பின் தொடரும்.” நிச்சயமாக. அவன் மறுதலிப்பானானால், இங்குமங்குமாக சென்று கொண்டு “இதோ பாருங்கள், அந்த மக்களுக்கு நீங்கள் ஒரு போதும் செவி கொடுக்க வேண்டாம். முந்தைய இரவு அங்கே உள்ள அந்த கூடாரத்திற்கு சென்று வந்தாயா?” என்று கூறிக் கொண்டிருக்கும் இந்த மனிதனானவன் ..... “ஆம். அஹ்-உஹ்” சரி, நாங்கள் இன்னின்னதைச் சேர்ந்தவர்களாவோம். ஆனால் அதுவோ ஒன்றுக்கும் உதவாத கீழ்தரமான மக்கள் குழு தவிர வேறெதுவும் இல்லை . அகிரிப்பாவிடமாக பவுல், “அதென்னவென்றால் 'மதபேதம்' என்று சொல்லுகிற மார்க்கத்தின்படியே எங்கள் முன்னோர்களின் தேவனுக்கு ஆராதனை செய்து” என்று கூறினது உங்களுக்குத் தெரியுமா? மதபேதம் என்றால் என்ன என்று உங்களுக்குத் தெரியுமா? ஒரு சகோதரன் “ ஆர்வ வெறி கொண்ட (crazy)” என்று கூறுகிறார் - ஆசி] ஆம். அது சரி. அவர்கள் இயேசுவிடமாக, “நீ பயித்தியக்காரன் என்று எங்களுக்குத் தெரியும்” என்று கூறவில்லையா? பைத்தியம் என்றால் “ஆர்வ வெறி கொண்ட, பித்துப்பிடித்த ” என்று அர்த்தம் பாருங்கள்? “ஆர்வ வெறி கொண்டது போல காணப்படுகின்ற ஒரு மார்க்கம்.” ஏனென்றால் நீங்கள் மரணத்தை விட்டு நீங்கி ஜீவனுக்குட்பட்டிருக்கிறீர்கள். நீங்கள் இனிமேலும் உலகத்திற்குரியவர்கள் அல்ல, ஆனால் நீங்கள் உலகத்தினின்றி அப்பால் தள்ளி வைக்கப்பட்டுள்ளீர்கள். பாருங்கள்? ஆகவே உங்கள் சிந்தையானது ஆவிக்குரியதாக இருக்கின்றது, இங்கே பூமியிலே நடந்து கொண்டிருக்கின்ற காரியங்களின் பேரில் உங்களை சிந்தனைகளை வைக்காமல் பரத்திலிருக்கின்ற காரியங்களின் பேரில் தான் உங்கள் சிந்தையை செலுத்து கிறீர்கள். உங்கள் நேசங்கள் பரத்தின் காரியங்களின் பேரில் தான் இருக்கின்றது. 51இப்பொழுது, இந்த நபர் இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார் என்பதை மறுதலிப்பானானால். இப்பொழுது அதை சற்று கவனியுங்கள். அவர்கள். “ஓ, அவர் மாறாதவர்” என்று கூறுவதை நீங்கள் கேட்கலாம். அவர் மாறாதவர் தானே? அவர் மாறாதவர்தானே? “ஆம்,'' என்று கூறுவார்கள், ”அவர் ஒரு குறிப்பிட்ட விதத்தில் மாறாதவரா யிருக்கிறார்“ என்று அவர்கள் கூறுவார்கள். எந்த விதத்தில்? பாருங்கள்? எந்த விதத்தில்? ”ஓ, என்னால் அதை .... அவர் இன்னுமாக இரட்சிக்கின்றார் என்று நான் விசுவாசிக் கின்றேன்.“ என்பார்கள். பாருங்கள்? சுகமளித்தலைக் குறித்து என்ன? ”ஓ, கிடையாது. அவர் அதைச் செய்வதில்லை '' என்பார்கள். இப்பொழுது, அவர் இங்கே பூமியில் இருந்தபோது அவர்கள், “அவரால் சுகமளிக்க முடியும், ஆனால் அவரால் இரட்சிக்க முடியாது'' என்று கூறினார்கள். ஆனால் இப்பொழுதோ அவர்கள், ”அவரால் இரட்சிக்க முடியும். ஆனால் அவரால் சுகமளிக்க முடியாது“ என்று கூறுகின்றனர். பாருங்கள் அதைப் பேசுவது பிசாசாகும். அவன் அன்றொன்றும் இன்றொன்றுமாக எதிரெதிர்மாறான நிலையைக் கொண்டிருக் கின்றான். ஆனால் இயேசு கிறிஸ்து தாமே, அந்த அபிஷேகிக்கப் பட்ட அவர்தாமே நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக் கிறார், அதே சுகமளிப்பவராக மாறாதவராக இருக்கின்றார். அற்புதங்களைச் செய்வது நீங்கள் அல்ல. இல்லை. அவர்கள், “நீ இதைச்செய்வதை நான் காணட்டும்” என்று கூற விரும்புகின்றனர். இப்பொழுது, தேவன் என்னிடமாக எனக்காக நீ அதைச் செய் என்று ஒருபோதும் கூறுவதில்லை . அவர் ஏற்கெனவே அதைச் செய்துவிட்டார். நான் செய்ய வேண்டியதாக இருக்கின்ற ஒரே காரியம் என்னவென்றால் அவருடைய வார்த்தையை எடுத்து அதனுடனே அப்படியே தரித்து நிற்பது தான், அப்பொழுது அவர் அதை நிறைவேறும்படிக்குச் செய்வார். அது சரி. அது முற்றிலும் சரியே. அது நீங்கள் அல்ல. அது உங்களுக்குள் இருக்கின்ற தேவனாகும். 52இயேசு கூறின விதமாக, “கிரியைகளைச் செய்வது நானல்ல; என்னிடத்தில் வாசமாயிருக்கிற பிதாவானவரே இந்தக் கிரியைகளை செய்து வருகிறார். மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; பிதாவானவர் செய்யக் குமாரன் காண்கிறதெதுவோ, அதையேயன்றி, வேறொன்றையும் தாமாய்ச் செய்யமாட்டார்; அவர் எவைகளைச் செய்கிறாரோ, அவைகளைக் குமாரனும் அந்தப்படியே செய்கிறார்.'' அவர் முதலாவதாகக் கண்டார், ஒரு தரிசனத்தைக் கண்டார், பிதா அவரிடமாக என்ன கூறினாரோ அதைக் கண்டார். பரிசுத்த யோவான் 5: 19 என்று நான் நினைக்கின்றேன், நீங்கள் அதை வாசியுங்கள், 5:19, ஆம். நீங்கள் அதை வாசிப்பீர்களானால், அவர் ”நான் என்ன செய்ய வேண்டுமென்று பிதாவானவர் காண்பிப்பதெதுவோ அவைகளை அந்தப்படியே நானும் செய்வேன்“ என்று கூறுகின்றார். 53இப்பொழுது நாம் காண்பது என்னவென்றால், அது நாம் - நாம் .... இயேசு கிறிஸ்து அதே விதமாகவே மாறாதவராக இருக்கின்றார் என்பதை அவன் மறுதலிப்பானானால் ..... அவராலே இருக்க முடியாதிருக்கின்ற ஒரே ஒரு காரியம் மாத்திரமே உண்டு. அவருடைய மாம்ச பிரகாரமான, ... to be translated .... நாம் அவருடைய வார்த்தையை ஏற்றுக்கொண்டு, அதை நம்முடைய இருதயத்தில் விசுவாசித்து, அதை அதற்குள்ளாக ஏற்றுக்கொண்டு, அதை பின்பாக தள்ளிவிடாமல் ஆனால் சரியாக அது நடக்கத்தான் போகின்றது என்று விசுவாசித்துக் கொண்டிருப்போமானால், இப்பொழுதும், நம்முடைய அறிக்கையின் பேரிலே பரிந்து பேச பிரதான ஆசாரியராக அவர் அங்கே இருக்கின்றார். உண்மையான ஆபிரகாமின் வித்து அந்த வார்த்தையை அப்படியே பற்றிக்கொண்டிருக்கும். எவ்வளவு காலம் எடுத்துக்கொண்டாலும் பரவாயில்லை, அவர் அதை நிறைவேறும்படிக்குச் செய்வார். அதில் ஒரு சிறு அதிர்வு கூட இருக்காது, ஒன்றுமே இருக்காது, அவர் அதை நிறைவேற்றுவார். அது சரி. 54இப்பொழுது, ஒரு போலியாள் கூட, “இல்லை . அது அவ்விதமாக இல்லை” என்று கூறலாம். அப்படியானால் இந்த கட்டளையை எவ்வளவு காலமாக அவர்கள் மறுதலிக் கின்றார்களோ, அவர்களால் அதைக் காண்பிக்க முடியவில்லை என்பதை அது காட்டுகின்றது. அந்த .... அவர்களுடைய கட்டளையானது முத்தரிக்கப்பட்டாயிற்று. அவர்கள் அதை உங்களுக்கு காண்பிக்க முடியாது ஏனென்றால் அவர்கள் மறுதலிப்பதினால் தான், அது ..... ஒரு - ஒரு அதிகாரியைப் போல நான் “ஆம், இதோ பாருங்கள், நான் அமெரிக்க ஐக்கிய நாட்டின் காவல் துறையைச் சார்ந்தவனாவேன். நான் ஒரு காவல் அதிகாரி என்று எனக்குத் தெரியும். இதோ இங்கே ஒரு சட்டம் இருக்கின்றது அது ஒரு அதிகாரியானவன் தன்னுடைய ஆதாரச் சான்றை வைத்திருக்க வேண்டும் என்றும் அமெரிக்க ஐக்கிய நாட்டின் முத்திரை அந்த ஆதாரச்சான்றில் போடப்பட்டு அதை அவன் வைத்திருக்க வேண்டும் என்று கூறுகின்றது” என்று கூறுவேன். நீங்கள் “உம், அது கடந்து போன காலத்திற்குரிய ஒன்றாகும். இன்றைக்கு அதை நாங்கள் பெற்றிருக்க வேண்டிய அவசியம் இல்லை ” என்று கூறுகிறீர்கள். அவன் ஒரு போலியாள் ஆவான். அவன் கூறுவது அவ்வளவு தான். அவன் சரியாக இல்லை. அவனுக்கு கட்டளையானது அளிக்கப்படவில்லை. அவன் அனுப்பப்பட்டவன் அல்ல. ஆகவே இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர் என்று மறுதலிக்கும் எந்த ஒரு நபரும், “விசுவாசிக்கிறவர்களை இந்த அடையாளங்கள் பின் தொடரும்” என்பதை மறுதலிக்கும் எந்த ஒரு நபரும், கட்டளையின் முத்திரையிடப்படாத ஏதோ ஒரு நியமனப் பத்திரத்துடனே காரியத்தைச் செய்ய அவன் முயற்சித்துக் கொண்டிருக்கின்றான். இப்பொழுது அது முற்றிலும் உண்மையே. நிச்சயமாக அது உண்மையானது அல்ல, அது தேவனாலே அனுப்பப்பட்டதாக இருக்க முடியாது, ஏனென்றால் அவன் அந்த அதே முத்திரையை அவன் மறுதலிக்கின்றான். அவன் கொண்டிருக்க வேண்டிய அந்த அதே கட்டளையின் உறுதிப்பாட்டினை அவன் மறுதலிக்கின்றான். “நீ அந்த முத்திரையை பெற்றிருக்க வேண்டிய அவசியம் இல்லை” என்று ஒரு காவல்துறை அதிகாரி கூறுவானானால், 55நீயே அதைக் கொண்டிருக்க வேண்டியவனாக இருக்கின்றாய், “இதோ அது இருக்கின்றது, நீ அந்த முத்திரையை வைத்திருக்க வேண்டும் என்று அந்த புத்தகம் கூறுகின்றது. இதோ, அமெரிக்க ஐக்கிய நாட்டின் சட்டங்களில் அது இருக்கின்றது. அது ஒரு அதிகாரியானவன் அந்த முத்திரையை வைத்திருக்க வேண்டும் என்று கூறுகின்றது.'' அவன் அந்த முத்திரையை வைத்திருக்காவிடில், அப்பொழுது அவன் காவல் துறையைச் சார்ந்தவனே அல்ல. அவனை காவல் துறையைச் சேர்ந்தவனாக அங்கீகரிக்காதீர்கள். ஏனென்றால் அவன் காவல் துறையைச் சேர்ந்தவனே அல்ல, ஏனென்றால் அவன் அந்த முத்திரையை வைத்திருக்க வேண்டும் என்று சட்டப்புத்தகம் கூறுகின்றது. இயேசு, “விசுவாசிக்கிறவர்களை இந்த அடையாளங்கள் பின் தொடரும். விசுவாசிக்கிறவர்களைப் பின் தொடரும்” என்று கூறியுள்ளார். “தொடரலாம் ; ஒருக்கால் தொடரலாம் ; அவர்களில் சிலரைத் தொடரும்'' என்று கூறவில்லை . அது 'விசுவாசிக்கிறவர்களை அவைகள் தொடரும்” என்று கூறுகின்றது. அவர்கள் அனுப்பப்பட்டுள்ளனர் என்பதற்கான கட்டளையின் உறுதிப்பாடு அது தான். ஆமென். அது எனக்கு பிடிக்கும். அதை அறிந்திருப்பது எனக்கு நல்லுணர்வை அளிக்கின்றது. ஆம் ஐயா. ஆகவே அந்த கட்டளையானது, பரிசுத்த ஆவியின் முத்திரையானது என் இருதயத்திற்குள்ளாக வந்திருக்கின்றது என்று எனக்குத் தெரியும். அது சரி. 56உண்மையான விசுவாசியாக இருக்கின்ற ஒவ்வொரு விசுவாசியும் அந்த பலனை மறுதலிக்கின்ற ஒரு மனிதனை காண்பான் என்று எனக்குத் தெரியும். வேதாகமம், “கடைசி நாட்களில் அவர்கள் தேவபக்தியின் வேஷத்தைத் தரித்து அதின் பலனை மறுதலிப்பார்கள். இப்படிப்பட்டவர்களை நீ விட்டு விலகு. அதை ஒரு போதும் ஏற்றுக்கொள்ளாதீர்கள்” என்று கூறுகின்றது. சரியே. அவர்கள் மிகப்பெரிய சபைகளையும் அருமையான ஸ்தாபனங்களையும், மிகப்பெரிய கம்பீரமான, மற்றும் மிகவும் அழகான ஸ்தாபனங்களையும் இன்னும் அதைப் போன்றவைகளையும் கொண்டிருப்பார்கள். இங்கே கவனியுங்கள், கடந்த இரவு, இங்கே ஃபீனிக்ஸில் வாலிபப் பெண்களும் பையன்களும் அங்கே இந்த புதிய பூகிலி ஊகிலி இசை, மேலும் என்னபெயரைக் கொண்டு அழைக்கப் பட்டாலும் சரி அங்கே இருக்கின்ற அந்த இசையை இசைத்துக் கொண்டு அந்த இசையில் லயித்துப்போய் ஆட்டம் போட்டு தெருவில் ஓடி வரும் அளவிற்கு அந்த இசையுடன் மிகவுமாக இணைந்திருந்தனர், காவல் துறையினர் அங்கே வந்து அவர்களை அழைத்துச் செல்ல வேண்டியிருந்தது. அவர்கள் மிகவுமாக பிசாசின் சக்தியின் கீழாக இருந்தனர், ஆம், அது மிகவும் பிரபலமானதாக இருக்கின்றது. 57ஆனால் ஒரு மனிதனை பரிசுத்த ஆவியின் வல்லமையின் கீழாக ஆவியிலே ஒரு தடவை நடனம் ஆடும்படிக்குச் செய்யுங்கள்! அது சரி. அது தான். 'விசுவாசிக்கிறவர்களை தேவனுடைய அடையாளங்கள் பின் தொடரும்“ ஆம். நான் தேவனால் அனுப்பப்பட்டவன் என்று கூறி பிறகு அவருைைடய கட்டளையை மறுதலிக்க முடியாது - முடியாது. தேவனால் அனுப்பப்பட்ட சிலரை இப்பொழுது நாம் பார்த்து, அவர் தம்முடைய விசுவாசிகளை எப்பொழுதுமே அடையாளப்படுத்திக் காண்பித்தாரா என்று கண்டறிந்து கொள்வோம். இப்பொழுது கவனியுங்கள். மோசேயை நாம் எடுத்துக் கொள்வோம். மோசே தன்னுடைய வாழ்க்கையில் அழைப்பைக் கொண்டிருந்தான், அது உண்மை , ஆனால் அவன் அனுப்பப்படவில்லை. தான் அனுப்பப்பட்தாக அவன் நினைத்திருந்தான். ஆகவே எப்படிப் பட்ட ஒரு தோல்வியை சந்தித்தான் என்று பாருங்கள். ஆனால் தேவன் அவனை எரிகிற அக்கினிச் செடியிலிருந்து அவனை அனுப்பிய போது .... அவன் அங்கே பார்வோனிடத்தில அவனுடைய வேத கலாசாலையில் இருந்த போது, அவனுடைய ஆதாரச் சான்றுகளுடனே அவன் வெளியே வந்தான். அது கிரியை செய்யவில்லை. தேவன் அதை அங்கீகரிக்கவில்லை . கவனியுங்கள், அவன் அதைச் செய்வதற்கான கட்டளையைப் பெறாமல் அவன் அங்கே சென்று ஒரு மனிதனைக் கொன்றான். பிறகு அவன் எகிப்தை விட்டு ஓட வேண்டியதாயிருந்தது. பிறகு அவன் அங்கே சென்று அதைச் செய்வதற்கான கட்டளையை அவன் பெற்று முழு எகிப்திய சேனையையும் கடலில் மூழ்கடித்தான், அதைக் குறித்து ஒன்றுமே கூறப்படவில்லை. அது தான் வித்தியாசமாகும். ஒரு மனிதனைக் கொன்று அதினாலே ஓடிப்போக வேண்டியதா யிருந்தது. ஓ, என்ன ஒரு மோசமான ஒரு சூழ்நிலையில் அவன் இருந்தான். ஏனென்றால் அவன் அதை ஒரு கட்டளையும் இல்லாமல் அதைச் செய்ததினால் தான். ஆனால் ஒரு கட்டளையுடனே அவன் அங்கே சென்ற போது ஒரு முழு இராணுவத்தையே கடலில் மூழ்கச் செய்தான், அவருக்கென்று தேவனுக்கு மகிமையை பெற்றுத் தந்தான். அதைக் காணமுடிகின்றதா? 141 58மனிதர் நகைப்பிற்கிடமான விதத்தில் நடந்து கொள்ளும் படிக்கு தேவன் செய்கிறாரல்லவா! அந்த வயதான மனிதன், மிகவும் மெருகேற்றப்பட்ட விதத்தில் எல்லாவிதமான கல்லூரி பட்டப்படிப்புகளுடன் அங்கிருந்து வெளியே வந்தான். ஆனால் பிறகு, ஓ, இங்கே எண்பது வயதுள்ளவனாக அதைக் குறித்து அவன் சிந்தித்துக் கூட பார்க்கவில்லை. அடுத்த நாள் காலையில், இதோ அவன் கழுதையை சேணம் பூட்டி அதன் மேல் தன் மனைவியை உட்கார வைத்து தன் சிறு பிள்ளையை அவள் மடியில் வைத்து எகிப்தை நோக்கி செல்கிறான், தன்னுடைய பெரிய வயதான தாடி காற்றில் இந்த விதமாக வீசிக்கொண்டிருந்தன, தன்னுடைய கையில் ஒரு கோணலான கோலை வைத்துக்கொண்டு அங்கே சென்று கொண்டிருந்தான். “மோசே, எங்கே செல்கின்றாய்?'' எகிப்திற்கு செல்கிறேன், அதை மேற்கொள்ளும்படிக்குச் செல்கிறேன்.'' ஒரே மனித படையெடுப்பு ஏன்? காரியம் என்னவென்றால் அவன் அதைச் செய்து முடித்தான். சரியா ஒரே ஒரு மனிதன் ரஷியாவை படையெடுத்து முழுமையாக மேற்கொள்ளச் செய்வது போன்றதாகும். அது என்ன? அவன் ஓடி .... அவன் மிக உயர்ந்த அந்தஸ்துடைய ஒரு அதிகாரியாக இருந்தபோது, எகிப்திலே பார்வோனுக்கு அடுத்ததான நிலையில் இருந்ததிலேயே மிக உயர்ந்த ஒரு பதவியில் அவன் இருந்தபோதிலும் அவன் எகிப்தை விட்டு ஓடிப்போனான். ஏனென்றால் இஸ்வேல் புத்திரரை விடுவிக்கும்படிக்கான கட்டளையை அவன் கொண்டிருக்கவில்லை. ஆனால் பிறகு அவன் திரும்பிச் செல்கிறான். கட்டளையைப் பெற்றுக் கொண்டு அந்த முழு காரியத்திற்கும் எதிராக ஒரே மனிதனாக செல்கின்றான், சென்று அதைச் செய்தும் முடித்தான். எப்படி? அவன் ஒரு கட்டளையைக் கொண்டிருந்தான், அதின் உறுதிப் பாட்டையும் அவன் கொண்டிருந்தான். தேவன் தன்னை அனுப்பியுள்ளார் என்பதையும் அவனால் நிரூபிக்க முடிந்தது. ஆமென். 59“மோச, எதைக் கொண்டு அதை நீ செய்யப்போகிறாய்?” என் கையில் இருக்கின்ற இந்த கோணலான கோலைக் கொண்டு தான் செய்யப்போகிறேன்.'' “என்ன செய்யப்போகின்றாய்?” “இது நான் பெற்றுள்ள என்னுடைய கட்டளை, ஊழியமாகும்.' “என்ன ?” ''அவர்களுக்கு முன்பாக செய்து காண்பிக்கும்படிக்கு தேவன் எனக்கு இரண்டு அடையாளங்களை அளித்துள்ளார். அவ்வளவு தான். இதைச்செய்யும்படிக்கு அவர் என்னிடம் கூறியுள்ளார். நான் அங்கே செல்வேனானால் 'இந்த அடையாளங்கள் பின் தொடரும்“ என்று கூறினார். மேலும் அவர், பார்வோனுக்கு முன்பாக அந்த கோலைப் போடு , என்ன நடக்கிற்தென்று பார். அது சர்ப்பமாக மாறும். அப்பொழுது பார்வோனே, ”கர்த்தர் உரைக்கிறதாவது, என் ஜனங்களைப் போகவிடு...'' என்று கூறு“ என்று என்னிடமாகக் கூறினார். 60மோசே அங்கே சென்று அநத் கோலைக் கீழே போட்டான். அந்த மந்திரவாதிகள் அங்கே வந்தனர், அதேகாரியத்தை செய்து காண்பித்தனர். அப்பொழுது தேவன் அவனுடைய கட்டளையை உறுதிப்படுத்திக் காண்பித்தார். அவனுடைய சர்ப்பம் மற்ற எல்லா சர்ப்பங்களையும் விழுங்கிப் போட்டது. “அந்த சர்ப்பங்கள் எங்கே சென்றன'' என்று அப்பொழுதாவது நீங்கள் சிந்தித்ததுண்டா? அவை எங்கே சென்றன? அந்த கோல்களுக்கு என்ன ஆயிற்று? பாருங்கள்? அது, மோசேயின் சர்ப்பம் அவை எல்லாவற்றையும் தின்று போட்டது. ஏனென்றால், அது என்னவாக இருந்தது? ஒரு உறுதிப்பாடாகும். ஆமென். அல்லேலூயா! அவன் தன்னுடைய கட்டளையின் உறுதிப்பாட்டினைக் கொண்டி ருந்தான். அவன் அதை செய்து முடித்தான். அவன் இஸ்ரவேல் புத்திரரை வெளியே கொண்டு வந்தான், செங்கடல் அவன் வழிக்கு குறுக்கே வந்தது, அது வழி விட்டது. 61ஏன்? அவன் கட்டளையையும் அந்த கட்டளையின் உறுதிப்பாட்டினையும் அவன் கொண்டிருந்தான். தேவன் அவனோடு இருந்து அடையாளங்களையும் அற்புதங்களையும் செய்தார். ஆகவே, ஒரு மனிதன் இயற்கைக்கு மேம்பட்ட தேவனால் கட்டளை கொடுக்கப்பட்டு ஊழியத்தில் அமர்த்தப்பட்டால், தேவனுடைய இயற்கைக்கு மேம்பட்ட வல்லமையானது அந்த இயற்கைக்கு மேம்பட்ட கட்டளையோடே இருக்கும். பி.எச்.டி (Ph.D.,) எல்.எல்.டி. (LL.D) அல்ஜீ ப்ரா மற்றும் அந்த எல்லா காரியங்களிலிருந்து நீங்கள் என்ன கற்றுக்கொள்கிறீர் களோ அது அல்ல. அது நீங்கள் பிரசங்க பீடத்தில் ஒரு கன்று குட்டியைப் போல “ஆஆ ஆம்மேன்' என்று கூறும்போது நீங்கள் உபயோகிக்கும் அருமையான இலக்கண நடையையும் சொற்பொழிவையும் உறுதிப்படுத்தும். ஆனால் நான் உங்களுக்கு ஒன்றை கூறுவேனாக. ஆனால் என்னும் தேவனுடைய கட்டளையின் உறுதிப்பாட்டை நீங்கள் பரிசுத்த ஆவியால் அளிக்கப் பெற்றிருப்பீர்களானால், ”விசுவாசிக்கிறவர்களை இந்த அடையளாங்கள் பின் தொடரும்.“ அந்த விதமான சொல்லமைப்பை கூறினதற்காக சற்று பொறுத்துக் கொள்ளுங்கள். 62உறுதிப்பாடு. தேவன் உறுதிப்படுத்தினார், ஏனென்றால் அவர் இயற்கைக்கு மேம்பட்ட தேவனாக, இயற்கைக்கு மேம்பட்ட விடுதலைக்காக இயற்கைக்கு மேம்பட்ட வல்லமையை அளித்தார். அதை நான் விசுவாசிக்கிறேன். தேவன் இன்றைக்கு கல்வியைக் கொண்டு தம்முடைய மக்களை விடுவிக்கப்போவதில்லை. அவ்விதம் செய்வதாக அவர் ஒரு போதும் வாக்குத்தத்தம் செய்யவில்லை. வேதாகமக் கல்வி அறிவைக் கொண்டு அவர் விடுவிக்கப்போவதில்லை. அவ்விதம் செய்வதற்காக அவர் ஒரு போதும் வாக்குத்தத்தம் செய்யவில்லை. விஞ்ஞானத்தைக் கொண்டு அவர் அவர்களை விடுதலை செய்யப் போவதில்லை. அவ்விதம் செய்வதாக அவர் ஒரு போதும் வாக்குத்தத்தம் செய்யவில்லை. ஆனால் அவர்களை அவர் வல்லமையினால், அவர்களுடைய ஜீவியங்களை மாற்றி தேவனுடைய பிள்ளைகளாக அவர்கள் உருவாக்கும் இயற்கைக்கு மேம்பட்ட வல்லமையால் விடுவிப்பார். ஆமென். மோசே ஒரு கட்டளைப் பெற்றிருந்தான். தன்னுடைய கட்டளையை உறுதிப்படுத்த அடையளாங்களை அவன் கொண்டிருந்தான். இப்பொழுது, இயேசுவும் அதே விதமாகவே, “இந்த அடையாளங்கள்!” என்று கூறினார். மோசே, “நான் அவர்களிடமாக என்ன கூறுவது? தங்கள் பிதாக்களின் தேவன் தான் அனுப்பியுள்ளார் என நான் எப்படியாக அவர்களிடம் கூறுவது?” என்று கேட்டான். “உன் கையிலிருக்கிறது என்ன?” என்றார். “ஒரு கோல்” என்றான். “அதைத் தரையிலே போடு. உன் கையை உன் மடியிலே போடு, வெளியே வா, அவர்களுக்கு தெய்வீக சுகமளித்தலை பிரசங்கம் பண்ணு ” என்று கூறினார். அது ஒரு உறுதிப் பாடாகும். நிச்சயமாக, “நான் உனக்கு இரண்டு அடையாளங் களை அளிப்பேன்”. என்றார். 63இப்பொழுது, அந்த அதே தேவன் மாற முடியாது. இன்றைக்கு மக்களிடமாக இருக்கின்ற இந்த எல்லா காரியங் களினின்றும் இந்த நரகத்திற்கொப்பான எகிப்திய அடிமைத் தனத்திலிருந்து மக்களை விடுவித்து வெளியே கொண்டு வர தம்முடைய சபையை அவர் அனுப்பின போது, “விசுவாசிக் கிறவர்களை இந்த அடையாளங்கள் பின் தொடரும்” என்று கூறினார். அந்த வார்த்தை அங்கே பரப்பிக் காண்பிக்க ஒரு போதும் பயப்படவே வேண்டாம், ஏனென்றால் அது சாத்தியமாகும். அது தேவனுடைய வார்த்தையாகும். பிசாசு அந்த வார்த்தையை உங்களுக்கு விளக்கிக் காண்பித்து அதிலிருந்து நீங்கள் விலகும்படிக்கு செய்ய அவனை ஒருபோதும் அனும் ஸதக்க வேண்டாம். ஏனென்றால் அவ்விதம் செய்வது சரி அல்ல. அவர் தம்முடைய வார்த்தையைக் காத்துக் கொள்கிறார். இப்பொழுது, எனக்குள் இருக்கின்ற எல்லா வற்றைக் கொண்டும் நான் அதை விசுவாசிக்கின்றேன். 64எலியா அனுப்பப்பட்டான். அந்த காலை வேளையிலே அவன் இருப்பதை என்னால் காண முடிகின்றது. அவனும் யேசபேலும் ஒருவருக்கெதிராக ஒருவர் நேரடியாக பேசுவதை என்னால் கற்பனை செய்து பார்க்க முடிகின்றது. ஆனால் அந்நாளிலே அவன் வந்து கொண்டிருந்தான், வழுக்கை தலையைக் கொண்ட ஒரு சிறு மனிதன், அவனுடையதாடி வளர்ந்து கீழே தொங்கிக்கொண்டிருந்தது. அந்த காலை நேரத்தில் அவன் சமாரியா செல்லும் சாலையில் அவன் வந்து கொண்டிருந்தான். அவனுடைய கண்கள் வானத்தை நோக்கிப் பார்த்துக்கொண்டிருந்தன; அவனுடைய முகத்தில் புன்னகை இருந்தது. அந்த பழைய கோலானது சாலையை தட்டிக் கொண்டிருந்தது. ஆனால், சகோதரனே, அவன் “கர்த்தர் உரைக்கிறதாவது” என்பதைக் கொண்டிருந்தான். “கர்த்தர் உரைக்கிறதாவது.” அவன் நேராக ஜனாதிபதி அல்லது அந்த ராஜாவிற்கு நேராக நடந்து சென்று “வருவதாக என்று நான் அதை அழைத்தாலொழிய வானத்திலிருந்து பனி வராதிருக்கும்” என்றான். அது என்னவாயிருந்தது? அவன் ஒரு கட்டளையைக் கொண்டிருந்தான். அடுத்த நாள் காலையில் மழை பெய்ததா? இல்லை. அந்தக் கட்டளையின் உறுதிப் பாட்டை அவன் கொண்டிருந்தான். பாருங்கள்? அவர், “எலியா, நீ அங்கே மேலே ஏறிப்போய் உட்கார்ந்து கொள். உன்னை போஷிக்கும்படிக்கு சில porter மற்றும் வேலையாட்களுக்கு கட்டளையிட்டுள்ளேன்” என்றார். ஆகவே காகங்கள் அவனை போஷித்தன. 65அவன் அந்த மலையின் மீது அவன் இருந்த போது, ஒரு நாளிலே, அந்த ராஜா, “ஓ, அந்த ஆள் ஒன்றுமேயில்லாத, பிரயோஜனமற்றவன் ஆவான், நான் ஐம்பது மனிதரை மேலே அனுப்புவேன். அவன் ஒரு அதிதீவிர மூடபக்தி வைராக்கியம் கொண்டவன் தவிர வேறொன்றுமே அல்ல. அவன் இங்கே இருந்து கொண்டு என் மனைவி யேசபேலைக் குறித்தும், அவன் போட்டிருக்கின்ற அழகு வர்ணங்கள் மற்றும் அதைப் போன்ற பிற காரியங்களைக் குறித்தும், இந்த நவீன வாழ்க்கையைக் குறித்த எல்லாவற்றைக் குறித்தும் அவன் பேசிக்கொண்டிருந்தது நமக்குத் தெரியுமல்லவா?” என்றான். அந்த முதல் குடிமகனாகிய யேசபேலின் வாழ்க்கை முறையை முன்னுதாரணமாகக் கொண்டு வாழ்தல், நம்முடைய பெந்தெகொஸ்தே மக்களில் அநேகம் பேர் செய்து கொண்டிருப்பது போலவே தான்! ஆமாம், அது உண்மையே. நம்முடைய பெந்தெகொஸ்தே பெண்கள் தங்கள் தலைகளில் பெரிய வகையில் வாட்டர் ஹெட் முடி அலங்காரம் போன்று வைத்து தலைமுடியை அமைத்தல், இன்னும் அதைப் போன்ற காரியங்களை செய்தல், ஆம், ஆமாம், முகத்தில் வர்ணங்கள் பூசிக்கொள்ளுதல், அழகொப்பனை, மேக்அப் செய்து கொள்ளுதல், குட்டைக்கால் சட்டைகளை அணிதல். வேதாகமமோ, “அது தேவனுடைய பார்வையில் அருவருப் பான ஒன்றாகும்” என்று கூறுகின்றது. அதை நீங்கள் எப்படி செய்யலாம்? அது உண்மை . என்ன, உங்களுக்குத் தெரியும், நீங்கள் “சகோதரி” என்று கூறிக்கொண்டு குட்டை தலை, பாப் முடி வைத்திருப்பீர்களானால், ஏதோ ஒன்று விழுந்த நிலையில் உள்ளது. வேதாகமம் கூறுகிறது ..... 66இப்பொழுது, பெந்தெகொஸ்தே பெண்களாகிய நீங்கள் அந்த முக ஒப்பனையை போடமாட்டீர்கள். அதைக்குறித்த எதுவுமே வேதாகமத்தில் இல்லை. ஆனால் அப்படியாக இருப்பினும் நீங்கள் உங்கள் தலைமயிரை கத்தரித்துக் கொள்கிறீர்கள். வேதாகமம் , “தன் தலை மயிரை வெட்டுகின்ற ஸ்திரீயானவள் கனவீனமானது” என்று கூறுகின்றது. நீங்கள் அந்த குட்டைக் கால் சட்டைகளை அணிந்து அல்லது அந்த பழைய ... என்ன ஒரு ... பாருங்கள்? அது என்னவாயிருந்தாலும் சரி, அது ஒரு மனிதனின் ஆடையைப் போல காணப்படுகிறது. மேலும் வேதாகமமானது அந்த விதமான ஆடைகளை அணியும் எந்த ஒரு பெண்ணும் “தேவனுடைய பார்வையில் அருவருப்பானதல்லவோ” என்கிறதே. வேறுவிதமாகக் கூறுவோமானால், “அது - அது தேவனுக்கு துர்நாற்றமாயிருக்கின்றது. அது கெட்டதாகக் காணப்படுகின்றது.'' என்பதாகும். ஆகவே நீங்கள் உங்களுக்குள்ளாக தேவனாகிய பரிசுத்த ஆவியைப் பெற்றிருப்பீர்களானால், நீங்கள் இன்னுமாக தொடர்ந்து அவைகளை அணிந்து பரிசுத்த ஆவியைப் பெற்றுள்ளோம் என்று எப்படி உரிமை கோரலாம்? [சபையார் 'ஆமென்” என்கின்றனர் - ஆசி] என்ன, உங்களோடு ஏதோ தவறு ஒன்று இருக்கின்றது என்று உங்கள் சொந்த ஜீவியமே உறுதிப் படுத்துகின்றது. அது சரியே. அது உங்களை சுட்டெரிக்கின்றது என்பது எனக்குத் தெரியும். ஆனால் இன்றிரவில் காரியமானது என்ன என்று நான் - நான் உங்களுக்குக் கூறுகிறேன். இன்னும் அதிகமான வாட்டி வதைத்தல் உங்களுக்குத் தேவைப்படுகின்றது. இன்னுமாக சாட்டையடி தேவைப்படுகின்றது. அது சரி. நாம் அந்த காரியங்களைக் குறித்து பேசாதது தான் பிரச்சனையாகும். சகோதரனே, இதை நான் உங்களுக்குக் கூறட்டும், நீங்கள் இன்னும் தொடர்ந்து மேலே செல்ல வேண்டுமானால் முதலாவதாக உங்கள் (ABC) அடிப்படையானவைகளை கற்றுக் கொள்ள வேண்டியவர்களாக இருக்கின்றீர்கள். உங்களுக்குப் புரிகின்றதா, அது முற்றிலும் உண்மையே. தேவனுடைய வார்த்தை சரியானதே என்று எப்பொழுதுமே விசுவாசிக்க வேண்டியவர்களாக இருக்கின்றீர்கள். அது என்னவாக இருந்தாலும் சரி, தேவனுடைய வார்த்தையுடன் ஒப்பிட்டுப் பார்க்க மாத்திரம் செய்யுங்கள். ஆம், ஐயா. 67அங்கே அந்த மலையின் உச்சியில் எலியா தங்கியிருந் தான், அப்பொழுது தேவன் “இதோ பார், உன்னை யாரும் தொந்தரவு செய்யமாட்டார்கள். அந்த மக்கள் மனந்திரும்பும் வரைக்குமாக நான் உன்னை அங்கே மேலே அனுப்பப் போகிறேன்” என்றார். “ஓ” என்றான் ஆகாப். அவன் “நாங்கள் எந்தவிதமான மனந்திரும்புதலையும் செய்யவேண்டியதில்லை. அந்த வயதான மூட பக்தி வைராக்கியம் கொண்ட பைத்தியக்காரன் தான் எதைக்குறித்து பேசுகிறான் என்பதைக் கூட அறியாதிருக் கிறான். அந்த பரிசுத்த உருளையர்களில் அவனும் ஒருவனாவான். நாம் ...... தெரிந்தெடுக்கப்பட்ட சிறந்த பயிற்சியுடைய ஐம்பது மனிதரை என்னிடம் அனுப்புங்கள். 'அங்கே மேலே சென்று அந்த அதி தீவிர மூட பக்தி வைராக்கியம் கொண்ட கிழவனை கீழே கொண்டு வாருங்கள்” என்று கூறினான். கட்டளைப் பெற்ற அந்த இராணுவ அதிகாரி “சரி ஐயா. உம் கட்டளையை நான் பெற்றுக்கொண்டேன் ஐயா. அவனை உடனடியாக இங்கே திரும்பவும் கொண்டு வருகிறேன்” என்று கூறுவதை என்னால் காணமுடிகிறது. இதோ அவன் வருகின்றான், அணிவகுத்து வந்து நிற்கிறான், அந்த இரும்பானது தரையை சத்தமாக தட்டுகிறது. அந்த மிகப்பெரிய பட்டயங்கள், ஈட்டிகள், ஆகாபின் பாதுகாவலர்களில் மிகவுமாக விசேஷித்தவர்கள் ஐம்பது பேர் அந்த மலையின் மேல் அந்த விதமாக நடந்து சென்றனர். அங்கே மேலே எலியா அந்த சூரிய வெப்பத்தில் உட்கார்ந்து கொண்டு அந்த விதமாகப் பார்த்துக் கொண்டிருந்தான். அவர்களை அவனைப் பார்த்து “ஹே! உன்னைப் பிடித்துக் கொண்டு போகவே நாங்கள் வந்துள்ளோம். நாங்கள் யார் என்கிற ஆதாரச்சான்றுகளையும் வைத்துள்ளோம். நாங்கள் ஆகாபின் மெய்பாதுகாவலர்கள். உன்னைப் பிடிக்கவே வந்திருக்கிறோம். நாங்கள் உன்னை திரும்பிக் கொண்டு பேக வந்துள்ளோம்” என்று கூறினர். எலியா எழுந்து நின்று “உம், நானும் கூட சில ஆதாரச் சான்றுகளை வைத்திருக்கின்றேன். நான் தேவனுடைய மனுஷனானால் அக்கினிப் பந்து வானத்திலிருந்து இறங்கி வரட்டும் என்றான். அது என்னவாயிருந்தது? அது ஒரு உறுதிப் பாடாகும். ஆம் ஐயா. 68கர்மேல் பர்வதத்தில் பொய்யான தேவர்களுக்கும் உண்மை யான தேவனுக்கும் பலப்பரீட்சையை அவன் நடத்தின போது அவன் பலிபீடத்தை அமைத்து பலிக்கானதை வைத்து நடந்து அதற்கு முன் நின்று “ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும் யாக்கோபுக்கும் தேவனாகிய கர்த்தாவே, இஸ்ரவேலிலே நீர் தேவன் என்றும், நான் உம்முடைய ஊழியக்காரன் என்றும், இவைகளையெல்லாம் உம்முடைய கட்டளையின்படியே செய்தேன் என்பதை இன்றைக்கு விளங்கப்பண்ணும்” என்று கூறினான். “வார்த்தையை பிரசங்கம் பண்ணுங்கள்,'' கர்த்தாவே, உம்முடைய கட்டளையின்படியே, ”சர்வ சிருஷ்டிக்கும் பிரசங்கியுங்கள். விசுவாசிக்கிறவர்களை இந்த அடையாளங்கள் பின் தொடரும்,“ உம்முடைய கட்டளையாகும். “ இப்பொழுது கர்த்தாவே, நான் இதைச் செய்ய வேண்டும் என்று நீர்தாமே கூறியுள்ளீர் என்பதை விளங்கப்பண்ணும். கர்த்தாவே இப்பொழுது அதை உறுதிப்படுத்தும்.'' அந்த நேரத்திலேயே வானத்திலிருந்து அக்கினி இறங்கினது. அதனுடைய உறுதிப்பாடாக அது இருந்தது. அவர் வார்த்தையுடனே இருந்தார். பாருங்கள்? தேவன் அப்பொழுதுமே தம்முடைய வார்த்தையை உறுதிபடுத்துகிறார். அவர், அவர் தம்முடைய வார்த்தையைக் குறித்த உறுதிப்பாட்டை அளிக்கின்றார். இப்பொழுது, அது உண்மையானது தான் என்பதை நாம் அறிவோம். ஓ, எத்தனை முறை அது உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றது! இங்கே நாம் தொடர்ந்து பார்க்க ஏதுவாக அநேகம் பேரை குறித்து இங்கே இருக்கின்றது. ஆனால் நேரத்தை மிச்சப்படுத்த ..... 69இயேசு, பூமிக்கு அவர் வந்தபோது அவர்கள், “அவன் மனுஷனாயிருக்க தன்னை தேவன் என்று சொல்லுகிறான்? ஓ , என்ன! ஆம், அவன் யார் என்பது எங்களுக்குத் தெரியும். அவன் முறை தவறி பிறந்தவனாயிற்றே. என்ன, அவனுக்கு ஒரு போதும் ..... அவனுடைய தாயாகிய மரியாளையும் யோசேப்பையும் அறிவோம். அவர்கள் ...... முன்னே அந்த குழந்தையை பெற்றிருந்தார்கள்” என்று கூறினார்கள். இயேசு, “என் பிதாவின் கிரியைகளை நான் செய்யாதிருந்தால், நீங்கள் என்னை விசுவாசிக்காதீர்கள். நான் மேசியா என்று நீங்கள் விசுவாசிக்கவில்லையா? நான் செய்கிற கிரியைகளே நான் யார் என்று கூறுகின்றதை உறுதிப்படுத்தும். நான் என் பிதாவின் கிரியைகளை செய்யாதிருந்தால் என்னை நீங்கள் விசுவாசிக்க வேண்டாம். நான் என் பிதாவின் கிரியைகளை செய்தால், உங்களால் என்னை விசுவாசிக்க முடியவில்லை என்றாலும் அந்த கிரியைகளை நீங்கள் விசுவாசியுங்கள்” என்று கூறினார். அது ஒரு உறுதிப்பாடாகும். எப்படியாக அது சரியாகப் பொருந்தினது? நிச்சயமாக அவர் ..... தேவன் யாரை அனுப்புகிறாரோ அவரை தேவனே பாது காக்கின்றார். அந்த வார்த்தையை தேவன் உறுதிபடுத்து கின்றார். ஒரு காரியத்தை செய்வதற்காக ஒரு இடத்திற்கு தேவன் ஒரு தூதனை, பிரதிநிதியை (ambassador) அனுப்புவாரெனில் அந்த கட்டளையின் பின்னால் தேவன் நின்று தானாக வேண்டும். அது முற்றிலும் உண்மையே. 70''என் பிதாவின் கிரியைகளை நான் செய்யாதிருந்தால், நீங்கள் - நீங்கள் என்னை விசுவாசிக்க வேண்டியதில்லை. ஆனால் நான் செய்கின்ற இந்த கிரியைகளை என்னுடைய கட்டளையை உறுதிப்படுத்துகின்றது.“ என்று அவர் கூறினார். ஆமென். நிச்சயமாக அது அவர்களுக்கு முகத்தில் ஒரு அறை கொடுத்தது போல இருந்தது. அப்படித்தானே?” நான் செய்கிற கிரியைகள்,“ ஆமாம். ஆம் ஐயா. ”நான் தேவனிடமிருந்து அனுப்பப்பட்டேன் என்று உங்களால் விசுவாசிக்க முடியாவிட்டால் நீங்கள் செய்ய வேண்டிய காரியமாவது நான் கிரியைகளை விசுவாசிக்க வேண்டும். இல்லையென்றால் அந்த அதே கிரியைகளை நீங்கள் செய்யும்படிக்கு நான் காணட்டும்,'' அப்படியாக அவர்களுக்குக் கூறப்பட்டது. “நீங்கள் என்னை விசுவாசிக்காவிட்டால்.” அது.... ஓ. என்னே ! அவரை விசுவாசித்த சிலர் இருந்தனர். 71கிணற்றண்டையில் இருந்த அந்த ஸ்திரீ அவருடைய மேசியாவின் அடையாளத்தை கண்ட போது அவள், “ மேசியா அதைச் செய்வார் என்பதை நாங்கள் அறிவோம்” என்றாள். அவள் திரும்பிச்சென்று மக்களிடமாக “நான் யாரை சந்தித்தேன் என்று வந்து பாருங்கள். என் இருதயத்தின் இரகசியங்களை யெல்லாம் என்னிடமாக சொன்ன ஒரு மனுஷனை வந்து பாருங்கள். அவர் மேசியாதானே?” என்று கூறினாள். அந்த வயதான நாத்தான்வேல், அவன் பிலிப்புடன் வந்த போது, இயேசு ..... இயேசுவின் பிரசன்னத்திற்குள்ளாக வந்த போது, இயேசு “இதோ, கபடற்ற உத்தமன இஸ்ரவேலன்” என்றார். இப்பொழுது, அவன் பயிற்றுவிக்கப்பட்ட ஒரு மனிதனா வான். ஏனென்றால் அவன் வார்த்தையை அறிந்திருந்தான். மேசியா தேவன் - தீர்க்கதரிசியாக இருப்பார் என்பதை அவன் அறிந்திருந்தான். “உங்கள் தேவனாகிய கர்த்தர் ஒரு தீர்க்க தரிசியை எழும்பப்பண்ணுவார்” என்று மோசே கூறியுள்ளதை அவர்கள் அறிந்திருந்தனர். மேலும் “உங்களில் ஒருவன் தன்னை தீர்க்கதரிசியென்றாவது, ஆவியைப் பெற்றவனென்றாவது இருந்தால் கர்த்தராகிய நான் அவனை உறுதிப்படுத்துவேன். நான் ..... அவன் கூறுவது நிறைவேறினால் அப்பொழுது அதை விசுவாசியுங்கள்” என்று தேவன் கூறினார் என்பதையும் கூட அவன் அறிந்திருந்தான். பாருங்கள்? அவர் தானா என்று காண அவர்கள் விரும்பினார்கள். அந்த நேரத்தில் ஒரு தீர்க்கதரிசி எழும்பியிருக்க வேண்டும் என்று அவர்கள் அறிந்திருந்தனர். ஆகவே அவர் யார் என்பதை அறிந்திருந்து கொள்ள அவர்கள் விரும்பினார்கள். 72பிலிப்பு இருந்த இடத்திற்கு அவன் நடந்து வந்திருந்தான், அப்பொழுது பிலிப்பு அவனிடமாக என்ன செய்ய வேண்டும் என்று கூறினான். இல்லை, பிலிப்பு அவனை இயேசுவின் முன்னே அழைத்து வந்திருந்து நிறுத்தினான். அப்பொழுது அவன் நடந்து இயேசுவுக்கு முன் வந்து நின்றான். இயேசு “இதோ, கபடற்ற உத்தம இஸ்ரவேலன்” என்றார். “ரபீ, என்னை உமக்கு எப்படித் தெரியும்?” அதற்கு அவர், “பிலிப்பு உன்னை அழைக்கிறதற்கு முன்னே நீ மரத்தின் கீழிருக்கும் போது உன்னைக் கண்டேன்” என்றார். அதற்கு அவன், “ரபீ, நீர் தேவனுடைய குமாரன்” என்றான். அதோ இயேசுவின் ஆதாரச் சான்றுகள். கிணற்றண்டை இருந்த ஒரு ஸ்திரீ, அவள் கிணற்றண்டையில் நிற்பதை அவர் கண்ட போது “தாகத்துக்குத் தா” என்று கூறினார். 73அப்பொழுது அவள், “இது வழக்கமல்லவே, நீர் இங்கே உள்ள எங்கள் - எங்கள் - எங்கள் பழக்கவழக்கத்திற்கு புறம்பாக செய்கின்றீரே. எங்கள் மத்தியில் ஜனங்கள் பிரிவு முறை கையாளப்படுகிறது. யூதர்களும் சமாரியர்கள் ஒருவரோடு ஒருவர் ஐக்கியம் கொள்வது கிடையாது. நீர் ஒரு யூதனாக, மனிதனாக இருக்கையில் சமாரிய ஸ்திரீயாக என்னிடமாக எனக்குத் தண்ணீர் குடிக்கக்கொடு என்று கேட்பதெப்படி?” என்றாள். அதற்கு அவர், “ஸ்திரீயே, நீர் யாரிடமாக பேசிக் கொண்டிருக்கிறாய் என்பதை அறிந்திருந்தாயானால், நீயே என்னிடமாகக் கேட்டிருப்பாய்” என்று கூறினார். அதற்கு அவள், “என்ன, கிணறும் ஆழமாயிருக்கிறதே, மொண்டுகொள்ள உம்மிடத்தில் பாத்திரமில்லையே” என்று கூறினாள். அவர், “நான் கொடுக்கும் தண்ணீர் அந்த கிணற்றில் இல்லை ” என்றார். 74இப்படியாக தொடர்ந்து உரையாடல் நீடித்துக் கொண் டேயிருந்தது, எதுவரைக்குமாக, அவர் என்ன செய்ய முயற்சித்துக் கொண்டிருந்தார், இயேசு அவளுடைய ஆவியுடன் தொடர்பு கொள்ள முயன்று கொண்டிருந்தார். பிறகு அவளுடைய பிரச்சனை என்னவென்பதை அவர் கண்டு கொண்டார். “நீ போய் உன் புருஷனை இங்கே அழைத்துக் கொண்டு வா” என்றார். அதற்கு அவள், “எனக்கு புருஷன் இல்லை ” என்றாள். “நீ சொன்னது சரிதான். உனக்கு ஐந்து பேர் இருந்தார்கள். இப்பொழுது நீ யாருடன் வாழ்ந்து கொண்டிருக்கின்றாயோ அவனும் உன் புருஷன் அல்ல” என்றார். அதற்கு அவள், “ஆண்டவரே நீர் தீர்க்கதரிசி என்று காண்கிறேன்” என்று கூறினாள். அவள், “மேசியா வருகிறார் என்று அறிவேன், அவர் வரும் போது அதைச் செய்வார் என்று எங்களுக்குத் தெரியும்” என்று கூறினாள். அவர் “உன்னுடனே பேசுகிற நானே அவர்” என்று கூறினார். அவள் ஊருக்குள்ளே வந்தாள். அது அவளுக்கு உறுதிப் படுத்தப்பட்டது. அவள் ஊருக்குள்ளே சென்று, “நான் செய்த எல்லாவற்றையும் ஒரு மனுஷன் எனக்குச் சொன்னார், அவரை வந்து பாருங்கள். அது மேசியா தானே? அது அவர் தான் என்பதின் உறுதிப்பாடு தானோ?” என்று கூறினாள். 75இயேசு “அந்த அதே கிரியைகள் என்னுடைய கட்டளையுடன் உறுதிப்படுத்துகின்றன” என்று கூறினார். அது சரி, தேவன் அவரை அனுப்பினார். அவர் அந்த தீர்க்கதரிசியாக இருக்கவேண்டியவராக இருந்தார். அவர்கள் யோவானை நோக்கி “நீர் எலியாவா? நீர் தீர்க்கதரிசிகளில் ஒருவனா? வரவிருக்கின்ற அந்த தீர்க்கதரிசி நீர் தானா?” என்று கேட்டார்கள் என்று உங்களுக்குத் தெரியும். யோவான் அவர்களை நோக்கி “நான் அல்ல. ஆனால் அவர் உங்கள் நடுவிலே எங்கோ நின்று கொண்டிருக்கிறார். அவர் வரும் போது தம்மைத் தாமே அவர் நிரூபிப்பார். ஏனென்றால் தேவன் அவரை உறுதிப்படுத்துவார்” என்று கூறினான். அது முற்றிலும் சரியே. ஒரு மனிதன் தேவனால் அனுப்பப்பட்டிருப்பானானால், அந்த மனிதன் அனுப்பப் பட்டவன் தான் என்று, தேவன் அந்த மனிதனை உறுதிப்படுத்தக் கடமைப்பட்டுள்ளார். அது முற்றிலும் சரியே. ஓ, ஆம், ஒரு உறுதிப்படுத்துதல். 76குருடனாகப் பிறந்திருந்த அந்த மனிதன் அவர்தான் அந்த மேசியா என்கின்ற மிகவும் உறுதியான சாட்சியை அவன் கொண்டிருந்தான். இப்பொழுது அந்த ஏழை மனிதன், அவனாலே, அவனாலே ...... அந்த வேதகலாசாலையில் பயிற்று விக்கப்பட்ட வேத பண்டிதர்கள் அவனை கும்பலாக சூழ்ந்து கொண்டு “இதோ பார், நீ பிறவிக்குருடன் என்று எங்கள் எல்லோருக்கும் தெரியும். உன் கண் விழியே உனக்கு கிடையாது என்று எங்களுக்குத் தெரியும். உன் கண் குழியில் கூட கண் இல்லவே இல்லையே. நீ பிறவியிலிருந்தே குருடன் என்று எங்களுக்குத் தெரியும்” என்றனர். மேலும் அவர்கள், ''உன்னை சொஸ்தப்படுத்தினது யார்?“ என்று கேட்டனர். அதற்கு அவன், “அந்த மனிதன் நான் குணமாக்கப் பட்டேன் என்று என்னிடமாகக் கூறினார். அவர் என்னை குணமாக்கினார் என்று எனக்குத் ரிெயும். எனக்கு - எனக்கு - எனக்கு அது தெரியும்” என்று கூறினான். அவர்கள், “உம், இதோ பார், அந்த மனிதன் ஒரு பாவியாவான். அவன் ஒரு பாவி என்று எங்களுக்குத் தெரியும். ஏனென்றால் அவன் எங்கள் ஸ்தாபனத்தில் சேரவில்லை. அவன் எங்கள் வழியில் வரவில்லை . அவன் எங்களுடைய உபதேசத்தை போதிப்பதில்லை. அவன் எங்களுக்கு எதிராக இருக்கின்றான். அது தேவனால் உண்டானதாக இருக்கமுடியாது என்று நாங்கள் அறிந்திருக்கின்றோம். அவனுடன் ஏதோ தவறு இருக்கின்றது என்று எங்களுக்குத் தெரியும். ஏனென்றால் அவன் எங்களுடன் ஒத்துப் போவதில்லை. அந்த மனிதன் ஒரு பாவி ஆவான்'' என்று கூறினார்கள். இப்பொழுது, இந்த பரிதாபத்திற்குரிய குருடனாயிருந்த மனிதனாலே தன்னுடைய வாசத்தை முன் வைக்க முடியாமல் இருந்தது. அவன் ஒரு வேதாகம கல்லூரி அறிஞன் அல்ல. அவன் “இதோ ...'' என்றான். ஆனால் அவனும் கூட மிக உறுதியான ஒரு வாதக் கருத்தைக் கொண்டிருந்தான். அவன், ” அவன் ஒரு பாவியோ அல்லது பாவி இல்லையோ, எனக்குத் தெரியாது. நான் குருடனாயிருந்தேன். இப்பொழுது காண்கிறேன்; இது ஒன்று தான் எனக்குத் தெரியும்“ என்று கூறினான். ஆமென். 77இது முட்டாள் தனமாக மக்கள் கூட்டம் இது தான் என்று மக்கள் கூறுவதை நான் கேட்டிருக்கின்றேன். நான் பரிசுத்த ஆவியைப் பெற்ற போது எனக்கு மனநிலை பாதிக்கப்பட்டது என்று என்னிடமாக கூறின மக்கள் இருக்கின்றார்கள். ஆம், அது சரியோ அல்லது சரியில்லையோ எனக்குத் தெரியாது. ஆனால் ஆனால் நான் அறிந்திருக்கின்ற ஒரு காரியம் இருக்கின்றது, அதற்கு முன்னர் நான் ஒரு பாவியாயிருந்தேன், இப்பொழுது நான் இரட்சிக்கப்பட்டுள்ளேன், அது உண்மையே. ஒரு காலயீதல் நான் இழக்கப்பட்டிருந்தேன், இப்பொழுது நான் கண்டுபிடிக்கப்பட்டுள்ளேன். அது அதிதீவிர மூட பக்தி வைராக்கியம் என்று நீங்கள் கூறலாம், நீங்கள் விரும்புகின்ற எந்த ஒன்றைக் கொண்டும் அதை நீங்கள் அழைக்கலாம், ஆனால் அது எனக்கு இயேசு கிறிஸ்து நேற்று இன்னும் என்றும் மாறாதவராயிருக்கின்றார் என்பதில் உறுதிப்பாடா யிருக்கின்றது. அது சரியே. ஆம். 78அவன் - அவன் - அவன் அந்த அத்தாட்சியைக் கொண்டிருந்தான். அது அவர் தான் என்றும், அவர் தேவனுடைய குமாரன் தான் என்கின்ற உறுதியான பதிலை அவன் கொண்டிருந்தான், ஏனென்றால் கண் குழியில் கண் விழியே இல்லாதிருந்த போது அவர் அதிலே கண் விழியை உண்டாக்கியிருந்தார். ஆம், ஐயா, வேறு விதமாகக் கூறுவோமானால் அந்த குடுனாலே “இவ்வளவு காலமாக உங்கள் சபைக்கு நான் வந்து கொண்டிருக்கின்றேன். அந்த விதமான ஒரு காரியமானது இங்கே நடைபெறுவதை என்னால் காணமுடியவில்லையே. அவர் கண் விழிகளை சிருஷ்டித்திருப் பாரானால், தேவனைத் தவிர வேறே ஒரு சிருஷ்டிகர் இருக்க முடியாது. அது எங்கிருந்து வந்திருக்க முடியும்? உங்கள் அதைச் செய்ய முடிகின்றதா பார்க்கலாம். எந்த விதமாக அதைச் செய்கிறீர்கள் என்று பார்க்கலாம்” என்று கூற முடிந்தது. அவர்கள் தங்கள் வாயை மூட வேண்டியதாயிற்று. இயற்கைக்கு மேம்பட்ட, வானத்தையும் பூமியையும் உண்டாக்கின அந்த மகத்தான சிருஷ்டிகராகிய தேவனைக் குறித்து அவர்கள் பேசிக்கொண்டிருந்தனர், ஆனால் ஒரு நல்ல ஒரு ஜீவனை அவர்களால் சிருஷ்டிக்க முடியவில்லை. பாருங்கள்? உங்களுக்கு புரிகின்றதா, ஒன்றுமே உண்டாக்க முடியவில்லை . ஆனால் இதோ இயேசு வந்து கண் குழியில் கண் விழிகளே இல்லாமல் குருடனாகப் பிறந்திருந்த ஒரு மனிதனுக்குள்ளாக கண் விழிகளை வைத்தார். அது நம்பத்தகுந்த ஒன்றாகும் என்று நான் உங்களுக்குக் கூறுகின்றேன். தின்னப்படவேண்டிய களியின் நிருபணம் அதைச் சாப்பிடுவதினால் தான். அது முற்றிலும் உண்மையே. அது அவர் தான் என்பதின் அத்தாட்சியை அவன் கொண்டிருந்தான். அது சரியே. 79பதினான்கு நாட்கள் பகல் மற்றும் இரவுகளாக, நிலவில்லாமல், நட்சத்திரங்கள் மற்றும் எதுவுமே இல்லாமல் அங்கே கடலிலே பவுல் இருப்பதை என்னால் கற்பனை செய்து பார்க்க முடிகின்றது; அந்த பரிதாபத்திற்குரிய அந்த சிறு மனிதன் தண்ணீரால் நிறைந்து மூழ்கவிருந்த நிலையில் இருந்த அந்த கப்பலின் மேல் தளத்தின் குறுக்கும் நெடுக்குமாக சங்கிலிகளை இழுத்துக்கொண்டு நடந்து கொண்டிருந்தான். அவர்கள் கப்பலில் இருந்த உணவு மற்றும் பொருட்கள் எல்லாவற்றையும் தூக்கி கடலில் போட்டனர். அந்தக் கப்பல் பிரயாணிகள் அநேக நாட்களாக சாப்பிடாமல் இருந்தனர். அந்த சங்கிலிகளை இழுத்துக்கொண்டு, முன்பு வாழ்ந்திருந்த இயேசுவைக் குறித்து பேசிக்கொண்டிருந்தான். சிலுவையிலறையப்பட்ட இயேசுவைக் குறித்துப் பேசினான். 80அக்கப்பலில் இருந்த போர்வீரர்களும் மாலுமிகளும் “ஓ, போதும், வாயை மூடு!” என்று சொல்வதை என்னால் கற்பனை செய்து பார்க்க முடிகின்றது. அவன் நடந்து கொண்டே “ஆனால் உங்களுக்குத் தெரியுமா, அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவரா யிருக்கிறார்” என்று கூறினான். அந்தக் கப்பலின் மேல் தளத்தில் குறுக்கும் நெடுக்குமாக அந்த சங்கிலிகளை இழுத்துக் கொண்டே நடந்து கொண்டே இருந்தான். அவர்கள், “சங்கிலிகளால் பிணைக்கப்பட்டுள்ள அவனைப் பார், இராயனிடமாக சென்று கொண்டிருக்கின்ற, ரோமாபுரிக்கு தண்டனை வழங்கும்படிக்கு அழைத்துச் செல்லப்படும் அந்த மனிதனைப் பார். அந்த மனிதன் மரிக்க வேண்டியவான இருக்கின்றான். ஆனாலும் மதத்தைக் குறித்து ஏதோ ஒன்றைப் பேசிக்கொண்டே இருக்கின்றானே, ஓ, வாயை மூடு!” என்று கூறினர். 81அவர்கள் மெதுவாகச் சென்று கொண்டேயிருந்தனர். ஆனால் ஒரு இரவில் தப்பிப்பிழைக்க முடியும் என்ற எல்லா நம்பிக்கையும் அற்றுப்போனது! ஓ, என்னே. மின்னலடித்த ஒவ்வொரு முறையும் ஒரு அலை எழும்பினது. அந்தக் கடலலைகளின் மேல் பத்தாயிரம் பிசாசுகள் உட்கார்ந்திருந்தன. அவை, ''பபுலே, இதோ இப்பொழுது உன்னை பிடித்து விட்டோம். ஓ, நீ செய்ததிற்கான பலனை பெற்றுக்கொள்ளப்போகிறாய்“ என்று கூறின. அதற்கு அவன், “ஒருக்காலும் நடக்காது. அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார். அது உண்மை . அவர் என்னை ரோமாபுரிக்கும் போகச் சொன்னார் என்பதை நான் அறிவேன்” என்று கூறினான். இதோ மேலும் கீழுமாக அசைந்து எந்த நேரத்திலும் மூழ்கவிருந்த அந்த கப்பலில் அவன் இருக்கின்றான். பதினான்கு அல்லது பதினைந்து நாட்களாக சூரியன், சந்திரன் அல்லது நட்சத்திரங்கள் எதுவும் காணப்பட்டு பிரகாசிக்காமல் இருந்த அந்த நிலையை சற்று சிந்தித்துப் பாருங்கள். அது மிகவும் மோசமாக ஒரு சூழ்நிலையாகும்; முழுவதுமாக தண்ணீரால் நிறைந்திருக்கும் கப்பல், எந்த நேரத்திலும் எல்லா விதத்திலும் கடலில் மூழ்கவிருக்கும் ஒரு நிலை. ஒரு இரவிலே, அந்த படகின் உள்பகுதியில் கீழே அவன் நின்று கொண்டு ஜெபித்துக் கொண்டிருந்தான் என்பதில் சந்தேகமில்லை . அப்பொழுது ஒரு தரிசனம் வந்தது. கர்த்தருடைய தூதனானவர் அவனுக்குத் தோன்றினார். “சவுலே பயப்படாதே. எல்லாம் சரியாக உள்ளது” என்று கூறினார். இதோ அவன் வருகின்றார், ஒரு கட்டளையுடனே ஓடி வந்தது, அவன் பிணைக்கப்பட்டிருந்த சங்கிலிகளோடு அசைந்து வந்து “தைரியமாயிருங்கள், நல்ல விசுவாசத்துடன் இருங்கள். ஏனென்றால் நான் ஆராதிக்கும் தேவன் கடந்த இரவு தம்முடைய தூதனை அனுப்பினார். நான் ஒரு தரிசனம் கண்டேன், அப்பொழுது அவர் பயப்படவேண்டாம் என்று அவர் என்னிடமாகக் கூறினார். ஏனென்றால் இந்த கப்பலில் எந்த உயிர்ச்சேதமும் ஏற்படாது என்றார். ஆதலால் சகோதரரே சிறிது ஆகாரம் சாப்பிடுங்கள், களிகூர மாத்திரம் செய்யுங்கள். எல்லாம் சரியாயுள்ளது” என்று கூறினான். அப்பொழுது அவர்கள் சற்று கோமாளித்தனமான ஒன்றை நினைப்பதை என்னால் கற்பனை செய்து பார்க்க முடிகின்றது. ஆனால் அந்த பழைய கப்பலானது அங்கே இருந்த துறைமுகத்தில் நின்றதை அவர்கள் கண்டபோது, அது பவுல் தேவனிடமிருந்து அனுப்பப்பட்டவன் என்றும் தான் எதைக் குறித்து பேசுகிறோம் என்பதை அறிந்திருந்த ஒருவன் என்பதை உறுதிப்படுத்தினது. தேவன் அதை உறுதிப் படுத்தினார். 82“உங்களுக்குள்ளே ஒருவன் தீர்க்கதரிசியாயிருந்து அவன் கூறுவது நிறைவேறுமானால் அப்பொழுது அவனுக்கு செவிகொடுங்கள் ஏனென்றால் நான் அவனுடன் இருக்கின்றேன்.” அது சரி. அந்த தீவில் இருந்தவர்கள், அந்த தீவின் மக்கள் அவன் விறகுகள் பொறுக்குகையில் அவனைப் பார்த்து, “அவன் ஒரு மோசமான கொலை பாதகனாக இருக்க வேண்டும். அவன் சங்கிலியால் பிணைக்கப்பட்டுள்ளதைப் பாருங்கள்” என்று கூறினார்கள். அந்த சிறிய ஏழை பவுல், ஏறக்குறைய குளிரில் உறைந்து போகும் நிலையில் இருந்தான், அவனுடைய வஸ்திரங்கள் எல்லாம் நனைந்திருந்தன, ஆகவே அவன் அங்கே வந்து விறகுகளை எடுத்து அந்த நெருப்பின் மேல் போட ஆரம்பித்தான். அவனுடைய கையை ஒரு பாம்பு கடித்தது. அது அவனைக் கொன்று போட்டிருக்க வேண்டும். ஆம், ஒரு நொடிப்பொழுதில் கொன்றிருக்க வேண்டும், பவுல் அதைப் பார்த்தான், அதை இந்த விதமாகப் பார்த்து “தேவனே, நான் ரோமாபுரிக்கு செல்ல வேண்டும் என்று கூறியுள்ளீரே” என்று கூறினான். அவன் அந்த பாம்பை தீயில் உதறிப்போட்டான், பிறகு திரும்பிச் சென்று இன்னும் சில விறகுகளைக் கொண்டு வந்தான். அத்தீவார், “அவன் சடுதியாய் விழுந்து சாவான்” என்று கூறினார்கள். சில நிமிடங்கள் கழித்து அவர்கள் தங்கள் கருத்தை மாற்றினார்கள். ஏன்? அவனுடைய கட்டளையானது உறுதிப்படுத்தப்பட்டது. அவர்கள், “இவன் வானத்திலிருந்து இறங்கி வந்துள்ள தேவன்” என்று சொல்லிக்கொண்டார்கள். உறுதிப்பாட்டை அவன் கொண்டிருந்தால் ஏனென்றால் இயேசு, “அவர்கள் சர்ப்பங்கள் தேள்களின் தலைகளை மிதிப்பார்கள் ஒன்றும் அவர்களை சேதப்படுத்தாது'' என்று கூறினார். ஆம், ஐயா, அதை நிரூபிக்கத்தான் அந்த அத்தாட்சியை அவன் - அவன் கொண்டிருந்தான். 83நண்பர்களே நான் சற்று துரிதமாக முடிப்பேனாக. அதன் பேரில் என்னால் இங்கே முழு இரவும் கூட பேச முடியும். ஆனால் இன்னும் சில காரியங்களை மாத்திரமே பார்க்கலாம். இப்பொழுது, அந்த தீர்க்கதரிசி “ஒரு நாள் உண்டு, அது பகலுமல்ல இரவுமல்ல, மந்தாரமான, இருளார்ந்த, மங்கலான ஒன்றாயிருக்கும். ஆனாலும் சாயங்காலத்திலே வெளிச்ச முண்டாகும்” என்று கூறினான். அது சரி. சூரியன் கிழக்கில் உதித்து மேற்கில் மறையும் ; சூ-ரி-யன், (ச-ன், S-u-n) நாகருகமானது கிழக்கிலிருந்து மேற்கிற்கு பிரயாணம் செய்துள்ளது. ஆனால் அந்த ச-ன், S-o-n, (குமாரன்) உதித்த போது வெளிச்சம் கிழக்கத்திய மக்களின் வந்தது. இப்பொழுது நாம் ஸ்தாபனத்தின், அமைப்புகளின் நாளைக் கொண்டிருந்தோம், மக்கள் கிறிஸ்துவை ஏற்றுக் கொண்டனர், அவர் தேவன் என்பதை அறியும் அளவிற்கு போதுமான வெளிச்சத்தைக் கொண்டிருந்தனர். ஆகவே வெளிச்சத்தில் இன்னும் அதைப்போன்றில் நடந்தனர், அவர்கள் சபைகளை, பெரிய தலைமை கிறிஸ்தவ கோவில்கள் மற்றும், பள்ளிகளை இன்னும் பிறவற்றை கட்டினார்கள். அது அருமை யாகத்தான் இருந்தது. 84ஆனால், நினைவில் கொள்ளங்கள், சாயங்கால நேரத்தில் எல்லா மப்புமான மேகங்கள் கலைந்து போகும் என்று வாக்குத் தத்தம் செய்யப்பட்டுள்ளது. இப்பொழுது சாயங்கால வேளையாகும். ஆகவே மேகங்கள் எல்லாம் கலைந்து போகும் போது, கிழக்கத்திய மக்களின் மீது தம்முடைய வல்லமையை பிரகாசித்து பொழிந்த அந்த அதே குமாரன், ( S-o-n, ச-ன்) கடந்த ஐம்பது வருடங்களாக, ஸ்தாபனங்கள் மற்றும் எல்லா காரியங்கள் என்னும் மேகங்களின் முதுகை உடைத்து போட்டு, மேற்கு திசை மக்களின் மீது பரிசுத்த ஆவியை ஊற்றினார். அந்த, அந்த அதே குமாரன் (S-o-n), அதே பரிசுத்த ஆவியானவர், அதே அடையாளம், அதே வெளிச்சங்கள், அதே வல்லமை, அதே அத்தாட்சி, முன்பு அது என்னவாக இருந்ததோ அந்த அதே எல்லா காரியமுமே. ஆகவே சுவிசேஷமானது வல்லமையோடும் demonstration வுடனும் நாடுகளில் எல்லா இடங்களிலும் பிரசங்கிக்கப்பட்டுள்ளது. அது சரி. அது உண்மை. உலக முழுவதிலும், அடையாளங்களும் அற்புதங்களும் விசுவாசிகளை பின் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. 85இங்கே, சில வருடங்களுக்கு முன்னர், அவர்கள் “அந்த குழுவா, என்ன, உன்னாலே ஒருக்காலும் ..... அவர்களாலே அதற்கு ஒன்றுமே செய்ய முடியாது. அங்கே தெருவில் ஏதோ ஓரிடத்தில் ஒரு மூலையில் மிகவுமாக இரைச்சலோடு கூச்சலிட்டுக் கொண்டு, சிறு டாம்பரீனில் தாளம் அடித்துக் கொண்டிருப்பார்கள்” என்று கூறினர். ஆனால், சகோதரனே, அந்த செய்தியானது, பசி கொண்ட இருதயத்தையுடைய மக்கள் தங்கள் பிள்ளைகளுக்கான உணவையும் மற்றும் எல்லாவற்றையும் கூட தியாகம் செய்து அது கிழக்கிலிருந்து மேற்குக்கும் வடக்கிலிருந்து தெற்கிற்கும் செல்லும் வரைக்குமாக மிஷனரிமார்களுக்கு ஆதரிக்கின்றனர். நீங்கள் எந்த தேசத்திற்குச் சென்றாலும் சரி அங்கே பெந்தெகொஸ்தே அக்கினியானது பரிசுத்த ஆவியின் வல்லமையோடே எரிந்து கொண்டிருக்கின்றது. நான் காடுகளுக்குள்ளாக நீண்ட தூரம் சென்றிருக் கின்றேன். வலது கரத்திற்கும் இடது கரத்திற்கும் வித்தியாசம் அறியாத நிலையில் உள்ள மக்களிடமாக அங்கேயுள்ள ஏதோ ஒரு சிலையைத் தவிர தேவனைக் குறித்து மேலும் அவர்களுக்கு தெரியாது. அது உண்மை . நான் அங்கே நின்று சரியாக வார்த்தையை அவர்கள் முன் வைத்து காண்பிப்பேன். அப்பொழுது பரிசுத்த ஆவியானவர் அடையாளங்களை நடப்பித்து காண்பித்து அந்த மக்களிடமாக அவர்கள் யார் என்றும் அவர்களுடைய இருதயத்தின் இரகசியங்களையும் கூறி, “நான் செய்கிற கிரியைகளை நீங்களும் செய்வீர்கள்.'' என்று இயேசு கூறியுள்ளதை அவர்களுக்குக் காண்பிப்பார். “ இந்த மனிதன், அவனுடைய பெயர் எனக்குத் தெரியாது, ஆனால் அதை நான் எழுத்து கூட்டி சொல்கிறேன் அது என்னவென்று நீங்கள் வியாக்கினப்படுத்தி கூறுங்கள்.'' அந்த விதமாக எழுத வேண்டுமானால், ஒருக்கால் நான் அவ்வளவு பெரிதாக எழுத்து கூட்டவேண்டியதாக இருக்கும். “ஆமென், அது சரியானதே.'' அவர்கள் அப்படியே உட்கார்ந்து பார்ப்பார்கள். நான், “இப்பொழுது, இயேசு 'நான் செய்கிற கிரியைகளை நீங்களும் செய்வீர்கள்” என்று கூறியுள்ளார். இது தான் அவருடைய மேசியாவிற்குரிய அடையாளமாகும்“ என்று கூறுவேன். 86அவருடைய வல்லமையானது மக்களை பிடிக்க ஆரம்பித்து அவர்களை ஒன்று திரட்டி மணவாட்டியாக ஆயத்தப்படுத்த, மேலே எடுக்கப்பட முற்றிலுமாக சரியாக பொருந்துகின்ற ஒரு சபையை, எடுத்துக்கொள்ளப்படுதலின் மேலே எடுக்கப்படும்படிக்கு ஆயத்தப்படுத்த இயேசு இப்பொழுது பூமிக்கு வருதலானது மிகவும் நெருங்கிய விதத்தில் இருக்கின்றது. அதன் வல்லமையின் மூலமாக மறுபடியும் பிறந்த ஏனையோரை பூமியிலிருந்து வெளியே இழுத்துக்கொள்ளும். இயேசு வருகின்றார். என் கரத்தை சுவற்றிற்கு எதிராக காண்பிக்கையில் அது ஒரு நிழலைப் பிறப்பிக்கும். அந்த நிழலானது இன்னுமாக ஆழமாக, ஆழமாக, ஆழமாக பெரிதாகினால் என் கரம் இன்னும் அருகில் வந்துள்ளது என்பதாகும், அதன் பிறகு அந்த நிழலும் என் கரமும் ஒன்றாகிவிடும். ஆகவே சபையானது மார்டின் லூத்தரின் காலத்தில் நீதிமானாக்கப்படுதலின் கீழாக ஆரம்பித்தது; வெஸ்லியின் கீழாக பரிசுத்தமாக்கப்படுதலின் மூலமாக வந்து பிறகு இப்பொழுது பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தில், வரங்கள் திரும்ப அளிக்கப்படுதலில் பெந்தெகொஸ்தேயுடன் இருக்கின்றது. இயேசு கிறிஸ்துவை காண்பிக்கவும், சாயங்கால வெளிச்சங்கள் பிரகாசிக்கையில் அதே சமயத்தில் சரியாக, நேற்றும் இன்றும் என்றும் மாறாததாயிருக்கின்ற அவருடைய அந்த அதே ஜீவனை பிரதிபலிக்கவும்படிக்கு அந்த பெந்தெகொஸ்தே மக்களிலிருந்து அவர் அந்த மீதியானவர்களை இங்கே இழுத்துக் கொண்டிருக்கின்றார். அது முற்றிலும் சரியே. 87சரியாக வாஷிங்டன் டி.சி.யில் வைக்கப்பட்டிருக்கின்ற அந்த அந்த அக்கினி ஸ்தம்பம் எத்தனைப் பேர் அதைக் கண்டிருக்கிறீர்கள். அந்த ஒளியை? நிச்சயமாக, எல்லாவிடங் களிலும் கையுயர்த்தப்பட்டிருக்கின்றது, பாருங்கள்? பாருங்கள், தமஸ்கு செல்லும் வழியில் பவுலை சந்தித்த அந்த அதே அக்கினி ஸ்தம்பம், இயேசு, அவர் பூமியில் இருந்த போது.. அது கிறிஸ்து என்று எந்த ஒரு நபரும் அறிவர், இஸ்ரவேலரை எகிப்திலிருந்து வெளியே கொண்டு வந்து வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்திற்குள்ளாகக் கொண்டு சென்று அந்த - அந்த அதே அக்கினி ஸ்தம்பம், அந்த கர்த்தருடைய தூதன் தான் உடன்படிக்கையின் தூதன் ஆவான். எந்த ஒரு நபருக்கும் அது தெரியும். நிச்சயமாக. ஆம், அது கிறிஸ்துவாகும். ஏனென்றால் வேதாகமம், “மோசே எகிப்திலுள்ள பொக்கிஷங்களிலும் கிறிஸ்துவினிமித்தம் வரும் நிந்தையை அவன் தெரிந்து கொண்டான்'' என்று கூறியுள்ளது. அவர் மாம்சமாவதற்கு முன்பு அவன் கிறிஸ்துவுடனே சென்றான். அந்த ஒளியை அவன் பின்பற்றினான். 88இயேசு, அவர் பூமியில் இருந்தபோது, அவர் “நான் தேவனிடத்திலிருந்து வந்தேன், நான் தேவனிடத்திற்கு போகிறேன்” என்று கூறினார். அவர்கள் அவரை சிலுவையில் அறைந்தார்கள். நம்முடைய பாவங்களுக்காக மரித்த இரட்சகர் அவர் தான். அவன் அவரை அடக்கம் பண்ணினான். அவர் உயிரோடெழுந்து உயர வானத்திற்கு எழுந்தருளினார். அதற்கு பின்னர் சில மாதங்கள் கழித்து பவுல் தமஸ்குவிற்கு சென்று கொண்டிருந்தான், வழியிலே அவன் ஒரு ஒளியினால் அடித்து கீழே தள்ளப்பட்டான். அவனைச் சுற்றிலும் போர்வீரர்கள் இருந்தனர், ஆனால் ஒருவரும் அதைக் காணவில்லை . பவுலைத் தவிர மற்ற ஒருவராலும் அவரைக் காணமுடியவில்லை. ஆனால் பவுலுக்கோ அது மிகவும் முக்கியமானதாக தெள்ளத்தெளிவாக இருந்து அவனுடைய கண்களை பார்வையற்றுப் போகச் செய்யும் அளவிற்கு அது இருந்தது. அவன் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு குருடா யிருந்தான். அவன் மேலே நோக்கிப் பார்த்தான், அப்பொழுது அந்த மகத்தான பெரிய அக்கினி ஸ்தம்பமானது அவனுக்கு முன்பாகத் தொங்கிக்கொண்டிருந்தது. அப்பொழுது அவர், “சவுலே, சவுலே நீ என்னை ஏன் துன்பப்படுத்துகிறாய்” என்றார். அவன், “ஆண்டவரே, நீர் யார்?” என்றான். அதற்கு அவன், “நான் இயேசு, முள்ளில் உதைக்கிறது உனக்குக் கடினமாம்” என்று கூறினார். 89இப்பொழுது, அந்த அதே பரிசுத்த ஆவி சரியாக இன்றைக்கு பெந்தெகொஸ்தே மக்கள் மத்தியில் இருப்பதை நாம் காண்கிறோம், அந்த சாயங்கால வெளிச்சத்தில், சரியாக பெந்தெகொஸ்தே மக்களின் மத்தியில் இருக்கின்றது. என்ன? அந்த அதே சுவிசேஷத்தை பிரசங்கித்து, அந்த அதே சுவிசேஷத்தின் உறுதிப்பாடை அளிக்கின்றது. முன்பு அங்கே தொடர்ந்த அதே அடையாளங்கள் தான் இப்பொழுதும் அந்த அதே அடையாளங்களாகத் தொடர்ந்து நடந்து கொண்டிருக் கின்றது. ஆகவே நம்முடனே நாம் கொண்டிருக்கின்ற அந்த அக்கினி ஸ்தம்பம் அல்லது அந்த ஒளியானது முன்பு அது இயேசு கிறிஸ்துவுக்குள்ளாக இருந்து செய்த அதே அத்தாட்சியை மற்றும் அந்த அதே ஆவியை இப்பொழுது பிறப்பிக்காவிடில் அப்படியானால் அது தவறான அக்கினி ஸ்தம்பமாக இருக்கும், தவறான ஆவியாக, தவறான காரியமாக இருக்கும். ஆனால் அது தாமே இயேசு சரியாக எதைச் செய்தாரோ அதை அப்படியே செய்யுமானால், அவர், “என்னை விசுவாசிக்கிறவன் நான் செய்கிற கிரியைகளை தானும் செய்வான்” என்று கூறியுள்ளார். அது உண்மை . 90“நான் என் பிதாவினிடத்திற்குப் போகிறபடியால், இதைப் பார்க்கிலும் பெரிய கிரியைகளையும் செய்வான்.'' ஜேம்ஸ் அரசனின் வேதாகமத்தில் ”பெரிய“ என்று உள்ளது. ஆனால் மூல வேதாகமத்தில் பார்ப்போமானால் ”அதிகமான “ என்று இருக்கின்றது. அதைவிட பெரியதை உங்களால் செய்ய முடியாது. அவர் மரித்தோரை உயிரோடெழுப்பினார். இயற்கையை நிறுத்தினார் மற்றும் எல்லாவற்றையும் செய்தார். ஆனால் அவைகளை அதிக அளவில் அவரால் செய்ய முடியும். ஏனென்றால் பரிசுத்த ஆவி ஒரே மனிதனாகிய கிறிஸ்துவாகிய தேவனுடைய குமாரனுக்குள் மாத்திரம் இருக்கவில்லை, ஆனால் உளகளாவிய சபையில் இருந்தது. ”நான் என் பிதா வினிடத்திற்குப் போகிறபடியால், இதைவிட அதிகமானதைச் செய்வான்.“ஓ, என்னே ! 91அவருடைய அதே ஊழியமானது இந்த கடைசி நாட்களில் இங்கே செயற்படுத்திக் காண்பிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது. எந்த விதமான ஒரு ஊழியத்தை அவர் கொண்டிருந்தார்? நான் தொடர்ந்து உங்களுக்கு காண்பித்து வந்து அவர்களுக்கு நிரூபித்துக் கொண்டிருக்கையில், அவரை நோக்கிப் பாருங்கள். ஒரு யூதனை நான் எடுத்துப் பார்ப்போமாக. “அவர் தமக்குச் சொந்தமானதிலே வந்தார்; அவருக்குச் சொந்தமானவர் களோ அவரை ஏற்றுக்கொள்ளவில்லை.'' முதன் முதலாக அவரிமாக வந்த மனிதர் யாரென்றால் அந்திரேயாவும் பிலிப்பும் தான். அவர்கள் அவரை பின்னே சென்றபோது அந்த இரவிலே அந்த வீட்டிலே நடந்த சம்பாஷனை என்னவென்று எனக்குத் தெரியாது. ஆனால் அடுத்த நாளிலே, அது மேசியா தான் என்று அந்திரேயா முற்றிலுமாக திருப்தியடைந்து மனநிறைவு கொண்டான். அவர் அவனிடமாக ஏதோ ஒன்றைக் காண்பித்தார், அது அவனை நேராக தன் சகோதரனாகிய பேதுருவிடமாக, அல்லது - அல்லது சீமோனிடமாக சென்று ”இதோ இப்பொழுது நாம் சென்று அது தானா என்று பார்க்கலாமா“ என்றான். அவன், ”நாங்கள் மேசியாவைக் கண்டோம்“ என்று கூறினான். 92அப்பொழுது பேதுரு “அந்திரேயா சற்று கவனி, மகனே உனக்கு நான் ஒன்றைக் கூறட்டும். நம்முடைய வயது சென்ற அப்பா ஒரு நல்ல பரிசேயனாக இருந்தவராவார், அவர் நம்மிடமாகக் கூறியுள்ளார். ஒரு நாள் படகின் பக்கத்திலே உட்கார்ந்திருந்ததை நான் நினைவில் கொள்கிறேன். அப்போது அவர் 'இதோ, இதோ, இதோ, சீமோனே, அந்த மேசியாவைக் காண்பேன் என்று அப்பா எதிர்ப்பார்த்திருந்தேன். ஆனால் மேசியா வருவதற்கு முன்னர் எல்லாவிதமான காரியங்களும் நடக்கும். எல்லாவிதமான போதகங்களும் எழும்பும் என்பதில் துளி கூட சந்தேகம் இல்லை. ஆனால் நான் அது சரியென்று நிச்சயித்துக் கொள்ள வேண்டும் ..... ” என்று கூறினாரே, ஆம் அவ்விதமான காரியங்கள் இருந்தது. ஓ, ஆம், ஆட்கள் வந்து ஆயிரக்கணக்காணோரைக் கூட்டிச்சென்று மாண்டு போயினர், இன்னும் எல்லாவிதமானவை நடந்தன. ஆனால், மேலும் அப்பா ஆனால் நான் உனக்கு ஒன்றைக் கூறட்டும். சீமோனே நாம் வார்த்தையுடனே தரித்திருக்க வேண்டும். வேதாகமம் கூறுவது, நமக்கென வந்த தேவனுடைய ஊழியக்காரனான, நம்முடைய ஊழியக்காரனாகிய மோசே 'நம்முடைய தேவனாகிய கர்த்தர் இந்த மேசியாவை எழுப்புவார், அவர் மோசேயைப் போல ஒரு தீர்க்கதரிசியாக இருப்பார்' என்று நமக்குக் கூறியுள்ளார். ஆகவே, ஆகவே சீமோனே, நி அவரை உன்னுடைய நாளிலே காண்பாயானால்..... இப்பொழுது நான் மிகவும் வயது சென்றவனாக இருக்கின்றேன். நான் அவரை என் நாளிலே காணமாட்டேன். ஆனால் நீ அவரை உன்னுடைய நாளிலே காண்பாயானால், இதை நினைவில் கொள், அவர் தேவன்-தீர்க்கதரிசியாக இருப்பார்“ என்று கூறியுள்ளாரே” என்று கூறினான். 93அவன் கர்த்தராகிய இயேசுவின் பிரசன்னத்திற்குள்ளாக நடந்து சென்ற உடனே அவர், “உன் பெயர் சீமோன். உன் தகப்பன் யோனா” என்று கூறினார். அது காரியத்தை முற்றுப் பெறச் செய்தது. இராஜ்யத்தின் திறவுகோல்கள் அவனுக்குக் கொடுக்கப்பட்டது. அது தான் மேசியாவின் அடையாளமாகும். இதோ மற்றுமொரு வைராக்கியம் கொண்ட ஒரு யூதன் வருகின்றான். அவன் “இப்பொழுது ஒரு நிமிடம் பொறுங்கள். மேசியா வந்திருப்பாரானால், இங்கே சுற்றிலுமுள்ளவர்கள் அவர் ஏதோ ஒரு ஆலயத்திற்கு வருவார் என்று விசுவாசிப்பது போல, அவர் பரலோகத்தின் நடைகூடத்தினூடாக வந்து நேராக இறங்கி இங்கே நாம் எங்கோ ஓரிடத்தில் கட்டி வைத்துள்ள நம்முடைய மகத்தான பெரிய ஆலயத்திற்கு வந்ததிருப்பாரே. அவர் அங்கே அதிலே இறங்கி வந்து சரியாக இங்கே இறங்கி நிற்பார். தூதர்கள் தங்கள் செட்டைகளை மேலும் கீழுமாக அடித்துக்கொண்டு இவர் தான் மேசியா. இவர் தான் மேசியா என்று கூறியிருப்பார்களே. அவ்விதமாக தானே அது இருக்கும்” என்று கூறினான். உடனே பிலிப்பு “சற்று பொறு. நீ கூறும் விதமானது வேதப்பூர்வமாக காணப்படவில்லை. வார்த்தையுடனே தரித்து நில். மேசியா எப்படியாக இருப்பார் என்று மோசே நமக்குக் கூறியுள்ளது என்ன? உங்களுடைய தேவனாகிய கர்த்தர் ஒரு தீர்க்கதரிசியை எழுப்புவார். பேதுரு, சீமோன் என்னும் பெயரைக் கொண்ட ஒரு வயதான மனிதன் இருந்தாரே உனக்கு நினைவிருக்கிறதா?'' என்று கூறுவதை என்னால் கேட்க முடிகிறது. “ஆமாம், ஓ, எந்த ஒரு கல்வியறிவும் பெற்றிராத அந்த வயதான மனிதன் தானே? ஆம், எனக்கு நினைவிருக்கிறது. ஆமாம், அவரை எனக்கு நினைவிருக்கிறது”. “நீ - நீ அவனிடமிருந்து மீன் வாங்கினாயே, அவனால் உனக்கு அளிக்கப்பட்ட ரசீதில் கையெழுத்து கூட போட முடியாதிருந்ததே.” “ஆமாம். ஆம், அவனை எனக்கு ஞாபகமிருக்கிறது. எனக்கு ஞாபகமிருக்கிறது. ஆமாம்.” “என்ன, அவன் நடந்து சென்ற போது .... அவனுடைய தகப்பன் உனக்குத் தெரியுமா?” ஆம், நிச்சயமாக. அவனுடைய தகப்பன் எனக்கு நன்றாகத் தெரியுமே. அவர் ஒரு உண்மையான பரிசேயன் ஆவார். ஆம், வேதத்தை நன்றாக படித்தவராயிற்றே. ஆம்.'' 'ஆம். சீமோன் அவருக்கு முன்பாக நடந்து சென்றபோது, அவர் அவனிடமாக அவனுடைய பெயர் என்னவென்றும், அவனுடைய தகப்பன் பெயர் என்னவென்றும் கூறினார்.'' “ஆ, இதோ நீ மிக அதிகமாக மிகைப்படுத்தி கூறிவிட்டாய் என்று நான் நினைக்கின்றேன். நானே அங்கு சென்று பார்க்கட்டும். அவரால் என் சிந்தையில் உள்ளதை பகுத்தறிய முடியாது. நான் சென்று பார்ப்பேனாக.” 94இயேசுவின் பிரசன்னத்திற்குள்ளாக அங்கே நடந்து செல்கிறான், அப்பொழுது இயேசு, “இதோ கபடற்ற உத்தம இஸ்ரவேலன்” என்று கூறினார். அவன், “நீ என்னைப் பார்க்கப் போகின்றாய் என்று அவரிடமாக கூறினாயா?” என்றான். “இல்லை ” என்றான். அவன், “ரபீ' என்றான். ரபீ என்றால் போதகர் (masteror teacher என்று சகோதரன் பிரன்ஹாம் கூறுகிறார். தமிழ் வேதாகமத்தில் இரண்டு வார்த்தைக்கும் போதகர் என்று உள்ளது - தமிழாக்கியோன்) என்று அர்த்தம். ” இதற்கு முன்பாக என்றாவது என்னை சந்தித்துள்ளீரா? இன்றிரவு கூட்டத்திற்கு இப்பொழுது தானே நான் வந்தேன். நீர் இதற்கு முன்னர் என்னை பார்த்ததுண்டா?“ என்றான். இயேசு, “பிலிப்பு உன்னை அழைக்கிறதற்கு முன்னே நீ மரத்தின் கீழிருக்கும்போது உன்னைக் கண்டேன்” என்றார். எப்படிப்பட்ட கண்கள்! அப்போது அவன் “ரபீ, நீர் தான் தேவனுடைய குமாரன். நீர் இஸ்ரவேலின் ராஜா” என்று கூறினான். 95ஆனால் அங்கே அந்த மகத்தான பெரிய ஸ்தாபன சகோதரர் நின்று கொண்டிருந்தனர். அப்பொழுது அவர்கள், “அது எப்படி என்று உங்களுக்கு தெரியுமா? அவன் அதை பெயல்செபூலினாலே செய்கின்றான்” என்று கூறினார்கள். பாருங்கள்? அவர்கள் தங்கள் சபையாருக்கு பதில் சொல்ல வேண்டியவர்களாக இருந்தனர். அவர்கள் பூமிக்குரிய ஆதாரச் சான்றிதழ்களைக் கொண்டிருந்தனர். அவரோ பரலோகத்திற்குரியவைகளைக் கொண்டி ருந்தார். பாருங்கள், “அவர் ஒரு தீர்க்கதரிசியாக இருப்பார்” என்று மோசே கூறியிருந்தான். ஆகவே இதோ அவர், தாம் ஒரு தீர்க்கதரிசி என்று நிரூபித்துக் கொண்டிருந்தார். அது சரி. அவர் உறுதிப்படுத்தப்பட்டிருந்தார். அவருடைய கட்டளையானது உறுதிப்படுத்தப்பட்டது. ஆகவே அவன், “இதோ, இந்த நபர் அந்த காரியத்தைச் செய்கின்றார். ஆனால் அவர் .....” என்றான். அவன் தன்னுடைய சபையாருக்கு பதில் சொல்ல வேண்டியவனாக இருந்தான். “பெயல்செபூலினாலே இதை அவர் செய்கின்றார், பிசாசு களைத் துரத்துகின்றார்” என்று கூறினார்கள். அவர்களுடைய சிந்தனைகளை அறிந்து இயேசு திரும்பிப் பார்த்தார். அவர், “மனுகுமாரனாகிய எனக்கு எதிராக நீங்கள் கூறினீர்கள், அதற்காக நான் உங்களை மன்னிக் கின்றேன்” என்று கூறினார். கவனியுங்கள், அவர்கள் அதை சத்தமாகக் கூறவில்லை . “அவர்கள் அதை தங்கள் இருதயங்களில் சிந்தித்தனர், அவர் அவர்கள் சிந்தனைகளை அறிந்தார்” என்று வேதாகமம் கூறுகின்றது. உங்கள் சிந்தனைகளை சரியாக வைத்துக் கொள்ளுங்கள். ஆம், ஐயா, “அவர்களுடைய இருதயங்களில் சிந்தனையை அறிந்தார்” என்று கூறுகிறது பாருங்கள். “அவர்களுடைய இருதயங்களை, அவர்களுடைய சிந்தனைகளை அறிந்தார்.” 96“இப்பொழுது, மனுஷகுமாரனாகிய எனக்கு விரோத மான வார்த்தை சொன்னால், உங்களை நான் மன்னிப்பேன். ஆனால் பின்பு ஒரு நாளிலே, நான் சென்ற பிறகு அங்கே புறஜாதிகளின் உலகத்தில் பரிசுத்த ஆவியானவர் வருவார், அவரும் அந்த அதே காரியத்தைச் செய்வார். அதற்கு விரோதமாக ஒரு வார்த்தை கூட கூறினால், அது இம்மையிலும் மறுமையிலும் மன்னிக்கப்படாது என்று கூறினார். அவர் பூமியை விட்டுச் செல்வதற்கு முன்னர், இதைக் கூறினார். அவர், “சோதோமின் நாட்களில் நடந்தது போல மனுஷகுமாரனின் வருகையிலும் நடக்கும்” என்று கூறினார். நான் இந்த கருத்தைக் கூறிவிட்டு முடிக்க விரும்புகிறேன், “லோத்தின் நாட்களில், அங்கே சோதோமில் நடந்தது போல, அது என்னவெட்னறு சற்று நாம் பார்க்கலாம். 97முதலில் அவர் நோவாவின் நாட்களைக் குறித்து அவர் குறிப்பிட்டார். அவர்கள் என்ன செய்து கொண்டிருந்தனர் என்று கூறினார். “புசித்தார்கள், குடித்தார்கள், பெண்கொண்டு கொடுத்தார்கள்.” அவர் சோதோமிற்கு வந்த போது, சோதோமில் அவர் என்ன செய்தார் என்பதை கவனியுங்கள். சோதோமில் இந்த காலத்திற்கென்று அவர் சோதோமை சுட்டிக் குறிப்பிட்டார். இப்பொழுது, நினைவில் கொள்ளுங்கள். அந்த சோதோமியர் புறஜாதியார்கள். பாருங்கள்? கவனியுங்கள். ஒரு நாளிலே ஆபிரகாமிடம் மூன்று மனிதர் வந்தனர். மூன்று விதமான மக்கள் எப்பொழுதுமே இருந்து வருகின்றனர், அவர்கள் யாரென்றால் : அவிசுவாசிகள், பாவனை விசுவாசிகள் மற்றும் விசுவாசிகள். இன்றைக்கும் கூட அவர்கள் இருந்து வருகின்றனர். அது சரியே. அவிசுவாசிகள், பாவனை விசுவாசிகள் மற்றும் விசுவாசிகள்; சோதோமியர், லோத் கூட்டத்தார் மற்றும் ஆபிரகாம் கூட்டத்தார். 98ஆபிரகாம் வாக்குத்தத்தத்தைக் கொண்டிருந்தான். ஜீவனுள்ள தேவனுடைய உண்மையான சபையானது எப்படி தன்னை உலகத்தின் காரியங்களிலிருந்து வேறுபிரித்துக் கொண்டுள்ளதோ அதே போல அவனும் தெரிந்தெடுக்கப் பட்ட தன்னை வேறு பிரித்துக்கொண்ட வெளியே அழைக்கப் பட்ட குழுவாக இருந்தான், ஏனென்றால், அவன் தேவனுடைய வாக்குத்தத்ததின் மேல் சார்ந்திருந்தான். தூதர்கள் முதலாவதாக யாரிடமாக வந்தனர்? ஆபிரகாமிடமாக. 99நடந்தது என்ன? அவர்களில் இருவர் சோதோமிற்கு சென்றனர், நவீன பில்லி கிரஹாம்கள், சோதோமுக்கு சென்று சுவிசேஷத்தைப் பிரசங்கித்தனர், நிறைய அற்புதங்களைச் செய்யவில்லை, அவர்கள் குருடாக்க மாத்திரம் செய்தனர். வார்த்தையைப் பிரசங்கித்தல் அவர்களை குருடாக்கிற்று. ஆகவே அவர்கள் அநேக அற்புதங்களை செய்யவில்லை, ஆனால் அதிலிருந்து வெளியே வாருங்கள்“ என்று அழைத்துக் கொண்டிருந்தனர். ஆனால் ஆபிரகாமுடன் ஒருவர் மட்டும் பேசிக் கொண்டிருந்தார். ஆபிரகாம் சற்று வினோதமான உணர்வைக் கொண்டிருந்தனான் என்று உங்களுக்குத் தெரியுமா. அந்த நபரைக் குறித்து ஏதோ ஒன்று இருந்தது. அது சற்று வித்தியாசமாக இருந்தது, ஆகவே அவன் அவரை சற்று கூர்ந்து கவனித்தான் என்று உங்களுக்குத் தெரியுமா. அப்பொழுது அவன் சாராளிடமாக, “இதோ, நீ கூடாரத்திற்குள் செல்” என்று கூறினான். 100ஆம், அந்த நாட்களிலே ஒரு அந்நியன் வந்தால், இன்று பெண்கள் நடந்து கொள்வது போல அப்பொழுது அவர்கள் செய்யவில்லை. அவர்கள் உடனடியாக வெளியே ஓடிச்சென்று தங்களை முன்னிறுத்திக் கொண்டு கணவனின் இடத்தை எடுத்துக் கொள்கிறார்கள். “ஜான், நான் கூறினாலொழிய நீங்கள் அதை விற்கக்கூடாது.” பாருங்கள்? அந்த நாளிலே பெண்கள் மிகவுமாக கண்ணியமிக்கவர் களாக இருந்தனர். பாருங்கள், அவர்கள் வீட்டிலே இருந்தனர். ஆகவே அவர்கள் அங்கே வெளியே சென்றனர், சாராள் கூடாரத்திலே இருந்தாள். ஆகவே அவன் உள்ளவே ஓடிச்சென்று “சாராளே, சீக்கிரமாக சிறிது மாவை எடுத்துப்பிசை. அதில் உள்ள எல்லா மா கட்டிகளையும் வெளியே எடுத்துப் போடு. சில அப்பங்களைச் சுடு” என்று கூறினான். அவன் சென்று ஒரு கன்றை எடுத்து அதை அடித்தான். அதைக்கொண்டு சென்று அவர்களிடமாக “இதைச் சுத்தப்படுத்தி ஆயத்தம் பண்ணுங்கள்” என்று கூறினான். 101அவன் அங்கே வெளியே சென்று அந்த பழமையான ஈக்கள் ஓட்டும் குச்சிக் கொத்தை எடுத்து ஈக்களை ஓட்ட ஆரம்பித்தான். அவர்களுடைய பாதங்களை கழுவினான். அவன் அறியாதிருந்தான், அவனுடைய இருதயத்தில் ஏதோ ஒன்று கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்தது. உங்களால் அதை கூற மாத்திரம் முடியும். உங்களுக்குத் தெரியுமா, சிலவற்றை. ஆகவே அவன், “ஒரு கட்டளை உள்ளது என்று நான் நம்புகிறேன். இப்பொழுது, ஒரே ஒரு காரியம் மாத்திரம் தான், அந்த கட்டளையில் உறுதிப்பாட்டை மாத்திரம் தான் காண்பேனானால், அவர்கள் அதைக் கொண்டிருக் கின்றனர் என்று நான் நம்புகிறேன்.” என்று கூறினான். அவன், “என்னை காணத்தான் நீர் - நீர் இந்த வழியாக கடந்து வந்துள்ளீர் என்று தெரியும். இந்த வழியாக நீர் வந்ததின் காரணம் அது தான்.'' என்றான். அது தான் சரியானதாகும். பாருங்கள்? ”அந்த ஓக் மரத்தின் கீழாக உட்கார்ந்து சாய்ந்து சற்று இளைப்பாறும்“ என்றான். ஆகவே அவர்கள் காரியங்களை ஆயத்தப்படுத்திக்கொண்டிருந்த போது அவன் அவர்களுடைய பாதத்தை கழுவினான். அவர்கள் உட்கார்ந்து புசித்தார்கள். 102அது தேவன் தாமே, சர்வவல்லமையுள்ள தேவன் தாமே. அப்படித்தான் என்று வேதாகமம் கூறுகின்றது. அதிலே நீங்கள் பாருங்கள். அதில் கொட்டை எழுத்தில் கர்த்தர், L-o-r-d, ஏலோகிம் என்று உள்ளதா என்று பாருங்கள். அது சரியே. அநேக முறை ஒருவர் “அது தேவன் தான் நீங்கள் விசுவாசிப்பதில்லை” என்று கூறினார். நான், “அது தேவன் தான். அவ்விதம் வேதாகமம் கூறுகின்றது” என்று கூறினேன். அதற்கு அவர், “அந்த சரீரத்தில் தேவன் மாம்சம் சாப்பிட்டார் என்று நீங்கள் கூறினீர்களே அது எப்படி? என்றார். “நிச்சயமாக அப்படித்தான். வேதாகமம் அவ்விதமாகக் கூறுகின்றது. நீங்கள் அல்ல. அவர் எவ்வளவு மகத்துவமானவர் என்று நீங்கள் உணரவில்லை ” என்றேன். அது சரியே. அவரால் அதைச் செய்ய முடியும் என்பதில் எனக்கு மகிழ்ச்சியே. ஆம், உங்களுக்குத் தெரியுமா, ஒரே காரியம் தான், நாம் பதினாறு மூலக்கூறுகளைக் கொண்டு தான் உருவாக்கப் பட்டுள்ளோம். petroleum, cosmic light, calcium, potash மற்றும் அதைப் போன்ற சில காரியங்களைக் கொண்டு உருவாக்கப் பட்டுள்ளோம். ஆம், அவர் கையை நீட்டி அவைகளை சிறிதளவு அள்ளி, “வியூ! காபிரியேல் அதற்குள்ளாகச் செல்'' என்பார், பாருங்கள், ஒரு தூதன். அடுத்ததாக கையளவு மற்றொன்றை அள்ளி, ”வியூ! மிகாவேல், அதற்குள்ளாகச் செல்'' என்றார். அடுத்ததாக அதே விதமாகச் செய்து, “வியூ! அவர் தாமே அதற்குள்ளாக அடியெடுத்து வைத்து தம்மையே அதில் நிலை நிறுத்திக் கொண்டார். அதைக்குறித்து எனக்கு மகிழ்ச்சி. பாருங்கள்? வெளியே நடந்து வந்து, ”நான் கீழே செல்கிறேன்“ என்று கூறினார். அது நம்முடைய தேவனாகும். என்றாவது ஒரு நாளிலே, இந்த எல்லா மூலக்கூறுகளும் செல்லப்போகின்றன. ஆகவே அவர், “வில்லியம் பிரன்ஹாம்?'' என்பார். அதற்கு நான், “இதோ அடியேன் கர்த்தாவே” என்று கூறுவேன். அவர் மகத்தானவர். ஆம். 103“அங்கே கீழே உள்ள என் ஊழியக்காரனிடத்திற்கு முன்பாக நான் என்னையே உருப்படுத்திக்கொண்டு காண்பிக்க, பிரதிநிதித்துவப்படுத்திக்கொள்ள விரும்புகிறேன். ஆகவே அவனைப் போல நானும் ஒரு மனிதனாக இருக்க விரும்புகிறேன்” என்று கூறினார். அவர் கீழே இறங்கி நடந்து வந்தார், அங்கே உட்கார்ந்தார். அவருடைய ஆடைகளில் தூசி படிந்திருந்தது. அங்கே உட்கார்ந்து ஆகாரம் புசித்தார். அங்கே உட்கார்ந்தார். அவர் சோதோமை நோக்கிப் பார்த்துக் கொண்டிருந்தார் என்று உங்களுக்குத் தெரியுமா. ஏதோ ஒன்று நடந்தேறப் போகின்றது என்று ஆபிரகாம் அறிந்திருந்தான். ஏனென்றால் அது மிகவும் கேடான ஒரு இடமாக இருந்தது என்று உங்களுக்குத் தெரியும். ஆகவே அவன் அதைக்குறித்து சிந்தித்துக் கொண்டிருந்தான். அவர் கூறினார்.... இப்பொழுது, நினைவில் கொள்ளுங்கள், அவனுடைய பெயர் ஆபிராம் என்றும் சாராளுடைய பேயர் சா-ரா-ய் என்றுமாக இருந்தது. அதற்கு சில நாட்களுக்கு முன்னர், தேவன் அவனை ஒரு தரிசனத்தில் சந்தித்து, அவனுடைய பெயரை ஆபிரகாம் என்றும் அவளுடைய பெயரை சாராள், சா-ரா-ள் என்றும் மாற்றினார். சாராள் என்றால் “ இளவரசி” என்பதாகும். ஆபிரகாம் என்றால் “ஜாதிகளுக்குத் தகப்பன் (father of nations) என்பதாகும். அப்பொழுது அவர் “ஆபிரகாமே” என்றார். 104அதற்கு ஆபிரகாம்“ஓ-ஓ, நான் நினைத்தது சரியே, இந்த மனிதனைக் குறித்து ஏதோ ஒரு வித்தியாசம் இருக்கின்றது'' என்றான். “ஆபிராமே, உன் மனைவி சா-ரா-ள், சாராள் எங்கே? உன் மனைவி சாராள் எங்கே?” சரியாக அப்பொழுதே அவன் அது என்னவென்று தெரிந்து கொண்டான். அவன், “ஓ, அவன் கூடாரத்தில் இருக்கிறாள்” என்று கூறினான். வேதாகமம், “அவருக்கு பின்புறத்தில் இருந்தது. அந்த கூடாரம் அவருக்கு பின்னால் இருந்தது” என்று கூறுகின்றது. அவர், “ஆபிரகாமே நான் ...'' என்றார். personal pronoun அவனிடமாக பேசின அந்த அதே நபர். ”ஒரு உற்பவகாலத் திட்டத்தில் சாராளோடு உன்னிடம் வரப்போகிறேன், அப்பொழுது நீ எதற்காக காத்திருக்கின்றாயோ அந்த குழந்தையை நீ பெற்றுக்கொள்ளப்போகிறாய். உனக்கு இப்பொழுது நூறு வயது, அவளுக்கு தொண்ணூறு வயது. ஆனாலும் நான் உனக்கு வாக்குரைத்தபடியே இந்த குழந்தையை நான் உனக்குக் கொடுக்கப்போகிறேன், ஏனென்றால் நீ உண்மையுள்ளவனாயிருந்து காத்திருக் கின்றாய்.'' என்றார். 105அங்கே பின்னாலே கூடாரத்தில் இருந்த சாராள், “ஹஹ்” என்றாள். அவள் அதை சத்தமாக கூறவில்லை . அவள் தன் உள்ளத்திலே நகைத்தாள், “நான் கிழவியும், என் ஆண்டவன் முதிர்ந்த வயதுள்ளவருமான பின்பு, எனக்கு இன்பம் உண்டாயிருக்குமோ?'' என்றாள். ”அவ்விதம் நடக்கவே நடக்காது. அந்த நபர் தாம் எதைக்குறித்து பேசுகிறோம் என்பதை அறியாதவராயிருக்கின்றார்“ என்றாள். அந்த தூதன், “சாராள் ஏன் நகைத்தாள்?” என்றார். உம்! அது என்னவாயிருந்தது? அவர் சோதோமை சுட்டிக் காண்பித்தார். அந்த தூதனின் வருகைக்குப்பிறகு, அந்த கடைசி அடையாளமானது அளிக்கப்பட்ட பிறகு, அந்த கடைசி அடையாளம் அளிக்கப்பட்ட பிறகு சோதோம் எரிக்கப் பட்ட து. இயேசு “சோதோமின் நாட்களிலே நடந்தது போல மனுஷக்குமாரன் வருங்காலத்திலும் நடக்கும்” என்று கூறினார். தேவன் தம்முடைய சபையிங்ல காலங்களினூடாக அடையாளங்கள், அற்புதங்களின் மூலமாக செயல் தொடர்பு கொண்டு ஆளுகை செய்தார். ஆனால் கடைசியாக இருக்க வேண்டியது என்னவென்றால், முன்பு எப்படியாக அவர் மானிட மாம்சத்தில் அங்கே இருந்து மேசியா ஏற்கெனவே தம்முடைய சபையிலே மாம்சத்தில் வெளிப்படுவதேயாகும். இயேசு வாக்குத்தத்தம் செய்த அந்த வார்த்தையானது சத்தியம் என்று உறுதிப்படுத்துவதற்கான ஒரு ஆதார சான்று அதுவாகும். நாம் ஜெபிப்போமாக. 106எங்கள் பரலோகப் பிதாவே, அது உம்முடைய வார்த்தையாகும். கட்டளையின் உறுதிபாடாகும். பிதாவே, அது உம்முடைய வார்த்தை. எங்களால் அதை பேசத்தான் முடியும். கர்த்தாவே நீர்தாமே அதை உறுதிப்படுத்த வேண்டும் என்று நான் ஜெபிக்கின்றேன். அதை நான் அறிவேன். நான் ஏறக் ....... நீர் தாம் என்னுடைய பயத்தையும், என்னுடைய - என்னுடைய கல்வியறிவு இல்லாமையையும் அதைக் குறித்த எல்லாவற்றையும் மன்னிக்கும்படியாகவும், ஒரு செய்தியை கொண்டு வர நான் கொண்டிருக்கும் இந்த என்னுடைய அற்பமான, கோர்வையாக இராமல் சொல்வனை இல்லாத விதத்தை மக்களின் மனதிலிருந்து எடுத்துப் போடும் படியாகவும் நான் ஜெபிக்கின்றேன். பிதாவே, இங்கே அந்நியரும் பரதேசிகளுமாக இருக்கின்ற ஆண்களோடும், பெண்களோடும் உட்கார்ந்திருக்கையில், மேலும் - மேலும் பரிசுத்த ஆவி என் மேல் விழுகையில், என்னால் - என்னால் - என்னால் அதை அப்பெடியே வெளிக்கொணர்வதைத் தவிர வேறு எதையும் எனக்கு செய்யத் தெரியவில்லை . 107இன்றைக்கு முழு உலகமும் அசைந்து கொண்டிருக் கையில், இப்பொழுது அவர்கள் கூறுவது என்னவென்றால், இன்னும் சில நாட்களில் அவர்கள் ஒரு மனிதனை விண் வெளிக்கு அனுப்பி அவனை உலகத்தைச் சுற்றி வரச் செய்து, உலகத்தைச் சுற்றச் செய்யப்போகிறார்கள், சந்திரனுக்கு ஒரு மனிதனை அனுப்ப முயற்சி செய்கிறார்கள் என்று கூறுகின்றனர். முழு உலகமும், நடுங்கிக்கொண்டும், அதிர்ந்துக் கொண்டும் இருக்கின்றது. எல்லாவிடங்களிலும் சிறிய நாடுகள், பூமியிலே இருநூற்றைம்பது அல்லது முன்னூற்றைம்பது சதுர மைல்கள் அகலம் கொண்ட நூற்றைம்பது அடி ஆழ பள்ளத்தை உண்டு பண்ணும் ஏவுகனைகளை வைத்திருக்கின்றன. அவைகளில் மூன்று ஒன்று சேர்ந்தால் ஒரு சமயத்தில் முழு பூமியையும் மூழ்கும்படிக்குச் செய்துவிடும். ஆகவே முழு உலகமும் நரம்புத் தளர்ச்சி நிலையில் இருக்கின்றது. 108சபைகள் வார்த்தையை விட்டு அப்பாலே சென்று விட்டன. பூமிக்குரிய ஆதார சான்றுகளை வைத்துள்ள எல்லா விதமான அமைப்புகளும், ஸ்தாபனங்களும் இருக்கின்றன. ஆகவே நீங்கள் அவைகளை சார்ந்திராவிடில் அவர்களுடைய சபைகளில் எந்த ஒன்றிலும் கூட உங்கள் தலையைக் கூட காட்ட முடியாது. ஆனாலும், இன்னுமாக, அங்கே முன்பு நோவாவின் காலத்தில் நடந்தது போல, வேதாகமத்தினூடாக நடந்தது போல, கர்த்தாவே, நீர் தாமே இன்னுமாக உம்முடைய தீர்க்க தரிசிகளையும் ஊழியக்காரர்களையும் ஒரு கட்டளையுடனும் அக்கட்டளைக்கு பின்னால் அதன் உறுதிப்பாட்டுடனும் அனுப்பிக்கொண்டிருக்கின்றீர். தேவனே, நீர் அதை வாக்குத்தத்தம் செய்துள்ளீர் என்பதற்காக நான் அதைக் குறித்து மிகவும் மகிழ்ச்சி கொள்கிறேன். ஆகவே இப்பொழுதும் கர்த்தாவே, 'பயப்படாதே சிறுமந்தையே, சிறுமந்தையே, உங்களுக்கு ராஜ்யத்தைக் கொடுப்பது உங்கள் பிதாவின் பிரியமாகும்“ என்று நீர் கூறியிருக்கின்றீர். நீர், “நோவாவின் நாட்களில் நடந்தது போல, அந்த சிறு குழுவானது தண்ணீரால் இரட்சிக்கப்பட்டது போல, மனுஷகுமாரன் வருங்காலத்திலும் அப்படியாக நடக்கும்” என்று கூறியிருக்கின்றீர். லோத்தின் நாட்களில் ..... நோவாவின் காலத்திலே, “அவர்கள் புசித்தும், குடித்தும், பெண் கொண்டும் பெண் கொடுத்தும்” இருந்தனர். இன்றைக்கு பார்க்கப் போனால், பிதாவே, அதை நாங்கள் காண்கிறோம். பாவத் தினால் நிறைந்த உலகமானது அதை செய்து கொண்டிருந்தது. 109லோத்தின் நாட்களை சற்று இப்பொழுது பாருங்கள். எப்படிப்பட்ட ஒரு தாறுமாறு, ஆண்புணர்ச்சிக்காரர்கள்! ஓ, உலகமானது, முழு தேசமானது, நம்முடைய அரசாங்கத்தில் அநேகம் பேரை அது விழுங்கி உள்ளது, எல்லா இடத்திலும் உள்ளது. ஓ, கர்த்தாவே, பிசாசுகளாலும், சத்துருவின் வல்லமையினாலும் புழுவினால் தின்னப்பட்ட ஒன்றைப்போல நாம் தின்னப்பட்டிருக்கின்றோம். முழு உலகமே மிகவுமாக பயந்து போயுள்ளது. நம்முடைய முழு ..... நம்முடைய தேசமானது இருக்கின்ற நிலை என்னவென்றால் ஒரு சிறு பையன் இரவு நேரத்திலே சுடுகாட்டின் நடுவிலே செல்லும்போது பயத்திலிருந்து தன்னை காத்துக்கொள்ள விசில் அடித்துக்கொண்டு செல்வது போல அந்நிலையில் இருக்கின்றது. அது வாசலில் இருக்கின்றது என்பது நமக்குத் தெரியும். சபையிடமாக கர்த்தாவே “உங்கள் முழங்கால்களை உயர்த்துங்கள் ..... இவைகள் சம்பவிக்கத் தொடங்கும்போது உங்கள் மீட்பு சமீபித்து வந்து கொண்டிருப்பதால் உங்கள் கண்களை நிமிர்ந்து பார்த்து உங்கள் தலைகளை உயர்த்துங்கள்” என்று கூறியிருக்கின்றீர். 110பரிசுத்த ஆவி தாமே உம்முடைய சபையின் மீது பொழியப்பட்டுள்ளது. நீர் ஒவ்வொரு தேசத்திலிருந்தும் மக்களை அழைத்திருக்கின்றீர், மெக்சிக்கர்கள், வெள்ளை யர்கள், ஆங்கிலோ சாக்சன்கள், கறுப்பு இனத்தவர், எத்தியோப் பியர்கள், மற்றும் உலகெங்கிலுமாக உள்ள பலதரப்பட்ட இனத்தாரை அழைத்திருக்கின்றீர். பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட்டுள்ள உம்முடைய சிறிய மிஷனிரிமார்கள், பசியிலும் பட்டினியிலும் ஊழியத்திற்கென்று சென்றனர். அவர்களில் அநேகர் கொலை செய்யப்பட்டனர். சிலுவை யிலறையப்பட்டனர். பரியாசம் செய்யப்பட்டனர், எல்லாவித காரியங்களும் அவர்களுக்கு செய்யப்பட்டது. எந்த ஒரு பெரிய சபையின் உதவி இல்லாமலே அங்கே சென்றுள்ளனர், “விசுவாசிக்கிறவர்களை இந்த அடையாளங்கள் பின் தொடரும்” என்பதுடன், தேவனுடைய கட்டளையுடனே அவர் சென்றனர். கர்த்தாவே, அங்கே வெகு தூர தேசங்களிலே ஊழியக்களத்திலே அவர்களை நான் சந்தித்திருக்கின்றேன். அந்நிய பாஷையில் பேசவும் அதன் அர்த்தத்தை வியாக்கியானம் செய்யும்படியாக தேவனுடைய மகத்தான வல்லமையை நாங்கள் கொண்டிருந்தோம். பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தையும் வல்லமையின் demonstration நாங்கள் கொண்டிருந்தோம். ஆகவே இப்பொழுதும், கர்த்தாவே, தெரிந்து கொள்ளப் பட்டவர்களுக்கும், வெளியே அழைக்கப்பட்டவர்களுக்கும் பிரதிநிதித்துவமாயிருந்த ஆபிரகாமை நீர் எடுத்தீர். நீர் ஆபிரகாமை அந்த பாலைவனத்தினூடாகக் கொண்டு வந்தீர். வேறு பிரித்தீர், எல்லாவிதமான அடையாளங்களையும் நீர் அவனுக்குக் காண்பித்தீர். ஆனால் தேவன் தாமே, தம்மைத் தாமே மாம்சத்தில் வெளிப்படுத்தினது தான் கடைசி அடையாளமாக இருந்தது. 111இயேசுவே, நீர் “அந்த நாளில் நடந்தது போல, மனுஷகுமாரன் வரும் போதும் அப்படியாக இருக்கும்” என்று கூறியுள்ளீர். வாரும் கர்த்தாவே, நான் தெளிவாக அதை அறிந்துள்ளபடியே, இது உம்முடைய வார்த்தையாகும். கர்த்தாவே, அது மறுபடியுமாக நடைபெறட்டும். அது தாமே டெம்பியில் நடைபெறட்டும். அப்படியாக அது கர்த்தராகிய இயேசுவின் வருகையானது வெகு அருகில் வந்து கொண்டிருக்கிறது என்பதற்கான உறுதிபாடாக அமையட்டும். கர்த்தாவே, அதை அருளும். அது எங்கள் எல்லோரையும் பெலப்படுத்தட்டும் கர்த்தாவே, இந்த சகோதரரை அது தாமே பெலப்படுத்தும். எல்லாவிடங்களிலும் இருக்கின்ற உம்முடைய ஊழியக்காரர்களை அது பெலப்படுத்தும் சபையோரையும் அது பெலப்படுத்தும். அது எங்கள் எல்லோரையும் மகிழ்ச்சிக்குள்ளாக்கும். பிதாவே, அதை அருளும். 112இப்பொழுது, என்னால் செய்யக்கூடியது உம்முடைய வார்த்தையை பேசுவது தான். இப்பொழுது, கர்த்தாவே, அந்த உறுதிப்பாட்டைச் செய்ய உம்மால் மாத்திரமே முடியும். என்னால் அது செய்ய முடியாது. ஆனால் அது ஒரு கட்டளையாக இருக்குமானால், நான் அந்த சத்தியத்தை பிரசங்கித்துள்ளேன் என்று நம்புகிறேன், பரலோகப் பிதாவே, இந்த நாளில் அவ்விதமாக இருக்கும் என்று நீர் வாக்குத்தத்தம் செய்துள்ள அந்த அடையாளங்களைக் கொண்டு நீர் தாமே அதை உறுதிபடுத்துவீர் என்று நான் நம்புகிறேன். இப்பொழுதும் பிதாவே, நீர் எங்கள் மத்தியில் இருக்கின்றீர் என்பதை நீர் எங்களுக்குக் காண்பிக்கும்படியாக நாங்கள் உம்மை நோக்கிப் பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றோம். “நான் செய்கிற கிரியைகளை நீங்களும் செய்வீர்கள்.'' அது உம்முடைய வாக்குத்தத்தமாகும். 113ஆகவே, பிதாவே, அது இங்கே என்னுடைய சகோதரரை மிகவுமாக பெலப்படுத்தும், சபையை அது எவ்வளவாக பெலப்படுத்தும்; அது ஏதோ ஒரு புராணம் கதையல்ல, “ஆமாம், காலாகாலமாக இது பிரசங்கிக்கப்படுவதை நான் கேட்டிருக்கிறேன்” என்று நீங்கள் கூறினது போலல்ல. ஆனால், பிதாவே, உம்முடைய வார்த்தையை காத்துக்கொள்கிற தேவன் நீர் என்பதை இவர்கள் காணட்டும். இப்பொழுது, பிதாவே, என்னை விட மேலான ஒன்றால் தான் இதைச் செய்ய முடியும். அது இந்த சபையை ஒரே மனதிலானதாகச் செய்யும். உண்மையான, கலப்படமற்ற விசுவாசத்தைக் கொண்டு தான் அதைச் செய்ய முடியும். ஆகவே, பிதாவே, நீர் தாமே அதை தேவனுடைய மகிமைக்கென்று அருளும்படியாக இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கின்றேன். ஆமென். இப்பொழுது, நண்பர்களே, ஜெப வரிசை, ஓ, என்னை மன்னிக்கவும் (சகோதரன் ஓ “டான்னல் பரவாயில்லை. தொடர்ந்து நடத்துங்கள்” என்று கூறுகிறார் - ஆசி). பிரசங்க பீடத்திலே என்னுடைய பரபரப்பான, நயமற்ற செய்கைகளை சற்று பொறுத்துக் கொள்ளுங்கள். நீங்கள் பொறுத்துக் கொள்ள வேண்டுமென்று நான் - நான் ஜெபிக்கின்றேன். நிசாயா மாநாட்டுக்கு முன் புத்தகத்தை நான் படித்துவிட்டு வந்துள்ளேன். ஹிஸ்லோப்பின் இரண்டு பாபிலோன்கள், பிராட்பென்ட்டின் யாத்ரீக சபை, நிசா ஆலோசனை சங்கத்திற்கு முன், நிசாயா ஆலோசனை சங்கம், மற்றும் நிசாயா ஆலோசனை சங்கத்திற்கு பிறகு, நிசாயா பிதாக்கள், ஆகிய புத்தகங்களை எடுத்து வாசித்தேன், பரிசுத்த ஆவியானவர் எவ்விதமாக அவர்களை அசைத்தார் என்பதை அதில் கண்டேன். தங்களுடைய சபையிலே ஒரு பிரசங்க மேடையைக் கூட அவர்கள் கொண்டிருக்கவில்லை. சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்துவின் உருவம் போன்றவற்றை அவர்கள் கொண்டிருக்கவில்லை. ரோமன் கத்தோலிக்க சபையானது அந்த சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்துவின் உருவத்துடன், ஒரு கோட்பாட்டையும் வைத்து எடுத்துச் சென்றது. ஆனால் அந்த உண்மையான வைதீக சபையானது அந்த கோட்பாட்டிலிருந்து அகன்று விலகி இருந்தது, கற்பலகைகள் மாத்திரமே இருந்த சிறு கட்டடங்களை கொண்டிருந்தது. ஆகவே அவர்கள் ..... யாரோ ஒரு தேவ மனிதன் தேவனுடைய வார்த்தையை விவரிப்பார். அப்பொழுது தேவனுடைய வல்லமை கீழே இறங்கும். அவர்கள் அப்படியே தங்கள் கரங்களை உயர்த்தி தேவனைத் துதிப்பார்கள். அவர்கள் அந்நிய பாஷையில் பேசுவார்கள், அடையாளங்களும் அற்புதங்களும் அவர்களை பின் தொடரும். ஆம், ஐயா. 114பாலிகார்ப், இக்னேஷியஸ், மார்டின், ஐரினேயஸ், கொலம்பா, ஓ என்னே, ஜஸ்டின் மற்றும் இன்னும் அநேக உண்மையான தேவ மனிதர் ரோமன் என்று குறிப்பிடப்பட்ட அந்த இன்னொரு சபையை அவர்களாலே பொறுத்துக் கொள்ளவே முடியவில்லை. அவர்கள் கத்தோலிக்கராகவே இருந்தனர். நாமெல்லாரும் கூட கத்தோலிக்கர் தான் அப்போஸ்தல கத்தோலிக்கர் கத்தோலிக்கம் என்றால் “உலகளாவிய” என்று அர்த்தமாகும். ஆகவே ரோமன் கத்தோலிக்க சபையானது சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்துவின் உருவம் மற்றும் கோட்பாடுகளையும் இன்னும் அதைப் போன்றவைகளையும் எடுத்துக்கொண்டு 'வேதாகமம் வேண்டாம்“ என்றது. ”தேவன் தம்முடைய சபையில் இருக்கின்றார்“ என்றனர். தேவன் தம்முடைய வார்த்தையில் இருக்கின்றார். வேதாகமம், “ஒருவன் இதிலிருந்து எடுத்துப்போடப்பட்டால் அல்லது எதையாகிலும் கூட்டினால் ஜீவ புஸ்தகத்திலிருந்து அவனுடைய பங்கு எடுத்துப்போடப்படும்” என்று கூறுகின்றது. தேவன் என்ன கூறியிருக்கின்றாரோ அதை மாத்திரமே நாம் விசுவாசிக்கின்றோம். அவ்வளவு தான். இப்பொழுது, ஆகவே தான் நாம் இன்னுமாக அந்த செய்தியை விசுவாசிக்கின்றோம். 115இப்பொழுது, இன்றிரவு வியாதியுள்ள மக்கள் இருக்கின்றீர். தேவன் தம்முடைய கட்டளையை உறுதிபடுத்துகின்றார் என்பதை நான் உங்களுக்கு பிரசங்கித்தேன். அது உண்மை . தேவன் தம்முடைய வார்த்தையை உறுதிப்படுத்த அதின் மேல் கண்ணோக்க மாயிருக்கிறார். அவர் செய்ய முயற்சிக்கின்ற ஒரேயொரு காரியம் என்னவென்றால் தாம் உள்ளே பிரவேசிக்கக்கூடிய ஒரு இருதயத்தை காண விழைந்து கொண்டிருக்கின்றார். இப்பொழுது, நீங்கள் அதை அதிகமாக பிரயோகித்து விடப்போகிறோம் என்று எண்ணவேண்டாம். உங்களால் முடியாது. அரை அங்குல நீளம் கொண்ட ஒரு மீன் சமுத்திரத்தின் நடுவில் சென்று “இந்த தண்ணீரை சிறிது சிறிதான அளவாக குடிக்கலாம். ஒருக்கால் அதிகமாக குடித்தால் தண்ணீர் காலியாகிவிடலாம் அல்லவா?” என்று கூறுவதை உங்களால் கற்பனை செய்து பார்க்க முடியுமா? 116“ஆம், நான் பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொண்டேன்'' என்று நீங்கள் கூறலாம். ஓ, அங்கே மாத்திரமே - மாத்திரமே..... பரலோகம் முழுவதுமாக அதினாலே நிறைந்திருக் கின்றது. பாருங்கள்? தேவன் தாமே ..... அது எப்படியென்றால் ...... அப்படியாக முழுவதுமாக இருக்குமானால், முழு பரலோகமும் ஒரு மிகப்பெரிய பாதை குழாயாக இருந்து அதில் ஒரு சிறிய வெடிப்பு இருக்குமானால் அது எல்லாமே ஒன்று சேர்ந்து ........... தண்ணீ ரானது அந்த வெடிப்பிலிருந்து அதிக அழுத்தத்ததுடனே மிக வேகமாக வெளியே வரும்படிக்கு ஓடி வரும். அந்த விதமாகத்தான் பரிசுத்த ஆவியானவர் தம்மைத் தாமே உங்களுக்குள்ளாக வேகமாக வரும்படிக்கு முயற்சிக்கின்றார். அந்த விதமாகத்தான், அதை நீங்கள் விசுவாசிக்க செய்யும்படிக்கு முயற்சி செய்கின்றார். அவர் தாமே ..... 117ஜெப அட்டைகளை அவர் வினியோகித்து விட்டாரா, நான் ஜெபிக்கலாமா? அவர் கொடுத்துவிட்டார் என்று நான் நம்புகிறேன். (சகோதரர் “ஆம்” என்று கூறுகின்றனர் - ஆசி.) சரி எப்படியாக .... அவர் எங்கே இருக்கின்றார்? என்ன? சற்று பொறுத்துக்கொள்ளவும். ஒன்றிலிருந்து ஐம்பது வரை. சரி. ஒரே நேரத்தில் எல்லோரையும் நம்மால் நிற்க வைக்க முடியாது, சற்று அப்படியே நில்லுங்கள், நீங்கள் முன்னே வர ஆரம்பிக்கையில், இங்கே இருக்கின்ற இந்த சிறிய வரிசையானது சற்று நகர ஆரம்பித்து அவர்களும் சற்று முன்னே வருவார்கள். அங்கே நீங்கள் கவனிப்பீர்களானால், ஒரு தண்ணீரால் நிரப்பப்பட்ட கண்ணாடி குவளையானது வைக்கப்பட்டுள்ளது. சரி. 118நாம் இப்பொழுது ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து, ஆறு, ஏழு, எட்டு, ஒன்பது, பத்து ஆகிய எண்களை நாம் பார்ப்போமாக. அவர்கள் அங்கே நிற்கட்டும். எண் ஒன்று, அந்த எணை யார் வைத்துள்ளார்? ஜெப அட்டை எண் ஒன்று? வெறும் எண் மாத்திரமே குறிப்பிடப்பட்டுள்ள ஒரு ஜெப அட்டை மாத்திரமே. எண் ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, போன்று எழுதப்பட்டிருக்கும். ஜெப அட்டை எண் ஒன்று, யார் அதை வைத்துள்ளார்கள்? நிச்சயமாக ஏதோ தவறு நடந்து இருக்கின்றது. அதை ஸ்பானிஷ் மொழியில் சற்று கூறுங்கள். ஸ்பானிஷ் மொழியில் எண் ஒன்று என்றால் என்ன? [யாரோ ஒருவர் “உனோ” என்கின்றனர் - ஆசி] உனோ, உனோ, அதை வைத்திருப்பவர் யார்? எண் ஒன்று? அது என்ன? சரி, இதோ இங்கே உள்ளனர். எண் இரண்டு, யார் அதை வைத்திருக்கிறீர்கள்? எண் மூன்று, நான்கு, ஐந்து, ஆறு, ஏழு, எட்டு? அஹ்? ஆம், அது சரி, சரி. சரி. ஒன்று, இரண்டு, ஒன்று, மூன்று, நான்கு, ஐந்து, ஆறு, ஏழு, எட்டு, ஒன்பது, பத்து அவர்கள் இங்கே வரட்டும். இங்கே வாருங்கள், உங்களால் முடியுமானால் இதைச்சுற்றிலும் நில்லுங்கள். உங்களால் இங்கே மேலே வர முடியவில்லையென்றால், சற்று உங்கள் கையை உயர்த்துங்கள். நீங்கள் இங்கே வருவதற்கு நாங்கள் உதவுவோம். யாராவது உங்களை மேலே கொண்டு வரும்படிக்கு நாங்கள் பார்த்துக்கொள்வோம். சரியா? ஆறு, ஏழு, எட்டு, ஒன்பது, பத்து, பதினொன்று, பன்னிரெண்டு, பதிமூன்று, பதினான்கு, பதினைந்து, பதினாறு, பதினேழு, பதினெட்டு, பத்தொன்பது, இருபது ஒன்றிலிருந்து இருபது வரைக்குமாக அவர்கள் வரட்டும், வந்து இங்கே நீ;கள் உங்களை வரிசைப்படுத்திக் கொண்டு நில்லுங்கள். அது சரி, அது சரி. 119இப்பொழுது, நீங்கள் ஜெப அட்டைகளை வைத்திருப்பீர் களானால், நண்பர்களே, இங்கே வாருங்கள். இங்கே வராமல் இருந்து விட வேண்டாம். அப்படிச் செய்வீர்களானால் வேறு ஒருவருக்கு சேர வேண்டியதை சேர விடாமல் நீங்கள் மோசடி செய்கிறீர்கள். உங்களுடைய ஜெப அட்டையை பெற்றிருப்பீர் களானால் இங்கே வருவதற்கு பயப்பட வேண்டாம். உங்களுக்கு அவர்கள் ஒரு ஜெப அட்டையை கொடுத்திருந்தால் இங்கே வாருங்கள். இப்பொழுது, என் மகன் இந்த ஜெப அட்டைகளை முதலாவதாக அங்கே எடுத்து வருவான். அதை எடுத்து அங்கே நின்று அவைகளை எடுத்து ஐம்பது அல்லது நூறு அட்டை களையோ அல்லது அவனால் என்ன செய்யக்கூடுமோ அத்தனை எடுத்து அவைகளை ஒன்றாகக் கூட்டி கலந்து விடுவான். பிறகு அங்கே வரிசைக்கு சென்று எல்லோருக்கும் கொடுப்பான். ஒன்று நபர் “ஜெப அட்டை எண் ஒன்றை” பெற்றுக்கொள்வார். மற்றொருவருக்கு “எண் பத்து” கிடைக்கும், மற்றொருவருக்கு “ஐம்பது'' கிடைக்கும். இன்னும் மற்றொருவருக்கு ”தொண்ணூறு கிடைக்கும், அது போன்று தான் விநியோகிக்கப்படும். குறிப்பிட்ட ஜெப அட்டை எண் எங்கே உள்ளது என்று எங்களுக்குத் தெரியாது. அவை களெல்லாம் தொடர்ச்சியாக இல்லாமல் கலைக்கப்பட்டிருக்கும். அப்படி செய்யும்போது மகனுக்கு எந்த எண் எங்கே இருக்கின்றது என்று தெரிய வாய்ப்பில்லாமல் செய்து விடும். மேலும், அந்த இரவில் எந்த எண்ணிலிருந்து அழைக்க ஆரம்பிப்பேன் என்று கூட மகனுக்குத் தெரியாது. ஏனென்றால், பாரு'கள், அது எனக்குக் கூட தெரியாது. ஒருக்கால் நான் ஆரம்பிப்பது ...... இதற்கு முன்னர் நடந்து கூட்டங்களில் எத்தனைப் பேர் இருந்துள்ளீர்கள், நான் அந்த எண்களை தாண்டி தாண்டி அழைப்பது எத்தனை பேருக்கு தெரியும்? அது சரி. சரி? 120ஆதலால், அநேக முறை மக்கள் மேலே வருவதற்கு பயப் படுகின்றனர், ஏனென்றால் தங்கள் பாவங்கள் இங்கே கூறப்பட்டு வெளியாக்கப்படுகின்றன. இப்பொழுது, நீங்கள் ஏதாவது தவறு செய்திருந்து, அது வெளியே அழைப்படாதிருக்க விரும்புவீர்களானால் நீங்கள் இங்கே வராமல் இருப்பது நல்லது. அவ்வளவு தான், ஏனென்றால் நிச்சயமாக அவர் அதைச் செய்வார். ஆஹ் - அஹ். அது உண்மை என்று எத்தனைப் பேர் அறிவீர்கள்? [சபையார் “ஆமென்” என்கின்றனர் - ஆசி ஆம்.] ஐயா, நிச்சயமாக அது உண்மையாகும், இப்பொழுது, நீங்கள் ஆக்கினைக்குள்ளாக தீர்க்கப் பட்டு பாவத்தின் கீழ் இருந்தீர்களானால், என்ன, நீங்கள் வரலாமல்லவா. ஆனால் அப்படியாக நீங்கள் இல்லாமல், நீங்கள் இரத்தத்தின் கீழ் இருப்பீர்களானால், வாருங்கள், பாருங்கள்? சரி. இப்பொழுது சரி, நல்லது, நாம் சரியாக இங்கிருந்து ஆரம்பித்து எதுவரைக்குமாக செல்ல முடியும் என்று பார்ப்போம். இப்பொழுது, எத்தனைப் பேர் வியாதியுள்ளவர்களாக உள்ளே வந்து, தாமதமாக வந்தோ அல்லது வேறெதாவது காரணத்தாலோ ஜெப அட்டை கிடைக்கப் பெறாதவர்கள் எத்தனை பேர் இங்கே இருக்கின்றீர்கள்? உங்கள் கரங்களை உயர்த்துங்கள், கட்டடம் முழுவதுமாக உள்ளனர், சரி, ஜெப அட்டை இல்லாதவர்கள். 121சரி, ஒரு மக்கள் கூட்டத்துக்குள்ளாக கடந்து சென்ற ஒரு ஸ்திரீ இருந்தாள். ஒருக்கால் அவளுக்கு ஜெப அட்டை இல்லாதிருக்கலாம், ஆனால் அவள் அவருடைய வஸ்திரத்தில் ஓரத்தைத் தொட்டாள். அது காரியத்தைச் செய்தது. அவ்வளவு தான். அவருடைய வஸ்திரத்தின் ஓரத்தைத் தொட்டாள். அப்பொழுது அவள் சொஸ்தமாக்கப்பட்டாள். இப்பொழுது, உன் முழு இருதயத்தோடும் விசுவாசித்துக் கொண்டிருக்கின்ற அங்கே உள்ள நீங்கள், சரியாக இதை உங்கள் முழு இருதயதோடும் விசுவாசித்துக் கொண்டிருக்கின்ற நீங்கள் இப்பொழுது, “கர்த்தராகிய இயேசுவே, இதை என் முழு இருதயத்துடன் விசுவாசிக்கின்றேன், நான் உம்மை ஏற்றுக் கொண்டு அதை விசுவாசிக்கப்போகிறேன். சகோதரன் பிரன்ஹாமுக்கு என்னைத் தெரியாது என்றும் என்னைக் குறித்து எதுவுமே தெரியாது என்று எனக்குத் தெரியும். ஆகவே, நீர் தாமே என்னை உம்முடைய வஸ்திரத்தை தொட மாத்திரம் அனுமதிப்பீரானால்!” என்று மாத்திரம் கூறுங்கள். இப்பொழுது வேதாகமம் கூறுவது...... இப்பொழுது, ஊழியக்காரர்கள் இதைக் குறித்து சாட்சி கொடுப்பார்கள். “இயேசு சரியாக இப்பொழுது நம்முடைய பலவீனங்களைக் குறித்து பரிதபிக்கக்கூடிய பிரதான ஆசாரியராக இருக்கின்றார்” என்பதாக வேதாகமம் கூறுகின்றது. அது உண்மை தானே? [ஊழியக்காரர்கள் “ஆமென்” என்று கூறுகின்றனர் - ஆசி.] “நம்முடைய பெலவீனங்களுக்காக பரிதபிக்கக்கூடிய பிரதான ஆசாரியர்.” சரியாக இப்பொழுது அவ்விதமாகவே தான் இருக்கின்றார். 122சரி, அப்படியானால், நம்முடைய பெலவீனங்களுக்காக தொடப்படக்கூடிய பிரதான ஆசாரியராக அவர் இருப்பா ரானால், அவர் தொடப்பட்டால் எப்படியாக அந்த பிரதான ஆசாரியரானவர் கிரியை செய்வார்? அப்பொழுது முன்பு இருந்த அந்த அதே இயேசுவாக இப்பொழுதும் அவர் இருப்பாரென்றால் அதே விதமாகத்தான் கிரியை நடப்பிப்பார். அவர் தம்முடைய வழிகளை மாற்றிக்கொள்ள முடியாது, அவரால் முடியாது. அங்கே அவர், “ஆம், அவர்கள் என்னை விசுவாசித்த தினால் அவர்களை இரட்சித்தேன், ஆனால் இன்றைக்கோ அவர்கள் நிறைய பணம் வைத்திருப்பதனால் நான் - நான் - நான் அவர்களை இரட்சிக்கப்போகிறேன்” கூறியிருப்பாரானால், அப்படியாக அவரால் செய்யவே முடியாது. அவர் தம்முடைய முதல் பழக்கநடைக்கையில் தான் எப்பொழுதுமே தரித்திருக்க வேண்டியவராக இருக்கின்றார். பாரு'கள்? தேவன் ஒரு தீர்மானத்தைச் செய்வாரானால் அது பரிபூரணமானதாகும். அது இனிமேலுமாக ஒருபோதும் மாற்றப்படவே முடியாது. தேவன் தம்முடைய திட்டத்தை மாற்றுவது கிடையாது, பாருங்கள். ஆகவே அவர் தாமே நம்முடைய பலவீனங்களுக்காக தொடப்படக்கூடிய பிரதான ஆசாரியராக இருந்து, நீங்கள் உங்களுடைய விசுவாசத்தைக் கொண்டு அவரை தொட்டிருப்பீர்களானால். 123இப்பொழுது, என்னுடைய மற்றும் உங்களுடைய கைகளைத் தவிர அவருக்கு பூமியில் எந்த ஒரு கையும் இல்லை . அது சரியா? [சபையார் “ஆமென்” என்கின்றனர் - ஆசி.] “நானே திராட்சைச் செடி, நீங்கள் கொடிகள்.'' இப்பொழுது திராட்சைச் செடியில் (Vine) கனிகள் இருக்காது. அது கொடுக்குமா? கொடிகளில் (branches) தான் கனிகள் வரும். ஆகவே செடியானது (Vine) கொடியை (branch) புதுவலுப்பெறச் செய்யும், ஆனால் நீங்கள் கொடியை பார்க்கின்றீர்கள். செடியானது காணப்படத்தக்க விதத்தில் செய்யப்படவில்லை; பாருங்கள், அவர் மகிமையில் இருக்கின்றார். அவர்தான் அந்த பரித்த ஆவி. இப்பொழுது, அவர் கனிகளை தருவதில்லை, ஆனால் அவர் உங்களையும் என்னையும் புதுவலு பெறும் படிக்குச் செய்து அதினாலே நான் ஒருவரையொருவர் புரிந்து கொள்ளும்படிக்கும், நாம் செய்யும்படிக்கு அனுப்பப் பட்டுள்ள அந்த கட்டளையை உறுதிப்படுத்தவும் சத்தங்களின் மூலமாக, நம் மூலமாக அவர்பேசி, நம்முடைய கிரியைகளைச் செய்கின்றார். இப்பொழுது உங்களால் அதை புரிந்து கொள்ள முடிகின்றதா, எல்லாராலும் புரிந்து கொள்ள முடிகின்றதா? [”ஆமென்]. 124இப்பொழுது நீங்கள் ஜெபியுங்கள், “கர்த்தராகிய இயேசுவே, நான் இதை என்னுடைய முழு இருதயத்தோடும் விசுவாசிக்கப்போகிறேன். நான் - நான் - நான் எனக்குள்ளே இருக்கின்ற எல்லாவற்றையும் கொண்டு அதை உண்மையாகவே விசுவாசிக்கப்போகிறேன். நீர்தாமே என்னை சொஸ்தமாக்கப்போகிறீர் என்று நான் உண்மையாகவே விசுவாசிக்கப்போகிறேன். ஆகவே நான் என் முழு இருதயதோடும், நீர் என்னை சுகமாக்கப் போகிறீர் என்று நம்பிக்கை வைத்து, உம்முடைய வஸ்திரத்தின் ஓரத்தைத் தொட முயற்சிக்கப்போகிறேன்” என்று நீங்கள் கூறுங்கள். இப்பொழுது, நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்கள், அல்லது ஒரு அருமையானவருக்காகச் செய்கிறீர்கள். இப்பொழுது, நான் உங்களிடமாக ஒன்றைக் கேட்கப் போகிறேன். அதனுடனே ...... இப்பொழுது, நான் பெந்தெகொஸ்தேயினனாவேன் என்று உங்களுக்குத் தெரியும். நான் - நான் சத்தமிடுவதிலும், கர்த்தரை ஸ்தோத்தரிப்பதிலும் விசுவாசம் கொண்டிருக்கிறேன். ஆனால் இதை நீங்கள் செய்ய வேண்டுமென்று நான் உங்களிடமாக கேட்டுக்கொள்ளப் போகிறேன். இப்பொழுது, நான் ஜெபத்தில் அணுகுகையில் நீங்கள் கூடுமானவரைக்கும் மிகவும் பயபக்தியுடன் இருக்க வேண்டும். இப்பொழுது உங்களை சற்று மறைத்துக் கொள்ளுங்கள். உங்களுடைய சந்தேகங்கள் எல்லாவற்றையும் புறம்பே தள்ளிவிட்டு, “ இதோ, கர்த்தாவே, நீர் எனக்கு உதவி செய்யும்” என்று மாத்திரம் கூறுங்கள். நீங்கள் அதை விசுவாசித்தால் தேவன் அதைச் செய்வார். 125இப்பொழுது, இதோ, இங்கே ஒரு பெண் நிற்கின்றாள். இதற்கு முன்னர் என் வாழ்க்கையில் இவளை நான் ஒருபோதும் பார்த்ததேயில்லை. இப்பொழுது, இதன் பேரில் யார் இருந்தாலும் சரி, சில சமயங்களில் நான் என்ன கூறுகிறேன் என்று எனக்குத் தெரியாது; அது என்னைத் தொடுமானால், அது ஒரு தரிசனமாகும். இப்பொழுது நீங்கள் மாத்திரம் ...... நான் பேசுவது உங்களுக்குக் கேட்கிறதா? சரி. இப்பொழுது மிகவும் பயபக்தியுடன் இருங்கள். இப்பொழுது, ஒரு பெண் இங்கே நிற்கின்றாள். இதோ, இங்கே ஒரு அழகான வேதாகம சம்பவ காட்சியின் நிழலானது இருக்கின்றது. நாங்கள் ஒருவருக்கொருவர் அறிமுகம் இல்லாத அந்நியர் ஆவோம். நீங்கள் யார் என்று எனக்குத் தெரியாது. இப்பொழுது, நான் சகோதரன் பிரன்ஹாம் என்று அறிந்தவராக என்னை தெரிந்து வைத்திருப்பீர்கள். ஆனால் எந்த ஒரு விதத்திலும் உங்களை எனக்குத் தெரியாது. 126இப்பொழுது இந்த காட்சியானது பரிசுத்த யோவான் 4-ல் இருந்த விதமாக உள்ளது. இயேசு தாம் அதற்கு முன்னர் கண்டிராத அல்லது அவர் யார் என்று கூட அறிந்திராத ஒரு ஸ்திரீயைச் சந்தித்தார். அவர் ஒரு யூதன் என்று மாத்தரமே அறிந்திருந்தான். அவ்வளவு தான் அவளுக்குத் தெரியும். ஆகவே அப்பொழுது இயேசு இந்த ஸ்திரீயிடமாக சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தார். அவர் என்ன செய்து கொண்டிருந்தார்? அவர் அவளுடைய ஆவியுடன் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டிருந்தார். புரிகின்றதா? “அவர் சமாரியா நாட்டின் வழியாய்ப் போக வேண்டியதாயிருந்தது. அவர் சமாரியா வழியாய் போனார். இந்த ஸ்திரீயை அவர் சந்தித்தார்.” ஏன்? பிதாவானவர் அவரை சமாரியாவிற்கு செல்லும்படிக்கு வழி நடத்தினார். “சமாரியாவிற்குச் செல்.” என்ன செய்ய வேண்டுமென்று அவருக்குத் தெரியாதிருந்தது. அப்பொழுது அந்த ஸ்திரீ வெளியே வந்தாள். 'ஒருக்கால் இது தான் பிதாவிற்கு தேவையாயுள்ளது போலும் “ என்று அவர் நினைத்தார். ஏனென்றால், அவர் தாமே.. 127சப்பாணியான அந்த மனிதனை சுகப்படுத்தின பிறகு ...... சப்பாணி அல்ல, அவனுக்கு வளர்ச்சி குன்றுகின்ற ஒரு நோயானது இருந்தது என்று நான் யூகிக்கின்றேன். அதற்கு அடுத்த அதிகாரமான, பரிசுத்த யோவான் 5ல், இருக்கிறது என்று நான் நம்புகிறேன். அவர் பெதஸ்தா குளத்தின் வழியாகச் சென்றார். அங்கே அநேக வருடங்களாக சப்பாணியாக, ஒரு வியாதியைக் கொண்டிருந்த ஒரு மனிதன் அங்கே, படுத்துக் கிடந்தான். இப்பொழுது, அவனால் நடக்க முடிந்தது. ஆகவே ஒரு தேவ தூதன் வந்து அந்த தண்ணீ ரைக் கலக்குவான். நான் எதை பேசுகிறேன் என்பதை சகோதரனாகிய நீங்கள் அறிவீர்கள். அப்பொழுது இயேசு அவ்வழியாக வந்து கூறினார். அந்த குளத்திற்கு செல்வதைக் குறித்து அவன் கூறினான். அவன் இவ்விதமாகக் கூறினான். “எனக்கு உதவி செய்ய யாருமே இல்லை. என்னை விட சற்று மேம்பட்ட நிலையில் உள்ளவன் யாராவது இருக்கின்றான். நான் குளத்திற்கு செல்வதற்குள் எனக்கு முந்தி இறங்கிவிடுகிறான் என்றான். 128அவர் “உன் படுக்கையை எடுத்துக்கொண்டு உன் வீட்டிற்குள்ளாகச் செல்'' என்று கூறினார். உடனே அந்த மனுஷன் தன் படுக்கையை எடுத்துக்கொண்டு புறப்பட்டுச் சென்றான். இப்பொழுது, அங்கே இருந்த ஆயிரக்கணக்கான, திரளான மக்களில் வேறெ எந்த ஒருவரையுமே சுகமாக்க வில்லை. ஏன் அவர் அதைச் செய்யவில்லை? ஜனக் கூட்டத் தாருக்கும், ஊழியக்காரனாகிய நமக்கும் ஒன்றிருக்கின்றது. மனதுருக்கம் நிறைந்த ஒரு தேவன். அது சரி தானே? முடவர், குருடர், சப்பாணிகள், சூம்பின உறுப்புடையவர்கள் மற்றும் எல்லாவிதமான காரியத்தைக் கொண்ட அநேகர் அங்கே இருந்தனரல்லவா? சகோதரரே, வேதாகமம் அதை கூறுகிறதல்லவா? [ஊழியக்காரர் “ஆமென்” என்று கூறுகின்றனர் - ஆசி.) ஆனால் நேராக அவர் ஒரு வியாதியைக் கொண்டிருந்த ஒரு மனிதனிடமாக சென்றார். அவன் குருடன் அல்ல. அவனால் நடக்க முடிந்தது. ஒருக்கால் அவனுக்கு சிறுநீர்ப்பையை சுற்றி இருக்கும் பிராஸ்டேட் சுரப்பி கோளாறு இருந்திருக்கும். அவனுக்கு முழு வளர்ச்சி பெறாத காசநோய் இருந்திருக்கும். அது அவனை கொன்று போடும் அளவிற்கு இல்லை. அவன் அதை இருபத்தெட்டு ஆண்டுகளாக தனக்குள்ளாக் கொண்டிருந்தான், ஆகவே அது அவனை கொல்லும்படியான ஒன்றாக இல்லை, அப்பொழுது அவர் அந்த மனிதனிமாகச் சென்றார், என்ன? அப்பொழுது அவர் சுகப்படுத்திவிட்டு திரும்பி நடந்து சென்றுவிட்டார். 129இன்றிரவு அவர் டெம்பிக்கு வந்த அதைச் செய்தா ரென்றால் எப்படியாக இருக்கும்? சரியாக அந்த இடத்திலே அவரை அவர்கள் குற்றங்கூறுவார்கள். சகோதரரே, அது சரியல்லவா? (ஊழியக்காரர் “ஆமென்” என்று கூறுகின்றனர் - ஆசி.] அவர்கள் அவரிடமாக குறை காணுவார்கள். ஆனால், நினைவில் கொள்ளுங்கள். இயேசு அந்த மனிதனை அறிந்திருந்தார், இவ்வளவு காலமாக அவன் அந்நிலையில் இருந்தான் என்பதையும் அறிந்திருந்தார். அதைத் தானே அவர் கூறினாரல்லவா? (ஆமென்] இப்பொழுது, யூதர்கள் அந்த மனிதனைக் கண்டனர், தன்னை சொஸ்தப்படுத்தினது யார் என்று அவன் அவர்களிடமாகக் கூறினான். அவர்கள் இயேசுவைக் கண்டு அவரைக் கேள்வி கேட்டார்கள். இன்றிரவும் அவர்கள் அவரை கேள்வி கேட்பார்கள் என்று நினைக்கிறீர்களா? நிச்சயமாக. அவர் என்ன கூறினார்? “மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்: பிதாவானவர் செய்யக் குமாரன் காண்கிறதெதுவோ அதையேயன்றி, வேறொன் றையும் தாமாய்ச் செய்யமாட்டார்; அவர் எவைகளைச் செய்கிறாரோ, அவைகளைக் குமாரனும் அந்தப்படியே செய்கிறார்.” அது சரியல்லவா? அப்படியானால் தம்முடைய சொந்த வார்த்தையின்படியே, என்ன செய்ய வேண்டும் என்று தேவன் தரிசனத்தில் அவருக்குக் காண்பிக்கின்றாரோ அதைத் தவிர வேறு எதையுமே அவர் செய்யவில்லை . 130இன்றிரவு நம்முடைய பிரசங்கத்தில் எலியாவைக் குறித்து பேசினது நினைவிருக்கிறதா? ''உம்முடைய கட்டளையின் படியே இவைகளை எல்லாம் நான் செய்தேன்“ எந்த ஒரு கர்த்தருடைய தீர்க்கதரிசியும் கர்த்தர் தன்னை நடத்துகிற விதமாகத்தான் போவான். இப்பொழுது அதை மாதிரியாக வைத்துப் பார்ப்போமாக. இப்பொழுது கிறிஸ்து தான் இங்கே இருக்கின்ற பரிசுத்த ஆவியாகும். இப்பொழுது, நான் அர்சோனாவிற்கு வர வேண்டும் என்று உணர்த்தப்பட்டு வழிநடத்தப்பட்டேன் என நான் நம்புகிறேன். அவர் சமாரியா வழியாய்ப் போக வேண்டுமென்று வழி நடத்தப்பட்டதை இயேசு உணர்ந்தார். இன்றிரவு டெம்பியில் சுகமளிக்கும் ஆராதனையை நடத்த நான் வழி நடத்தப்பட்டதை உணர்ந்தேன், இதற்கு முன்னர் இங்கே அதைப்போன்ற ஒன்றை இங்கே நடத்தவில்லை. அது ஏன் என்று எனக்குத் தெரியவில்லை. 131சரி, இங்கே முதல் நபராக நீங்கள் இருக்கின்றீர்கள். அதோ, சரியாக மறுபடியுமாக பரிசுத்த யோவான் 4 உங்களை எனக்குத் தெரியாது. என்னையும் உங்களுக்குத் தெரியாது. ஒரு காரியம் கூட எனக்குத் தெரியாது. நீங்கள் ஒரு பாவியாக இருக்கலாம். ஒரு மாய்மாலக்காரியாகவும் இருக்கலாம். நீங்கள் விபச்சாரத்தில் இருக்கலாம், தேவபக்தியுள்ள பரிசுத்தவாட்டி யாகவும் இருக்கலாம். நீங்கள் வியாதிப்பட்டவராயிருக்கலாம். யாராவது ஒருவருக்காகவும் இங்கே நீங்கள் நின்று கொண்டிருக்கலாம். உங்களுக்கு பண பிரச்சனைகள் இருக்கலாம். உங்களுக்கு என்ன பிரச்சனை என்று எனக்குத் தெரியாது. உங்களைக் குறித்து ஒன்றுமே எனக்குத் தெரியாது. இப்பொழுது, அது உண்மை , எனக்குத் தெரியாது. இப்பொழுது, நான் உங்களை அறியாத அந்நியன் என்றால், நாம் முன்பின் அறியாதவர்கள் என்றால் ..... அது - அது உண்மை என்றால், நாம் ஒருவரையொருவர் அறியாதவர்கள் என்றால், யாராவது சில அவிசுவாசிகள் அங்கே உட்கார்ந்திருக்கலாம். அதற்காக உங்கள் கரத்தை உயர்த்துங்கள். பாருங்கள்? இப்பொழுது, பரிசுத்த ஆவி தாமே ... அவளுடைய ஆவியை தொடர்பு கொள்வதால். 132அப்பொழுது அவர்கள் எப்படியாக இருந்தனரோ அதே போல இப்பொழுது நாம் இருவரும் இங்கே ஒரு மனிதனும் பெண்ணுமாக நின்று கொண்டிருக்கின்றோம். அப்பொழுது இயேசு அவளுடைய பிரச்சனை என்ன என்று அறிந்து கொள்ளும் வரைக்குமாக அவளுடனே பேசிக்கொண்டிருந் தார். அது சரி தானே? இப்பொழுது, அது உண்மை என்று அறிந்திருக்கின்றவர்கள் எல்லோரும் “ஆமென்'' என்று கூறுங்கள். [சபையார் ”ஆமென்“ என்று கூறுகின்றனர் - ஆசி.) அவளுடைய பிரச்சனை என்ன என்று அவர் கண்டார். அவளுடைய பிரச்சனை என்னவாயிருந்தது என்று அவளிட மாகக் கூறினார். 133அப்பொழுது அவள், “ஆண்டவரே நீர் ஒரு தீர்க்கதரிசியாக இருக்க வேண்டும்” என்றாள். பாருங்கள். அப்பொழுது அவர்களிடமாக சுமார் நானூறு வருடங்களாக தீர்க்கதரிசிகள் இல்லாதிருந்தார்கள். அவள் “நீர் ஒரு தீர்க்கதரிசியாக இருக்க வேண்டும். மேசியா வருகையில் இது தான் மேசியாவின் அடையாளமாக இருக்கும் என்று எங்களுக்குத் தெரியும். அவர் நமக்கு எல்லாவற்றையும் அறிவிப்பார்” என்றாள். அது சரிதானே? [சபையார் “ஆமென்' என்று கூறுகின்றனர் - ஆசி.] அப்பொழுது இயேசு, “உன்னுடனே பேசிக் கொண்டிருக்கின்ற நானே அவர்” என்று கூறினார். சரி, அப்பொழுது அது மேசியாவின் அடையாளமாக இருக்குமானால், மற்றும் அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராக இருக்கின்றார்; அவர் பரிசுத்த ஆவியின் ரூபத்தில் மாத்திரமே இருந்து, நான் என்னுடைய ஆவியை அவரிடமாக சரணடையச் செய்கையில் அவர் என்னுடைய மாம்சத்தை உபயோகித்து உங்கள் பிரச்சனை எங்கே உள்ளது என்று என்னிடமாகக் கூறுவாரானால் அப்பொழுது அது சரியானதா அல்லது இல்லையா என்று நீங்கள் அறிந்து கொள்வீர்கள். ஏனென்றால் நீங்கள் அதற்கு சாட்சியாக இருக்கிறீர்கள். இப்பொழுது நீங்கள்..... நான் ஒரு சுகமளிக்கும் ஆராதனையை நடத்திக் கொண்டிருக்கையில் நான் மேலே வந்து “வியாதியுள்ள சகோதரியே” தேவனுக்கு மகிமை!“ என்று கூறினால் “ஆம், எனக்கு காசநோய் உள்ளது.'' “தேவனுக்கு மகிமை!” என்று கூறி உங்கள் மீது கரங்களை வைத்து 'அல்லேலூயா! உங்கள் சுகத்தை பெற்றுக் கொள்ளுங்கள்.“ என்பேன். இப்பொழுது, சகோதரன் ஓரல் ராபர்ட்ஸ் மற்றும் அவர்களைப் போல அநேக அருமையான சகோதரர்கள், அவர் உண்மையான தேவ மனிதர். அது அவர்களுடைய வரம் ஆகும். அவர்கள் “ தேவனுக்கு மகிமை! நான் அதை விசுவாசிக்கிறேன். நீங்கள் விசுவாசிக்கிறீர்களா?” என்று கூறுவார்கள். “ஆம்.” 134நீங்கள் சுகமடைவீர்கள் என்று நான் விசுவாசிக்கின்றேன். நிச்சயமாக, நான் அதை விசுவாசிக்கின்றேன். ஆம் ஐயா, நான் விசுவாசிக்கின்றேன். நீங்கள் ஒரு கிறிஸ்தவரானால் அல்லது அதைப்போன்ற எந்த ஒன்றாக இருந்தாலும் உங்கள் மேய்ப்பனிடமாகச் செல்லுங்கள். நீங்கள் செல்வீர்கள் என்று நான் நம்புகிறேன். அது அதைச் செய்யும். ஆனால் அவர் வந்து நீங்கள் செய்துள்ள ஒன்றை உங்களிமாகக் கூறுவாரானால் எப்படியிருக்கும். சரி, அது உண்மையா அல்லது இல்லையா என்று உங்களுக்குத் தெரியும். ஆகவே நீங்கள் செய்திருந்த ஒரு காரியத்தை அவரால் கூறமுடியுமானால், என்ன செய்யப்படும் என்றும் அவர் கூறுவார் என்று நிச்சயமாக நீங்கள் விசுவாசிக்கலாம். அது சரி தானே? [சகோதரி “ஆமென்” என்று கூறுகிறார்கள் - ஆசி.) இப்பொழுது, அவர் அதை செய்வாரானால், அவர் தான் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கின்ற அந்த மேசியாவான இயேசு கிறிஸ்து என்பதற்கான ஒரு சாட்சியாக அது இருக்கும் என்று எத்தனை பேர் விசுவாசிக்கிறீர்கள்? [சபையார் “ஆமென்'' என்று கூறுகின்றனர் - ஆசி. ] இப்பொழுது, நினைவில் கொள்ளுங்கள். நானல்ல, இல்லை, நான் இந்த ஒலிபெருக்கி கருவியைப் போன்று சத்தமில்லாத ஒருவநனாகும். எனக்கு எப்படி தெரியும்? நான் ஏற்கெனவே உங்களிடமும், இவளிடமும் மற்றும் நாங்கள் இருவரும் ஒருவருக்கொருவர் இதற்கு முன்னர் பார்த்ததில்லையென்று அறிவித்துவிட்டேன். ஆகவே காரியத்தை செய்ய எங்கோ இருந்து வருகின்ற ஒரு வல்லமையினால் தான் முடியும். 135இப்பொழுது, அவர்களில் சிலர் செய்தது போல நீங்களும் விசுவாசித்து, “நீர் தேவனுடைய குமாரன், இஸ்ரவேலின் ராஜா” என்று கூறலாம். அல்லது, “ஹும். அவன் ஒரு பிசாசு. குறி சொல்பவன், ஏதோ ஒரு வகையான தீய ஆவி” என்று கூட நீங்கள் சொல்லலாம். அப்படியானால், அது உங்களுக்கும் தேவனுக்கும் இடையே உள்ள ஒன்றாகும். பாருங்கள்? இப்பொழுது, இப்பொழுது, அதை என்னவென்று மதிப்பிட்டு முடிவெடுப்பது உங்களைப் பொறுத்த ஒன்றாகும். பாருங்கள்? அதற்கான உங்களுடைய அணுகுமுறையைப் பொறுத்து தான் இருக்கின்றது. ஆனால், எனக்கோ , அது, என்னைப் பொறுத்தவரையில் இயேசு கிறிஸ்துவாகும், ஏனென்றால் அது அவருடைய வாக்குத்தத்தமாகும். ஆகவே இப்பொழுது .... அவர் ஒரு வாக்குத்தத்தத்தைச் செய்து எனக்கு கட்ளையளித்து ஊழியத்தில் அமர்த்தி இந்த அடையாளங்களை எனக்கு அளித்துள்ளார். அநேக வருடங்களுக்கு முன்னர், நான் இங்கே மக்களாகிய உங்களுடன் இருந்தபோது அவர் எனக்கு ஒரு அடையாளத்தைக் கொடுத்தார், நீங்கள் உங்கள் கரத்தை என் மீது வைப்பீர்களானால், எத்தனைப் பேருக்கு அது ஞாபகமிருக்கிறது? [சபையார் “ஆமென்” என்று கூறுகின்றனர் - ஆசி.] இன்னும் சில நிமிடங்களுக்கு நான் பேசுவேனானால் அப்பொழுது நான் அதை உங்களுக்குக் கூறுவேன். நான் என்னுடைய கட்டுப்பாட்டில் இருக்கமாட்டேன், ஆனால் உங்களிடமாக உங்களுக்கு ஒரு கட்டி உள்ளது அல்லது எதுவாயிருந்தாலும் சரி அதை கூறுவேன். அது பரிபூரணமாக இருக்கும். அது சரியா? [“ஆமென்”] 136மேலும் நான் உங்களிடமாக கூறினதாவது, அவர் என்ன கூறினாறென்றால், நான் பயபக்தியுடன் இருந்து, விசுவாசித்து, யார் பேரிலும் சார்ந்திராது நின்றால்,'' அதன் அர்த்தம், பணத்திற்காக போய் முட்டிக்கொண்டிருத்தல் என்பதே. என் வாழ்க்கையில் நான் ஒருபோதும் காணிக்கை எடுத்ததில்லை. பாருங்கள்? ஆகவே எல்லாகாரியமும், “அவருக்கு உண்மையாக வாழ்ந்தால், அது நடந்தேறும். மற்றொன்று, நான் மக்களின் இருதயத்தில் உள்ள இரகசியங்கள் நான் எடுத்துக் கூறுதல்.'' அவர்களால் அதை மறுதலிக்கவே முடியாது. பாருங்கள்? பாருங்கள்? நான் அதை தீர்க்கதரிசனமாக உரைத்தது உங்களுக்கு நினைவிருக்கிறதா? [சபையார் ”ஆமென்“ என்று கூறுகின்றனர் - ஆசி ] இப்பொழுது அது நிறைவேறியிருக்கின்றது. பாருங்கள்? 137இப்பொழுது, இப்பொழுது சற்று பயபக்தியுடனே இருங்கள். நீங்கள், “சகோதரன் பிரன்ஹாம், நீங்கள் எதற்காக காத்துக் கொண்டிருக்கிறீர்கள்?'' என்று கேட்கலாம். அவருக்காக. இந்த பெண்ணை எனக்குத் தெரியாது. அவர் என்னை அபிஷேகிக்கவில்லை என்றால் என்னால் அதைச் செய்ய முடியாது. அவ்வளவு தான். அந்த அக்கினியை, அக்கினிமயமான ஸ்தம்பமாகிய, கர்த்தருடைய தூதனின் புகைப்படத்தை எத்தனைப் பேர் பார்த்திருக்கிறீர்கள்? அவர்கள் அதன் புகைப்படத்தை எடுத்துள்ளனர். அப்புகைப்படம் இப்பொழுது உலக முழுவதுமாக சென்றிருக்கின்றது. அது வாஷிங்டன், டி.சி.யில் மதங்கள் கலயின் அறையில் மாட்டப்பட்டிருக்கின்றது. அது விஞ்ஞானப்பூர்வமாக நிரூபிக்கப்பட்ட ஒரே ஒரு இயற்கைக்கு மேம்பட்ட உயிருருவாகும். நான் உங்களிடம் ஒரு நிமிடத்திற்கு பேசப்போகிறேன், ஒரு தொடர்பு கொள்ளுதல் தான். 138ஆம், கர்த்தருக்கு ஸ்தோத்திரம். அஹ்ஹுஹ். இதோ அது இருக்கின்றது. அஹ்-ஹுஹ். எப்படியாக நான் அதை அறிந்து கொள்ளுகிறேன் என்று என்னால் உங்களிடமாக கூற முடியாது. ஆனால் சரியாக இப்பொழுது இங்கே அவர் இருக்கின்றார் என்பது எனக்குத் தெரியும். பாருங்கள்? அது சரி. அது சரியாக இப்பொழுது இங்கே இருக்கின்றது. கர்த்தருக்கு நன்றி யுண்டாவதாக. பாருங்கள்? இப்பொழுது இதோ இங்கே அது இருக்கின்றது. நீங்கள் ஒரு தோல் வியாதியைக் கொண்டிருக்கிறீர்கள். அதற்காக நான் ஜெபிக்க வேண்டும் என்று விரும்புகிறீர்கள். அது சரி என்றால், உங்கள் கரத்தை உயர்த்துங்கள். இப்பொழுது, அதை உங்கள் முழு இருதயத்தோடு விசுவாசிக் கின்றீர்களா? இப்பொழுது, நான் அதை யூகித்து கூறினேன் என்று ஒருக்கால் நீங்கள் கூறலாம். பாருங்கள்? இப்பொழுது சற்று கவனித்துப் பாருங்கள். அதை நாம் யூகித்தோமா என்று பார்க்கலாம். பாருங்கள்? மிக பயபக்தியுடனே இருங்கள். அவள் ஒரு அருமையான நபராகக் காணப்படுகிறாள். இப்பொழுது, சரியாக இப்பொழுது முதலாவதாக, நான் உங்களிடம் கூறியதை என்னால் உங்களிடமாகக் கூற முடியாது. இப்பொழுது, ஒரு நிமிடம் பொறுங்கள். ஆம், நீங்கள் கொண்டிருப்பது தோல் வியாதியாகும். சில காலமாக அந்த வியாதியுடையவர்களாக இருக்கிறீர்கள். அதற்காக ஜெபமும் ஏறெடுக்கப்பட்டது. பிறகு, உங்களுக்கு ஏதோ ஒரு கோளாறானது ஏற்பட்டு விட்டது. அது சரியே. அது ஒரு கார் விபத்தில் உண்டாயிற்று. அது கர்த்தர் உரைக்கிறதாவது. இப்பொழுது விசுவாசியுங்கள், நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்திலே இவளுடைய சுகத்தை நான் கேட்கின்றேன். ஆமென். விசுவாசித்துக் கொண்டே செல்லுங்கள். 139பரிசுத்த ஆவியின் சாயங்கால வெளிச்சம், அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? [சபையார்களிகூருகின்றனர் - ஆசி.) எப்படி இருக்கின்றீர்கள்? நீங்களும் நானும் ஒருவருக் கொருவர் முன்பின் அறிந்திராத அந்நியர் ஆவோம். முதல் முறையாக நாம் சந்திக்கின்றோம். என்னால் உங்களை சுகமாக்க முடியுமானால், நான் உங்களை சுகப்படுத்துவேன். நான் சுகமளிப்பவரின் பிரதிநிதியாக செயலாற்றுகிறேன், ஒரு நிலைத்தூதனாக (ambassador) கட்டளை அளிக்கப்பட்ட வனாக, அவருடைய உறுதிப்படுத்தலுக்காக ஜெபிப்பவன் ஆவேன். ஆனால் நீங்கள் எதற்காக இங்கே வந்துள்ளீர்கள் என்று தேவன் என்னிடமாகக் கூறுவாறானால், நான் அவருடைய தீர்க்கதரிசி அல்லது அவருடைய ஊழியக்காரன் என்று நீங்கள் என்னை விசுவாசிப்பீர்களா? அதை நீங்கள் விசுவாசிப்பீர்களா? ஒரு காரியம், உங்களைச் சுற்றிலும் நிழலாக அமைந் துள்ளது, அது எதைக் காண்பிக்கிறதென்றால் நீங்கள் ஒரு நரம்பு தளர்ச்சி நிலையில், மனநிலையில் குழப்பமடைந்து, நரம்பு தளர்ச்சியினால் வேதனைப்படுகிறீர்கள். சூரியன் மறைய ஆரம்பிக்கையில் மாலை வேளையில் நிலைமை மிகவும் மோசமடைகின்றது. அது சரியே. பிறகு, அடுத்த காரியம், உங்களுக்குள்ளாக இருக்கும் ஓர் கட்டியின் வளர்ச்சியால் நீங்கள் கவலையுற்றிருக்கிறீர்கள். அந்த கட்டி வளர்ச்சி எங்கே இருக்கின்றது என்று தேவனால் என்னிடமாகக் கூற முடியும் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? அது உங்கள் வலது மார்பகத்தில் உள்ளது. அப்படித்தானே? இப்பொழுது நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? இப்பொழுது அதை அறிந்திருக்கின்ற, அதைக் கூறிக்கொண்டிருக்கின்ற ஏதோ ஒன்று என் மேல் இருக்கின்றது. அது சரி தானே? அது தேவன் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? அப்பொழுது இயேசு, 'விசுவாசிக்கிறவர் களை இந்த அடையாளங்கள் பின் தொடரும் : வியாதியஸ்தர் மேல் தங்கள் கைகளை வைப்பார்கள், அவர்கள் சொஸ்த மாவார்கள்“ என்று கூறியுள்ளார். தேவன் உங்களை ஆசீர்வதிப் பாராக. ஆமென். [சபையார் களிகூருகின்றனர் - ஆசி.) விசுவாசம் கொள்ளுங்கள். சந்தேகப்படாதீர்கள். உங்களுக்கும் இருக்கும் எல்லாவற்றைக் கொண்டு அப்படியே விசுவாசிக்க மாத்திரம் செய்யுங்கள். 140கோடுகளாலான டையை அணிந்திருக்கும் அங்கே உள்ள அந்த சிறு நபர், கவலைப்படுவதை நிறுத்துங்கள். உங்கள் முழு இருதயதோடும் அதை விசுவாசிக்க மாத்திரம் செய்யுங்கள், அந்த மூட்டு வலியானது உங்களை விட்டு நீங்கப் போகின்றது. பாருங்கள்? நீங்கள் அங்கே உட்கார்ந்து அதற்காக காத்துக் கொண்டிருந்தீர்கள். நீங்கள் காத்துக்கொண்டிருந்தீர்கள் அல்லவா? உங்களிடமாக ஜெப அட்டை இல்லை. உங்களுக்கு அது வேண்டியதேயில்லை. அதை அப்படியே விசுவாசியுங்கள். பாருங்கள், அவருடைய விசுவாசம் ஏதோ ஒன்றைத் தொட்டது. அந்த மனிதன் என்னைத் தொடவில்லை என்று உங்களுக்குத் தெரியும். அவர் என்னிடமிருந்து இருபது அடி தூரத்தில் இருக்கின்றார். அது சரியா? ஆனால் அவர் யாரைத் தொட்டார்? அந்த பிரதான ஆசாரியரை. நான் இங்கே இந்த பெண்ணை நோக்கிப் பார்த்தேன். ஆனால் ஒரு மனிதன் இருந்தார். நான் உற்றுப்பார்த்தேன், அது ஒரு மனிதனாக இருந்தது, நான், “அப்படி இருக்காதே, அங்கே ..... அது ஒரு பெண்ணாயிற்றே” என்றேன். நான் பார்த்தேன், அங்கே ஒரு மனிதன் இருந்தார். இங்கே தொங்கிக் கொண்டிருக்கின்ற ஒரு ஒளியை நான் கவனித்தேன். அது புறப்பட்டுச்சென்று அந்த மனிதனுக்கு மேலாக நின்றது. அவர் படுக்கையிலிருந்து அந்த விதத்தில் எழுந்திருக்க முயன்றுக் கொண்டிருப்பதை நான் கண்டேன். அது தான். பாருங்கள்? அதோ அந்த மனிதன் இருக்கின்றார். அந்த மனிதன் அத்தாட்சியாக இருக்கட்டும். அப்படித்தானே? நீங்கள் உட்கார்ந்து கொண்டு அதற்காக ஜெபித்துக் கொண்டிரு ந்தீர்கள். அது சரியா? இப்பொழுது உங்கள் முழு இருதயதோடு விசுவாசியுங்கள், நீங்கள் சுகமடைவீர்கள். 141ஆகவே, “உங்களால் விசுவாசிக்கக்கூடுமானால், யாவும் கைக்கூடும்.” விசுவாசத்தைக் கொண்டிருங்கள். இப்பொழுது மிக பயபக்தியுடன் இருங்கள். என்னை பொறுத்துக்கொள்ளுங்கள். கட்டடம் முழுவது மாக சென்று கொண்டிருந்த அந்த ஒளியை நான் கவனித்துக் கொண்டிருந்தேன். நான் - நான் அதைப் பார்த்துக் கொண்டேயிருந்தேன். பாருங்கள். இப்பொழுது நான் உங்களிடமாக ஒரு நிமிடம் பேச விரும்புகிறேன். எனக்கு நீங்கள் ஒரு அருமையான நபர் காணப்படுகிறீர்கள். நான் ஒருவருக்கொருவர் அந்நியரா யிருக்கின்றோம். (அந்த சகோதரி “ஆம், ஐயா என்று கூறுகிறார்கள் - ஆசி.) உங்கள் பிரச்சனைகள் என்ன என்று கர்த்தர் அறிந்திருக்கின்றார். அவர் என்னையும் அறிந்திருக் கின்றார். உங்களையும் அறிந்திருக்கின்றார். நாம் ஆண் மற்றும் பெண்ணுமாக இங்கே சந்தித்து நிற்கின்றோம், முதல் முறையாக சந்திக்கின்றோம். ஆவியைக் கொண்டவராக, நீங்கள் ஒரு கிறிஸ்தவன், மேலும் - மேலும் உங்கள் ஆவியுடனே இருக்னிற் அந்த அதிர்வை என்னால் உணர முடிகின்றது, உங்களுக்குத் தெரியும், அது அசைந்து கொண்டிருக்கின்றது. நீங்கள் அங்குமிங்குமாக இரவல் பயணம் செய்து (hitchhiker) தாவிக் கொண்டிருப்பவன் அல்ல. இதோ, நீங்கள் ஒரு கிறிஸ்தவளாவீர், ஆகவே இரவல் பயணம் செய்து தாவிக் கொண்டிருத்தல் என்பதை எந்த அர்த்தத்தில் கூறினேன் என்றால், ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு தாவுவது, என்பதை அறிந்து கொள்ளுங்கள். நீங்கள் மறுபடியும் பிறந்தவளாவீர். பாருங்கள், நீங்கள் ஒரு உண்மையான கிறிஸ்தவன் [”ஆமென்.“] உங்களுடைய வரவேற்கும் ஆவியை என்னால் உணர முடிகின்றது. அந்த ஆவியை பரிசுத்த ஆவியானவர் இங்கே வரவேற்கின்றார். ஏனென்றால் அது உறவின் முறையான ஆவியாகும். பாருங்கள்? நான் சகோதர சகோதரிகளாவோம். நீங்கள் இங்கே உங்களுக்காக வரவில்லை. [”இல்லை.“ நீங்கள் வேறு ஒருவருக்காக இங்கே நிற்கின்றீர்கள். (”ஆமாம்.“] உங்களுடைய நண்பர் ஒருவர் பிசாசின் அடக்குமுறையால் அவதியுறுகின்றார். [”ஆம்.“ நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? [”நான் அறிவேன்.“] அந்த கைகுட்டையை அவர்கள் மீது வையுங்கள், சந்தேகப்படாதீர்கள். [”நான் செய்வேன்.“ அது அவர்களை விட்டு சென்று விடும். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. தேவனில் விசுவாசம் கொள்ளுங்கள். உங்கள் முழு இருதயத்தோடும் விசுவாசிக்க மாத்திரம் செய்யுங்கள். பெண்ணே , நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்? நாம் ஒருவரையொருவர் அறிந்திராத அந்நியர் ஆவோம். 142இப்பொழுது, யாரோ ஒருவர் எங்கேயோ, தேவனே, அது எங்கே இருக்கின்றது? அங்கே ஜனக்கூட்டத்தில் எங்கோ இருக்கின்றது, யாரோ ஒருவர், ஏதோ ஒன்று சம்பவித்துள்ளது. ''சகோதரன் பிரன்ஹாம், அதை எப்படி நீங்கள் அறிந்து கொள்கிறீர்கள்?“ ஆம், அதை நான் அப்படியே அறிந்து கொள்கிறேன். பாருங்கள்? பாருங்கள்? அது எப்படியென்றால் உங்களிலிருந்து ஜீவனை அப்படியே இழுப்பது போலாகும், பாருங்கள். ஏதோ ஒன்று சம்பவித்துள்ளது. யாரோ ஒருவர் எங்கோ ஓரிடத்தில் சுகமாக்கப்பட்டார். அது எங்கே என்று எனக்குத் தெரியவில்லை . ஆனால் ஒருக்கால் அவர் அதை எனக்கு மறுபடியுமாகக் காண்பிக்கலாம். 143பெண்ணே , நாம் ஒருவருக்கொருவர் அந்நியராவோம். உங்களை எனக்குத் தெரியாது. ஆனால் தேவன் உங்களை அறிவார். நீங்கள் இங்கே ஒரு காரியத்திற்காக நிற்கின்றீர்கள், ஒருக்கால் வேறு யாரோ ஒருவருக்காக இருக்கலாம், ஒருக்கால் பணப்பிரச்சனையாக இருக்கலாம், குடும்பம் சார்ந்த ஒன்றிற்காக இருக்கலாம். அது என்னவாயிருந்தாலும் சரி, தேவனால் அதை எனக்குக் கூறமுடியும். நீங்கள் அதை விசுவாசிப்பீர்களா? அது உண்மை தானா என்று நீங்கள் அறிந்து கொள்வீர்கள். ஒரு வாலிப நபர் இங்கே வருவது போல இருக்கின்றது, ஒரு வாலிப நபருக்காக தரிசனம் வந்திருக் கின்றது. இப்பொழுது, நீங்கள் அதை உங்கள் முழு இருதயத்தோடும் விசுவாசியுங்கள். அப்பொழுது தேவன் அதை உங்களுக்கு அளிப்பார். பாருங்கள்? என்னால் அதை உங்களுக்கு கூற முடியுமானால், உங்களை எனக்குத் தெரியாது என்பதை நீங்கள் அறிவீர்கள், அது ஒரு இயற்கைக்கு மேம்பட்ட வல்லமையிடமிருந்து தான் அது வரவேண்டியதாக இருக்கின்றது. 144இன்றிரவு நானளித்த பிரசங்கத்தையும் நான் எதைக்குறித்து பேசினேன் என்பதையும் சற்று நினைவுகூறுவீர்களா? (சகோதரி “ஆம்” என்று கூறுகிறார்கள் - ஆசி.) இப்பொழுது, கவனியுங்கள். ஒருக்கால், தம்முடைய முதுகு புறமாக திரும்பின அந்த தூதன் செய்தது போல நானும் செய்வேனானால், இப்பொழுது, நீங்கள் இருக்கின்ற இடத்திலே நான் என் முதுகு புறமாக இந்த விதமாக திரும்பி நின்றால் எப்படியாக இருக்கும். பாருங்கள்? சரி. இப்பொழுது, நீங்கள் கர்த்தராகிய இயேசுவினிடமாக “ஓ தேவனே, நான் எதற்காக இங்கே இருக்கின்றேன் என்றும், அல்லது என்னைக் குறித்து சிலவற்றை சகோதரன் பிரன்ஹாமிற்கு வெளிப்படுத்தும்” என்று மாத்திரம் உங்கள் இருதயத்தில் கூறுங்கள். அவர் செய்கின்றாரா என்று பாருங்கள். 145ஆம், சரியாக இப்பொழுது இந்த பெண்னை என்னால் காணமுடிகின்றது. இவள் குடல் பிரச்சனையால் அவதியுறுகிறாள். அது சரியே, குடல்களில் சதை வளர்ச்சி உள்ளது. அது உண்மை , திருமதி.காத்தன், நீங்கள் அதை உங்கள் முழு இருதயத்தோடு அதை விசுவாசிப்பீர்களானால், நீங்கள் இப்பொழுது வீட்டிற்கு செல்லலாம், சுகமாக்கப்படுவீர்கள், நீங்கள் விசுவாசித்துக்கொண்டே உங்கள் வழியில் புறப்பட்டுச் செல்லுங்கள். அதை விசுவாசியுங்கள். நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? விசுவாசம் கொண்டிருங்கள். இந்த வேதாகமத்தை எழுதின அந்த அதே தேவனானவர் இன்றிரவு இந்த தாழ்மையான சிறு சபையில், இங்கே இந்த கூட்டத்தில் அசைவாடிக்கொண்டிருக்கின்றார் என்பதை நீங்கள் உணருகிறீர்களா? திருவாளரே (mister), நாமும் கூட ஒருவருக்கொருவர் அந்நியர் ஆவோம். எனக்கு உங்களைத் தெரியாது, என் வாழ்க்கையில் உங்களை நான் ஒருபோதும் பார்த்ததேயில்லை. நான் முற்றிலும் அந்நியர் ஆவோம். இப்பொழுது, மக்களே அது என்னை பலவீனப்டுத்துகின்றது. அது ஒரு .... 146அங்கே பின்னால் உட்கார்ந்திருக்கின்ற மலச்சிக்கல் உள்ள அந்த பெண், அங்கே பின்புறத்தில் இரண்டாவதாக உட்கார்ந்திருப்பவர். அங்கே உள்ள வரிசையில் ஓரத்தில் உட்கார்ந்திருக்கின்ற அந்தபெண். சற்று முன்னர் இங்கே மேலே இருந்த அந்த பெண் நீங்கள் தான். உங்கள் முழு இருதயத்தோடு நீங்கள் விசுவாசிப்பீர்களானால், அது உங்களை விட்டு நீங்கி விடும். ஒவ்வாமையுடன் இருக்கின்ற அந்த குழந்தையைக் குறித்து என்ன? தேவன் அதை சுகப்படுத்துவார் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? அதோ அங்கே நீங்கள் இருக்கிறீர்கள். மகிமை! பிசாசு அதை இழந்து போனான். அவன் இழந்து விட்டான். சகோதரியே, சகோதரனே, தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. தேவனில் விசுவாசம் கொள்ளுங்கள். அவ்வளவுதான் உங்களுக்கு தேவைப்படுகின்றது. அது அந்த குழந்தையை விட்டு நீங்கி விடும். மறக்க வேண்டாம். அவர்கள் எதைத் தொட்டனர்? தன்னுடைய குழந்தைக்காக அந்த பெண் எதைத் தொட்டாள்? அந்த மக்களை எனக்குத் தெரியாது. என் வாழ்க்கையில் நான் அவர்களை கண்டதேயில்லை. நாம் ஒருவருக்கொருவர் அந்நியர் என்றால், அங்கேயிருந்து உங்கள் கைகளை உயர்த்துங்கள், ஜனங்களே, அதோ அங்கே அது இருக்கின்றது. அந்த - அந்த பெண், உங்கள் கரத்தை உயர்த்துங்கள். அது சரியே. அவள் அங்கே நின்று கொண்டு அந்த குழநதைக்காக ஜெபித்துக்கொண்டிருந்தாள். அப்பொழுது பரிசுத்த ஆவி ஓரிடத்திலிருந்து அங்கே சென்று அசைவாடிக்கொண்டிருந்தது. அது எங்கே இருந்த இடத்தை நான் கண்டேன். அப்பொழுது அந்த சரீர நிலையில் இருந்த அந்த சிறு குழந்தையை நான் கண்டேன். அதோ அவள் அங்கே இருக்கிறாள். சகோதரியே, குழந்தை சுகமடையும், கவலைப்பட வேண்டாம். என்ன? இப்பொழுது அங்கே சுற்றிலும் இருக்கின்ற அது அந்த தத்ரூபமான ஒளியாகும். தேவன் பதிலளித்தார் என்று எனக்குத் தெரியும், பாருங்கள்? அது அந்த குழந்தையை விட்டு நீங்கிப்போகும். அது சுகமாக்கப்படப் போகின்றது என்று எனக்குத் தெரியும். ஆம். 147அது எல்லா இடத்திலிருந்தும் வந்து கொண்டிருக் கின்றது. இப்பொழுது ஜனக்கூட்டத்திலிருந்து வருகின்றது. அது, உங்களால் அதை அறிந்து கொள்ள முடியாது. அது எல்லா இடத்திலும் இருக்கின்றது. அதை சாட்சியாக மாத்திரம் கூறுங்கள். சிறிது நேரத்திற்கு முன்னர் நீங்கள் விசுவாசித்ததைக் காட்டிலும் இப்பொழுது இன்னும் அதிகமாக நீங்கள் விசுவாசிக்கிறீர்கள் அல்லவா? [சபையார் “ஆமென்” என்கின்றனர்- ஆசி.) நிச்சயமாக. நீங்கள் தாமே அதைக் காண... நீங்கள் அதை விசுவாசிக்க மாத்திரம் செய்திருப்பீர்களானால் அது உங்கள் ஒவ்வொருவருக்கும் நடக்கும் பாருங்கள் ? அதை அப்படியே விசுவாசியுங்கள். திருவாளரே, என்னை சற்று பொறுத்துக்கொள்ளுங்கள். நான் - நான் - நான் அப்படியாக ... நான் மாத்திரமே தனியாக இயங்கிக் கொண்டிருக்கவில்லை என்று உங்களுக்குத் தெரியும். நான் வெறுமனே ...... நான் மிகவுமாக பெலவீனமடைந்து விடுகிறேன். ஆகவே நான்...... இயேசு, ஒரு ஸ்திரீ அவருடைய வஸ்திரத்தைத் தொட்டாள், அப்பொழுது அவர் “என்னிலிருந்து வல்லமை புறப்பட்டதை அறிந்திருக்கிறேன்” என்று கூறினார், அது பெலம் ஆகும். தேவனுடைய குமாரனாகிய அவருக்கே அப்படி என்றால், கிருபையினால் இரட்சிக்கப்பட்ட பாவியாகிய என்னுடைய நிலையைக் குறித்து எப்படியாக இருக்கும்? 148இப்பொழுது, இதோ இந்த மனிதன் இருக்கின்றார். அது இந்த மனிதனுக்கு சம்பவிப்பதாக அப்படியானால் நீங்கள் எல்லோரும் விசுவாசிப்பீர்களா? [சபையார் “ஆமென்” என்கின்றனர் - ஆசி.) இந்த மனிதனை அறிந்திருப்பவர் யாராவது இருக்கிறீர்களா? இங்கே இருப்பவர்களில் யாருக்காவது இந்த மனிதன் யார் என்று தெரியுமா ? ஓ, ஆம் ஐயா, சரி. இப்பொழுது, உங்களுக்குத் தெரியும். அது சரியா அல்லது இல்லையா என்று நாம் பார்ப்போமாக. இந்த மனிதன் எனக்கு முற்றிலுமாக அந்நியர் ஆவார். என் வாழ்க்கையில் இவரை நான் கண்டதேயில்லை. நாம் ஒருவருக்கொருவர் முற்றிலுமாக அந்நியர் ஆவோம். ஆனால் நீங்கள் எதற்காக இங்கே இருக்கின்றீர்கள் என்றும், அல்லது உங்களுக்க என்ன தேவையாயுள்ளது என்றும் அல்லது உங்களைக் குறித்து நீங்கள் அறிந்துள்ள ஆனால் நான் ஒன்றுமே அறிந்திருக்காததை பரிசுத்த ஆவியானவர் எனக்கு வெளிப் படுத்துவாரானால், அப்படியானால் அது பரிசுத்த ஆவியா ராகத்தான் இருக்க முடியும் என்று அதை உங்களை உறுதியாக நம்பிக்கைக் கொள்ளும்படிக்குச் செய்யும். 149அது தாமே உங்கள் எல்லோரையுமே அது உறுதியாக நம்பிக்கைக் கொள்ளும்படிக்குச் செய்து, இங்கே இருக்கின்ற அந்த அதே பரிசுத்த ஆவி தான் இங்கேயும் கூட இருக்கிறதென்றும், நமக்குள்ளாக இருக்கிறதென்றும் அறிந்து கொள்ளும்படிக்குச் செய்யுமா? உங்களுக்கு இருக்கின்ற பிரச்சனை மலக்குடலின் அடிப்பாகப் பிரச்சனையாகும். அது ஒரு கட்டியாகும். (அந்த சகோதரன் “ஆம்” என்று கூறுகின்றார் - ஆசி.) அது உங்கள் ஆசனவாயில் இருக்கின்றது. அதற்காக அங்கே உள்ள யாரோ ஒருவர் ஜெபம் செய்து கொண்டிருக்கிறார்கள். அங்கே இருந்து ஜெபிப்பது உங்கள் மனைவியாகும். [“அது சரியே.”] அவர்களுக்கு எப்பொழுதும் இடைவிடாத தலைவலி இருக்கின்றது. [“அது சரியே.”] அது சரி. உங்கள் குழந்தையும் கூட அங்கே இருக்கின்றது. அது சரி தான். அந்த குழந்தைக்கு உள்ள பிரச்சனை என்ன என்று தேவன் என்னிடமாகக் கூறுவார் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? [“ஆம்.” அது இரத்தம் சார்ந்த ஒரு நிலையாகும். [“ஆம்.”] நீங்கள் யார் என்று தேவனால் என்னிடமாகக் கூற முடியும் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? [“ஆம்.” நீங்கள் என்னை விசுவாசிப் பீர்களா? நீங்கள் ஒரு ஊழியக்காரர். [“ஆம்”] நீங்கள் சங்கை. திரு. மான்[“ஆம்”] சுகமாகுங்கள். வீடு செல்லுங்கள். 150உங்கள் முழு இருதயத்தோடு நீங்கள் விசுவாசிக் கிறீர்களா? [சபையார் களிகூருகின்றனர் - ஆசி.] தேவனுக்கு துதியை மாத்திரம் ஏறெடுங்கள். அங்கே உட்கார்ந்திருக்கின்ற பெண்ணே, உங்கள் முழு இருதய தோடும் நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? சென்று உங்கள் இரவு ஆகாரத்தை சாப்பிடுங்கள். உங்கள் வயிற்றுக் கோளாறு உங்களை விட்டு நீங்கி விடும், நீங்கள் சும்மாயிருப்பீர்கள். சகோதரியே, உங்கள் முதுகு கோளாறும் கூட உங்களை விட்டுச் சென்று விட்டது. ஆகவே நீங்கள் அறையைக் கடந்து சென்று, தேவன் உங்களை சுகமாக்கப்போகின்றார் என்று உங்கள் முழு இருதயத்தோடும் விசுவாசியுங்கள். நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? [சகோதரி “ஆம்” என்று கூறுகிறார்கள் - ஆசி.] புறப்பட்டுச் செல்லுங்கள். சத்தமிட்டு “கர்த்தருக்கு ஸ்தோத்திரம்!” என்று கூறுங்கள். சரி, உங்கள் முழு இருதயத்தோடும் செய்யுங்கள். 151நரம்புத்தளர்ச்சியானது மிகவும் மோசமான ஒரு காரியமாகும், ஆனால் தேவனால் அதை சுகமாக்க முடியும். (சகோதரி “ஆம்” என்று கூறுகிறார்கள் - ஆசி.] நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? களிகூர்ந்து கொண்டே 'கர்த்தாவே உமக்கு நன்றி' என்று கூறிக்கொண்டே செல்லுங்கள். தேவன் அதை சுகமாக்குகின்றார். உங்கள் வயிறு உங்களைத் தொல்லைப்படுத்துகிறதா? சென்று சாப்பிடுங்கள். இயேசு கிறிஸ்து உங்களை சுகமாக்குகின்றார். விசுவாசம் கொள்ளுங்கள். உங்கள் முதுகு உங்களுக்கு தொல்லை கொடுத்துக்கொண்டிருக்கின்றது. அப்படித்தானே? [அந்த நபர் “ஆம்” என்கின்றார் - ஆசி.) விசுவாசித்துச் செல்லுங்கள். இயேசு கிறிஸ்து உங்களை சுகமாக்குகின்றார். விசுவாசம் கொள்ளுங்கள். நரம்புத் தளர்ச்சியா? தேவன் உங்களை சுகப்படுத்துவார் என்று விசுவாசிக்கிறீர்களா? (அந்த நபர் “ஆம்” என்று கூறுகின்றார் - ஆசி.] செல்லுங்கள், இயேசுவின் நாமத்திலே சுகமாக்கப்படுங்கள். 152நான் என்ன கூற விழைகிறேன் என்று உங்களால் பார்க்க முடிகின்றதா? இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறாரல்லவா? [சபையார் “ஆமென்” என்று கூறி களிகூருகின்றனர் - ஆசி.] இப்பொழுது இயேசு “என்னை விசுவாசிக்கிறவன் நான் செய்கிற கிரியைகளைத்தானும் செய்வான்'' என்று கூறியுள்ளார். அது சரியல்லவா? [சபையார் ”ஆம்“ என்று கூறுகின்றனர் - ஆசி.) இப்பொழுது, ”விசுவாசிக்கிறவர்களை இந்த அடையளாங்கள் பின் தொடரும்“ என்று இயேசு கூறியுள்ளாரா? [”ஆமென்.) எத்தனை விசுவாசிகள் இங்கே இருக்கின்றனர்? [சபையார் களிகூருகின்றனர். சரி. எத்தனைப்போர் சுகமாக்கப்பட விரும்புகிறீர்கள்? உங்கள் கரங்களை உயர்த்துங்கள். பிறகு உங்கள் கரங்களை ஒருவர் மேல் ஒருவர் வையுங்கள். நீங்கள் விசுவாசிகள். அது சரியே, அவர் தம்முடைய வார்த்தையைக் காத்துக்கொள்கிறார். அதை நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? [சபையார் களிகூருகின்றனர் - ஆசி.) நீங்கள் அதை விசுவாசிப்பீர்களானால், இதற்கு முன்னர் நீங்கள் ஒருபோதும் கண்டிராத ஒன்று சம்பவிப்பதை காணப்போகிறீர்கள், நீங்கள் அதை விசுவாசிப்பீர்களானால். 153இப்பொழுது உங்கள் தலைகளை தாழ்த்துங்கள். உங்களுக்காக மாத்திரம் ஜெபிக்காதீர்கள். நீங்கள் யார் மீது கரத்தை வைத்திருக்கிறீர்களோ அந்த நபருக்காக ஜெபம் செய்யுங்கள். இப்பொழுது, உத்தமமாக ஜெபியுங்கள். உத்தமமாக விசுவாசியுங்கள். யாராவது ஒருவர் மேல் உங்கள் கரங்களை வைத்து ஜெபம் செய்யுங்கள். இப்பொழுது இங்கே நான் ஜெபிக்கப்போகின்றேன். பரலோகப் பிதாவே, கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலே நாங்கள் வருகின்றோம். நாங்கள் வருகின்றோம் ஏனென்றால் உம்முடைய வார்த்தையானது உறுதிப்படுத்தப் பட்டுள்ளது. கட்டளையானது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தேவனுடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்து தாமே பரிசுத்த ஆவியின் ரூபத்திலே நம்மிடையே இருக்கின்றார். ஓ தேவனே, இவர்கள் உம்முடைய ஜனங்கள் ஆவர். அவர்கள் அவதியுற்றுக் கொண்டிருக்கின்றனர். சாத்தான் அவர்களை கட்டிப் போட்டுள்ளான். நீர் இங்கே இருக்கின்றீர் என்பதை அவர்கள் அறிவார்கள். உம்முடைய பிரசன்னம் இங்கே இருக்கின்றது என்ற உறுதிப்பாடு, நேற்றும் இன்றும் என்றும் மாறாத வராயிருக்கிற இயேசு கிறிஸ்து. சாத்தானே, நீ யுத்தத்தில் தோற்றுப்போனாய். சாத்தானே, இயேசுவின் நாமத்தில், அவர்களிலிருந்து வெளியே வா. இந்த மக்களிடமிருந்து நீ வெளியே வரவும் இந்த ஜனக்கூட்டத் திலிருந்து வெளியே செல்லவும் நான் உனக்கு இயேசுவின் நாமத்திலே கட்டளையிடுகிறேன். அதினாலே அவர்கள் தாமே விடுதலையாக்கப்படுவார்களாக. நீங்கள் அதை விசுவாசிப்பீர்களானால், நீங்கள் எழுந்து நின்று தேவனுக்கு ஸ்தோத்திரத்தை ஏறெடுங்கள். அது தான் மூலக்காரியமாகும். அது தான். உங்கள் கரங்களை உயர்த்தி அவருக்கு ஸ்தோத்திரம் செலுத்துங்கள். உறுதிப்படுத்தப்பட்டது! அறிக்கையிடுங்கள். உங்கள் சுகமளித்தலானது வந்து விட்டது என்று விசுவாசியுங்கள். [சபையார் தொடர்ந்து ஜெபித்து களிகூர்ந்து கொண்டிருக்கின்றனர் - ஆசி.)